மேலும் செய்திகள்
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பும்; ஆதரவும்
09-Jan-2025
புதுடில்லி: கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ராகுலை அமேதி தொகுதியில் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்மிருதி இரானி. ஆனால், 2024 தேர்தலில் தோற்று விட்டார். எப்போதும் சோனியா குடும்பத்தையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சித்து வந்த ஸ்மிருதி, தோல்விக்கு பின் அமைதியாகி விட்டார்.திடீரென அவர் டில்லியில் உள்ள பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நிர்வகிக்கும் குழுவில் ஒரு அங்கத்தினராக, பிரதமரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர்களின் படங்கள், அவர்கள் எழுதிய கடிதங்கள், அவர்களுக்கு வெளிநாடுகளில் கிடைத்த பரிசுகள் என, அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள துவங்கி விட்டார் ஸ்மிருதி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=78qoqvg8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த அருங்காட்சியகம் பார்லிமென்டுக்கு அருகே, தீன் மூர்த்தி பவனில் உள்ளது. நேரு பிரதமராக இருந்தபோது இங்குதான் வசித்தார். பல ஏக்கரில் பிரமாண்டமாக இருக்கும் இந்த பவன், தற்போது மத்திய அரசிடம் உள்ளது.இதில் நேரு நுாலகம் உள்ளது; இப்போது அதுவும் மத்திய அரசிடம் வந்து விட்டது. அந்த நுாலகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய ஆவணங்கள் இருந்தன.காந்தி மற்றும் மவுன்ட் பேட்டன், அவரது மனைவி ஆகியோருக்கு நேரு எழுதிய கடிதங்களின் நகல்கள் இருந்தன; பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு முன், இந்த கடிதங்கள் அனைத்தையும் சோனியா எடுத்து சென்று விட்டார் என கூறப்படுகிறது.இந்த விஷயத்தை தோண்டப் போகிறாராம் ஸ்மிருதி. அத்துடன், இப்போது உள்ள கடிதங்களில் சிலவற்றையும் வெளியிட்டு காங்கிரசையும், சோனியாவையும் சிக்க வைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார், அவர்.
09-Jan-2025