உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: ஒடிசா பா.ஜ.,வில் உட்கட்சி பூசல்!

டில்லி உஷ்ஷ்ஷ்: ஒடிசா பா.ஜ.,வில் உட்கட்சி பூசல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உட்கட்சி பூசல் காங்கிரசில் மட்டுமல்ல; பா.ஜ.,விலும் பரவி, கட்சி தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. ஒடிசா மாநில பா.ஜ.,வில் இந்த பூசல் துவங்கி விட்டது. பல ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின், பிஜு ஜனதா தளத்தை தோற்கடித்து, பா.ஜ., ஆட்சி அமைத்தது. 'ஒடிசாவின் முதல்வராக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்க வாய்ப்பு உள்ளது' என அப்போது சொல்லப்பட்டது; ஆனால், கட்சி தலைமையோ மோகன் சரண் மஜியை முதல்வராக்கியது.இப்போது ஒடிசா பா.ஜ.,வில் சலசலப்பு. 'தேர்தல் வாக்குறுதிகள் எதையும் மஜி சரியாக நிறைவேற்றவில்லை; அத்துடன், அமைச்சர் பதவிகள் காலியாக இருந்தும், யாரையும் அமைச்சராக நியமிக்கவில்லை' என, கட்சிக்குள் பல தலைவர்கள் வெறுத்துப் போயுள்ளனர்.ஆனால், பிரதமர் மோடி சமீபத்தில் முதல்வர் மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'மஜி தான் ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார்' என, அறிவித்தார்; ஆனாலும், கட்சிக்குள் பிரச்னை குறையவில்லை.எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், முதல்வர் மோகன் சரண் மஜியின் ஆதரவாளர்களும் குறைந்து கொண்டே வருகின்றனர். பலர், மத்திய கல்வி அமைச்சரும், ஒடிசாவின் முக்கிய தலைவருமான தர்மேந்திர பிரதானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். 'எத்தனை மாதங்களுக்கு மஜி முதல்வராக இருப்பார்' என, கட்சிக்குள்ளாகவே குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜன 12, 2025 19:33

என்னவோ பா.ஜ ஆளுங்க செவ்வாய் கிரகத்துலேருந்து வந்த உத்தமர்கள் மாதிரி. இந்தியா முழுக்க வேஸ்ட் ப்ராடக்ட் தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை