உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: திருந்தவே மாட்டாரா?

டில்லி உஷ்ஷ்ஷ்: திருந்தவே மாட்டாரா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் கடுமையாக பிரசாரம் செய்தார் காங்., முன்னாள் தலைவர் ராகுல். எங்கு சென்றாலும், கையில் ஒரு சிறிய சட்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு, 'மோடி சட்டத்தை ஒழிக்கப் பார்க்கிறார்' என, பிரசாரம் செய்தார். இன்னொரு பக்கம், 'அதானியும், மோடியும் நண்பர்கள்; அதானியிடம் நாட்டை தாரை வார்த்து விட்டார் மோடி' எனவும் பிரசாரம் செய்தார் ராகுல்.ஆனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் படு தோல்வியடைந்தது காங்கிரஸ்; ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் வெற்றி. ஆனால், இதில் காங்கிரசை விட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிற்கு தான் அதிக பங்கு என்பது அனைவருக்கும் தெரியும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dmq0mdo1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்போது, பார்லிமென்டிலும் இதையே கடைப்பிடித்து வருகிறார் ராகுல். அதானி, சட்டம் இரண்டு விஷயங்களை வைத்து பார்லிமென்டை முடக்கியது காங்கிரஸ்; இது, எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை.பார்லிமென்டில் காங்., வெளிநடப்பு செய்தபோது, மற்ற எதிர்க்கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை. ஆனாலும், ராகுல் விடுவதாக இல்லை. பார்லிமென்ட் வளாகத்தில் மீண்டும் இதே போராட்டத்தை நடத்தி வருகிறார்.'இரண்டு மாநில தேர்தல்களில் இந்த பிரசாரத்தை செய்து, அடி வாங்கியும் ராகுல் திருந்தவே மாட்டாரா' என, கட்சிக்குள்ளாகவே சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.'எத்தனையோ விஷயங்கள் பார்லிமென்டில் விவாதிக்க இருக்கும்போது, அதானி விவகாரத்தை எத்தனை நாட்களுக்கு தான் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?' என, கூட்டணி கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Dominic
டிச 13, 2024 09:58

சரியான அரசியல்வாதி, ப.ஜெ. வின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு நிலை எடுக்கும் ஒரே ஆள், மனதிலே ப ஜ ஊக்கு பயம் வந்து அதிக நாட்கள் aagividdathu.


தேவதாஸ் புனே
டிச 08, 2024 15:46

இன்னுமா.... எதிர்பார்க்கிறீர்கள்...... ????? முழுதாக காங்கிரஸை ஒழிக்காமல் போகமாட்டார்


Narasimhan
டிச 08, 2024 14:18

மூளை இருந்தால்தானே புத்தி வருவதற்கு.


ராமகிருஷ்ணன்
டிச 08, 2024 14:17

ராவுலு திருந்தவே கூடாது. இவருடைய கோணங்கி சேஷ்டைகளால் தான் பி ஜே பி அபார வளர்ச்சி அடைகிறது. காங்கிரஸ் எல்லா மாநிலங்களிலும் செத்து வருகிறது. நல்லதே நடக்கும்.


krishna
டிச 08, 2024 13:42

INDHA DESA VIRODHA MAFIA MAINO CONGRESS KUMBAL THUDAITHU ERIYA PADA VENDUM.


enkeyem
டிச 08, 2024 12:13

ஜார்ஜ் சோரோசின் ஹோல்சேல் ஏஜென்ட்


enkeyem
டிச 08, 2024 12:11

காங்கிரஸ் கட்சியிலிருந்து இத்தாலிய மாபியா கும்பல் வெளியாறாமல் ஆடம் பிடிப்பது அவர்கள் கொள்ளையடித்து வைத்துள்ள சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்காகவே தவிர நாடு மக்களுக்கு நல்லது செய்ய இல்லை. இது தெரியாமல் இந்த திருட்டு காந்திகள் வகையறாக்களை முட்டுக்கொடுத்து தாங்குபவர்களும் திருட்டு பேர்வழிகள்


பேசும் தமிழன்
டிச 08, 2024 10:05

உண்மையான காந்தியின் கனவை நனவாக்க.... அது தான் கான், கிராஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு.. நனவாக்க பாடுபடும் போலி காந்தி கும்பலுக்கு நாட்டு மக்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறார்கள்.. குறிப்பாக நம்ம போலி காந்தி பப்பு.....கான் கிராஸ் கட்சியை அழிப்பதில் அவருக்கு தான் முக்கிய பங்கு.


பேசும் தமிழன்
டிச 08, 2024 10:02

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்... கான் கிராஸ் கட்சி ஆட்கள் விழித்து கொள்ள வேண்டும்.. இத்தாலி போலி காந்தி கும்பலை விரட்டி அடிக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 08, 2024 09:57

இவரையும், கட்சியையும் வளர்க்க யாராவது ரோசன சொன்னாக்கூட ஏத்துக்குற மனப்பக்குவம் இல்ல போலிருக்கு.. மெய்யாலுமே அந்த குடும்பத்துக்கே அரசியல் ஆசை இல்லதான் ... ஆனா அடிமைகள் படுத்தும் பாடு .....