உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., எம்.பி.,க்கள் வாட்ஸ்அப் குரூப் தகவல்: பா.ஜ.,வுக்கு பார்சல்

தி.மு.க., எம்.பி.,க்கள் வாட்ஸ்அப் குரூப் தகவல்: பா.ஜ.,வுக்கு பார்சல்

அனைத்து கட்சிகளும், 'வாட்ஸாப்' குழுக்கள் வைத்துள்ளன. கட்சிக்குள் கருத்து தெரிவிக்க இதைப் பயன்படுத்துகின்றனர். மேலும், கருத்து வேறுபாடுகளையும் இதில் தெரிவிக்கின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி வாட்ஸாப் குரூப்பிலிருந்த விபரங்கள், சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.திரிணமுல் எம்.பி., ஒருவர், மம்தாவை கிண்டலடிக்கும் கருத்துகளை வாட்ஸாப்பில் தெரிவித்திருந்தார். இதை, மற்றொரு திரிணமுல் எம்.பி., - பா.ஜ.,வைச் சேர்ந்த பிரமுகருக்கு அனுப்பி வைத்து விட்டார்.உடனே அந்த பா.ஜ., பிரமுகர் பத்திரிகைகளுக்கு இதை அனுப்ப, திரிணமுல் காங்கிரசில் நடக்கும் சம்பவங்கள் வெட்ட வெளிச்சமாகி விட்டன.இதையடுத்து சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தங்கள் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வாட்ஸாப் குரூப்பில் எந்தவிதமான தேவையில்லாத கருத்துகளையும் தெரிவிக்க வேண்டாம் என, அறிவுறுத்தி உள்ளன.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கும் வாட்ஸாப் குரூப் உள்ளது. அனைத்து எம்.பி.,க்களும் சபையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உத்தரவுகள் இதில் வருகின்றன. இந்த உத்தரவுகளை கனிமொழிதான் அனுப்புகிறார்.டி.ஆர்.பாலு இந்த விவகாரத்திலிருந்து ஒதுங்கிவிட்டார். இந்த வாட்ஸாப் குரூப்பில் உதயநிதி ஆதரவாளர்கள் அதிகம். அவர்கள், கனிமொழியின் உத்தரவை பொருட்படுத்துவது இல்லை என சொல்லப்படுகிறது.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு வாட்ஸாப்பில் வரும் விஷயங்கள் பா.ஜ.,வுக்கு அனுப்பப்படுகிறதாம். இதனால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

subramanian
ஏப் 13, 2025 13:53

...சொல்லுங்கள்.


N Sasikumar Yadhav
ஏப் 13, 2025 12:39

ஒருவேளை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக இருக்குமோ


SUBBU,MADURAI
ஏப் 13, 2025 13:07

இவருக்கு துண்டு சீட்டை எழுதிக் கொடுப்பதே பாஜகவின் ஸ்லீப்பர் செல்தான் என்பது தெரியவில்லை


கொல்ட்டி பற்றாளன், கட்டுமரநகர் ஓங்கோல்
ஏப் 13, 2025 06:47

தர்ம பத்தினி கவிதாயினியை புறக்கணித்து அரசியல் பண்ணும் உதவாநிதி வெகு விரைவில் அதற்கான பலனை அனுபவிப்பார் கட்சிக்குள் குடும்பத்தை புகுத்திய கட்டுமரத்தின் குடும்பம் எத்தனை கூறாக உடையப் போகிறது எனபதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்


SUBBU,MADURAI
ஏப் 13, 2025 08:47

அந்த வாட்ஸப் செய்தியில் கட்டுமரம் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் கள்ளத் தனமாக பயணித்து சென்னை வந்தது பற்றி கூறப்பட்டிருக்கிறதா அப்றம் கண்ணதாசன் சொன்னது போல் எதுவும் அந்த வாட்ஸப் பதிவில் இருக்கிறதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை