உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தொகுதி மறுவரையறை: அச்சமும், விளக்கமும்

தொகுதி மறுவரையறை: அச்சமும், விளக்கமும்

-- நமது சிறப்பு நிருபர் - நம் நாட்டில் கடந்த 1952, 1963, 1973 மற்றும் 2002 ஆகிய காலகட்டங்களில் என, இதுவரை நான்கு முறை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. எனினும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கடைசியாக 1971ல் தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, 543 லோக்சபா தொகுதிகள் என தீர்மானிக்கப்பட்டது. குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய தென் மாநிலங்கள், லோக்சபாவில் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, எமர்ஜென்சி காலமான 1976ல் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா, சட்டத் திருத்தம் மூலம் தொகுதி மறுவரையறை எண்ணிக்கையை முடக்கினார். இந்த சட்டத்திருத்தம் 2001 வரை அமலில் இருந்த நிலையில், மீண்டும் 2002ல் வாஜ்பாய் அரசு மேலும் 25 ஆண்டு களுக்கு நீட்டித்தது. தற்போது தொகுதி மறுவரையறை தொடங்கப்படும் நிலையில், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப் படுத்திய தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் குறைவான லோக்சபா எம்.பி.,க்களையே பெறும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த வகையில், தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக காரணங்கள் இருக்கின்றன.

மத்திய அரசு கூறும் விளக்கம்

* தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தென் மாநிலங்களின் உரிமை, பிரதிநிதித்துவம் சற்றும் குறையாது என, லோக் சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார் * 50 சதவீத கூடுதல் இடங்கள் மாதிரியில், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 543ல் இருந்து 816 ஆக உயரும். இதனால், அனைத்து மாநிலங்களின் தொகுதிகளும் ஒரே சீராக 50 சதவீதம் வரை அதிகரிக்கும். * தென் மாநிலங்களில் மட்டும் தொகுதிகள் எண்ணிக்கை 129ல் இருந்து 195 ஆக உயரும் * பார்லி.,யில் தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த பங்கு 24 சதவீதம். தொகுதி மறுவரையறைக்கு பின்னரும் அதே நிலை தொடரும் * பழைய நடைமுறையின்படி தொகுதிகள் மறுவரையறை செய்தால், மக்கள் தொகையை கட்டுப் படுத்திய மாநிலங்களுக்கு தொகுதிகள் குறைய வாய்ப்பு இருந்தது * புதிய சட்ட வரைவின் மூலம் எந்த மாநிலத்தின் தொகுதிகளும் குறையாது; எண்ணிக்கையில் வளர்ச்சி மட்டுமே இருக்கும் * தொகுதி மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரைகள், பார்லி.,யில் ஏற்கப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்த பிறகே நடைமுறைக்கு வரும். எனவே, 2029 வரை நடக்கும் எந்தவொரு தேர்தலிலும், தற்போதைய நிலையே தொடரும் * லோக்சபாவில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்தை முறையாக செயல்படுத்தவும், சட்டசபை மற்றும் லோக்சபாவில் தொகுதிகளை சமமாக பிரிக்கவும் தொகுதி மறுவரையறை அவசியம்.

தென் மாநிலங்கள் எதிர்க்க காரணம்

* மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, 1970களில் தென் மாநிலங்கள் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தின * உ.பி., பீஹார், ம.பி., போன்ற வட மாநிலங்கள் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை. இதனால், அங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது * மக்கள் தொகையை மட்டுமே அளவுகோலாக வைத்து தொகுதிகளை பிரித்தால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு அது தண்டனையாகவும், கட்டுப்படுத்த தவறிய வட மாநிலங்களுக்கு பரிசாகவும் அமையும் * மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூற்றுப்படி, 50 சதவீத கூடுதல் இடங்கள் அதிகரித்தாலும், தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் தான் தொகுதிகள் அதிகமாக உயரும் * உதாரணத்திற்கு, உ.பி.,யில் தற்போதுள்ள 80 லோக்சபா தொகுதிகள் 120க்கு மேலாக உயர வாய்ப்புள்ளது. இதனால், லோக்சபாவில் ஒட்டுமொத்த தென் மாநிலங்களின் ஓட்டு பலம் குறைந்துவிடும் * பார்லி.,யில் அரசியல் அதிகாரம் வட மாநிலங்கள் பக்கம் சாய்ந்தால், மத்திய நிதி ஆணையத்தின் நிதி பகிர்வு, திட்டங்கள் ஒதுக்கீடு போன்றவற்றில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படலாம் * மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே இந்திரா, வாஜ்பாய் காலத்தில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்துவது முடக்கி வைக்கப்பட்டது * தற்போது அந்த பாதுகாப்பை உதறி தள்ளிவிட்டு, மக்கள் தொகைக்கே முன்னுரிமை அளித்தால், அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ram
ஆக 14, 2026 11:57

Now itself we could not run the parliament session with 543 Members in Log Shaba creating disturbance. Better to reduce the member strength to 250. We are already suffering with excessive democracy. More members more confusion. Numbers do not make efficiency. Quality matters


Ram
ஆக 14, 2026 11:43

Already with 543 MPs in Lokshaba we find it difficult to conduct the session. In the recently concluded session out of 19 days only 5 days business could be done. Remaining days were lost due to pro of members. In my opinion if we increase the numbers there will be more disturbance. We are already suffering with excessive democracy. It will be better to reduce the numbers to 250.


ராஜா
ஆக 14, 2026 04:58

இதை செய்யாவிட்டால் வட மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதிகமான மக்களுக்கு ஒரு அமைச்சர் என்னும் வகையில். இதுவும் பாஜகவுக்கு தான் பலம். இழப்பு இப்போதும் மகளிருக்கு மட்டும் தான்.


