உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: தனியார் மயமாகிறதா துார்தர்ஷன்?

டில்லி உஷ்ஷ்ஷ்: தனியார் மயமாகிறதா துார்தர்ஷன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு எப்போதுமே ஒரு விஷயம் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. மத்திய அரசு செய்யும் பல நல்ல விஷயங்கள், மக்களுக்கு உதவும் திட்டங்கள் ஆகியவற்றை, மக்களுக்கு மீடியா சரியாக எடுத்துச் செல்வதில்லை என்பது அவரது குறை. இதனால் துார்தர்ஷனில் செய்தித் துறையை முற்றிலுமாக மாற்றி அமைக்க முடிவெடுத்து, சுதிர் சவுத்ரி என்பவரை செய்தி துறைக்கு தலைவராக நியமித்துவிட்டார். இவர் பிரபல ஹிந்தி சேனலான, 'ஆஜ்தக்'கில் பணியாற்றியவர்.சுதிர், துார்தர்ஷனில் பல மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறார். ஹிந்தி மட்டுமல்லாமல், துார்தர்ஷனின் தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மாநில மொழி செய்திகளிலும் பெரும் மாற்றம் வர உள்ளதாம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sg1jwkch&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், திட்டங்கள், அவர்களது ஆலோசனைகள், மோடி அரசின் திட்டங்கள் மக்களுக்கு எப்படி உதவுகின்றன என, அரசு சார்பான பல செய்திகளை சுவாரஸ்யமாக தர சுதிர் திட்டமிட்டுள்ளார். இதைத் தவிர, தனியாக ஒரு நிகழ்ச்சியும் தயாரிக்க உள்ளாராம்.டாஸ்மாக் ஊழல் உட்பட எதிர்க்கட்சிகளின் ஊழல் பட்டியல், அது தொடர்பான செய்திகள், விவாதம் என, துார்தர்ஷன் இனி டல் அடிக்காமல் பரபரப்பாக தனியார் தொலைக்காட்சிகளுக்கு ஈடாக செயல்படப் போகிறதாம்.அடுத்த மூன்று மாதங்களில் இந்த மாறுதல்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது, துார்தர்ஷனை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தின் முதல் படியா இது என, டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பல்லவி
மார் 16, 2025 21:52

இது ஒன்றும் புதிதல்ல அவுங்க ஏதும் செய்வார்கள்


முருகன்
மார் 16, 2025 12:30

தூர்தர்ஷன் இனி மத்தியில் ஆளும் கட்சியின் பிரச்சார ஊடகமாக ஆக போகிறது மக்கள் வரிப்பணத்தில் இனி ஒரு கட்சியின் செய்தி மட்டும் வரும்


சிவம்
மார் 16, 2025 08:19

பிரதமரின் ஆதங்கம் மிகவும் நியாயமானது. அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அனைத்து டிவி சேனல்களில் கடமை. ஆகவே தூர்தர்ஷனின் முக்கிய நிகழ்ச்சிகளை அனைத்து சேனல்களும் ஒளிபரப்ப வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும்.


Kuma
மார் 16, 2025 06:33

தற்போது இருக்கும் தமிழக மீடியாக்கள் கேவலமாக செயல்படுகின்றன. மாற்றம் தேவை... 1000 கோடி டாஸ்மாக் ஊழல் பற்றி மீடியாக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது கேவலமாக உள்ளது..


nisar ahmad
மார் 16, 2025 02:10

மோடியையும் மோடி அரசையும் புகழ் பாடும் சேனலாக இனி தூர்தர்ஷன் மாறபோகிறது அவ்வளவுதான்.


V வைகுண்டேஸ்வரன்,Chennai
மார் 16, 2025 07:51

வந்தேறிகளுக்கு இங்கே என்ன வேலை nisar. இது தமிழர் திராவிட நாடு


ஈசன்
மார் 16, 2025 08:21

அப்போ சோனியா ராகுல் புகழை பாடச்சொல்வோமா ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை