உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: வாயால் கெட்ட கெஜ்ரிவால்!

டில்லி உஷ்ஷ்ஷ்: வாயால் கெட்ட கெஜ்ரிவால்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, இம்மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் என, தேர்தல் பிரசாரம் சூடாகியுள்ளதோடு, சகட்டு மேனிக்கு ஒருவரை ஒருவர் வசைபாடி வருகின்றனர்.இதில் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரு மான, அரவிந்த் கெஜ்ரிவால் இஷ்டத்திற்கு பேசி வருகிறார். டில்லி மக்கள் குடிக்கும் குடிநீர் குறித்து இவர் கூறியது, இவருக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. 'டில்லிக்கு தேவையான குடிநீரை, பக்கத்து மாநிலமான ஹரியானா யமுனை நதி வழியாக தருகிறது. நதியில் விஷத்தை கலந்து, டில்லிக்கு அனுப்புகிறது ஹரியானா' என, சொல்லிவிட்டார் கெஜ்ரிவால். காரணம், ஹரியானாவில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y6e8tedp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரம், தற்போது தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இன்னொரு பக்கம் கெஜ்ரிவாலுக்கு எதிராக, ஹரியானா அரசு, சோனிபட் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளது. மக்கள் மத்தியில் கலவரத்தை உண்டாக்கி விட்டார் கெஜ்ரிவால் என, மிகவும் கடுமையான சட்டங்களின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. கெஜ்ரிவால், 17ம் தேதி ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.'தேர்தல் முடிந்தவுடன், இந்த வழக்கு பூதாகரமாக உருவெடுக்க உள்ளது; இதனால், பெரும் பிரச்னையில் சிக்கி விட்டார் கெஜ்ரிவால்' என்கின்றனர் ஆம் ஆத்மி கட்சியினர்.இதுவரை, சிறுபான்மையினர் ஓட்டுகளை அள்ளி வந்தார் கெஜ்ரிவால். ஆனால், இப்போது, காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்து வருகிறது; இதனால், 'சிறுபான்மையினர் ஓட்டுகள் அங்கு போய்விடுமோ என்கிற அச்சத்தில் கண்டதையும் பேசி வருகிறார். இதுவே அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை' என்கின்றனர் காங்கிரசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SP
பிப் 02, 2025 21:02

இந்த தேர்தலோடு இவர் அரசியல் வாழ்க்கையை முடித்து வைக்க வேண்டும். டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு தனியாக தேர்தல் தேவையில்லை என்று சட்டம் இயற்ற வேண்டும்.


ஆரூர் ரங்
பிப் 02, 2025 11:48

கெஜரிவால் ஹரியானாவில் பிறந்தவர். அங்கிருந்து டெல்லிக்கு பாயும் யமுனை நதியில் மாநகர குப்பை சாக்கடை நீர் கலந்து மீண்டும் ஹரியானாவை நோக்கியே யமுனை செல்கிறது. பாதிப்பென்னவோ ஹரியானாவுக்குதான். சொந்த மாநிலத்துக்கு வேட்டு வைக்கும் கெஜ்ரி மூளையுள்ளவர்தானா?


Sridhar
பிப் 02, 2025 11:24

இவர் மற்றும் திருட்டு திராவிடம் லல்லு மம்தா சோனியா ஆகியோர் முற்றிலுமாக இந்திய அரசியலிலிருந்து அகற்றப்படவேண்டியவர்கள். ஆனால் நடக்காது. உலகமே நல்லதும் கேட்டதும் சேர்ந்த கலவைதானே


Rameshmoorthy
பிப் 02, 2025 10:49

Ex IRS officer is in a mess and he is known for polished and technically qualified fraudulent actions


SUBBU,MADURAI
பிப் 02, 2025 08:39

HUGE setback for Kejriwal. 8 AAP MLAs RESIGNS from the party 6 days before Delhi assembly polls Rajesh Rishi, Naresh Yadav, Bhavna Gaur, Rohit Mehraulia, BS Joon, Madan Lal, Pawan Sharma and Girish Soni RESIGNS. BJP ahead in NARRATIVE war game.


SUBBU,MADURAI
பிப் 02, 2025 08:33

BJP has launched a pinpoint attack on Arvind Kejriwal, exposing his failures while showcasing PM Modi true welfarism. Yamuna filth vs Sabarmati's transformation, Sheeshmahal luxury vs. BJPs honest governance, the contrast is clear.


சமீபத்திய செய்தி