சத்தியநாராயணன்
ஆக 13, 2026 13:23

பொதுவாக வட மாநிலங்கள் என்று சொல்வது தவறு, கத்திக்கு பயந்து மாதம் மாறிய மார்க்கத்தினர் 4 பொண்டாட்டி 40 பிள்ளைகள் குழந்தைகள் பெற்று கொண்டதால் தான் இந்த நிலைமை. மேலும் விகிதாச்சார அடிப்படையில் கிடையாது என்று சொன்ன பிறகும் அதே பொய்யை தூக்கிக்கொண்டு வந்து எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்றால் BJP யை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே. இங்கே எதிர் கருத்துஎழுதிய பெயர்களை பார்த்தாலே புரிந்துவிடும்.


manian
ஆக 13, 2026 13:17

population has exploded in india.Delimitation badly needs a review.Dmk's argument that TN population is less because of their effective steps in family planning looks weak.In general people are aware of the benefits of a small family in TN without govt prompting


Abdul Rahim
ஆக 13, 2026 12:46

மத்தியில் ஆட்சி அமைக்க 4 வட மாநிலங்களில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானது அதனால் தான் தென்மாநிலங்களில் 50 சதவிகிதம் தொகுதி அதிகரிப்பு என்ற ஆசை வார்த்தை கூறி குள்ளநரி தந்திரத்தை நிறைவேற்ற துடிக்கிறது பாஜக, தான் வெற்றி பெற முடியாத தென் மாநிலங்களை பழி வாங்க இந்ந முடிவு இதனை தினமலர் விளக்கமாக எழுதியது மிக அருமை


Suppan
ஆக 13, 2026 16:49

சற்று யோசித்து கருத்திடுங்கள். எல்லா மாநிலங்களுக்கும் இப்பொழுது இருக்கும் விகிதத்தில்தான் அதிகரிக்கும் இது எப்படி ஆசை வார்த்தை ஆகும். ஆனால் இந்த அதிகரிப்பு தேவையற்றதுதான். செலவுதான் அதிகமாகும். ஒவ்வொரு அங்கத்தினருக்கும் பேசுவதற்கு கிடைக்கும் நேரம் குறையும். இப்பொழுது கேண்டீனில்தானே நேரம் செலவிடுகிறார்கள். சமாஜ்வாதி போன்ற கட்சிகள் பெண்களுக்கான ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். கேட்டால் பிற்படுத்த வகுப்பினருக்கும் தனி பெண்கள் கோட்டா வேண்டும் என்கிறார்கள். உபியின் ஒவ்வொரு பாராளுமன்ற சங்கத்தினரும் சுமார் 30 லட்சம் மக்களின் பிரதிநிதி. தென்மாநில அங்கத்தினரோ சுமார் பத்து லட்சம் மக்களுக்குத்தான் பிரதிநிதி


venkat
ஆக 13, 2026 22:26

என்ன பாய்... 50 சதவீதம் எல்லா மாநிலத்திலும்... பொய்யை பரப்பி , மத வெறிபிடித்து கருத்து சொல்ல வேண்டாம்...


T.S.SUDARSAN
ஆக 13, 2026 12:06

தமிழகம் தன் தலையில் மண்ணை வரி கொட்டிக்கொண்டிருக்க , பெண்களை புறக்கணிக்க செயல் படுகிறது.


Abdul Rahim
ஆக 13, 2026 18:23

நண்பர் சுப்பன் அவர்களே இதை தான் கட்டுரை தெளிவாகத் குறிப்பிட்டு உள்ளது மக்கள் தொகை கட்டுப்பாட்டை கடைபிடித்து 10 லட்சம் பேர்க்கு என்ற குறைவான எண்ணிக்கையை கொண்டு வந்தவர்கள் பாதிக்கபட வேண்டுமா? உங்கள் எழுத்திலேயே 30 மற்றும் 10 என்ற வித்தியாசத்தை உணர்த்தி உள்ளீர்கள் என்பதை நினைவூட்டுகிறேன்....


Ragupathy
ஆக 13, 2026 09:52

543 தொகுதிகளில் 130 தொகுதிகள் மட்டுமே‌...இப்போது தென்னகத்தில் உள்ளன...இப்போதே தென்மாநிலங்களின் தயவு தேவையில்லை...இதை மறைத்து திருட்டுகழகம் தமிழர்களை ஏமாற்றுகிறது.


Dv Nanru
ஆக 13, 2026 09:40

தொகுதி மறுவரையறை மிகுந்த அச்சமும் கவலையும் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை பாராளுமன்றம் தென்மாநிலங்களை சார்ந்து இருக்காது அதனால் இந்திராகாந்தி வாஜ்பாய் கொள்கையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் அதனால் தென் மாநிலங்கள் ஒற்றுமையாக போராடவேண்டும் . தொகுதி மறுவரையறை வேண்டாம் வேண்டாம்வேண்டாம்...


ஜான் குணசேகரன்
ஆக 13, 2026 08:31

தென் மாநிலங்களின் கோரிக்கைகள் எதுவும் நிராகரிக்கப்பட்டதாக தெரியவில்லையே. விகிதாச்சாரம் அடிப்படையில் வட மாநில தென் மாநில வேறுபாடுகள் எதுவும் இல்லை. இந்த எதிர்ப்பு சம்பாதிக்கிறார்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும், புதிதாக யாரும் வந்து வாரிசுகளின் வாய்ப்பை கெடுத்து விட கூடாது என்ற எண்ணம் வெளிப்படுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை