உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 17 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் தமிழகத்தில் காங்., ஆட்சி இல்லை: பொறுப்பாளர் முன்னிலையில் கட்சியினர் ஆதங்கம்

17 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் தமிழகத்தில் காங்., ஆட்சி இல்லை: பொறுப்பாளர் முன்னிலையில் கட்சியினர் ஆதங்கம்

தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 'அதிகாரப் பகிர்வு, அடிமட்ட தொண்டர்களுக்கும் கிடைக்க வேண்டும்' எனக் கூற, உற்சாகம் அடைந்த மாநில நிர்வாகிகள், 'கேரளா பாணியில், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்' என, காரசாரமாக பேச, அனைவரும் கை தட்டி வரவேற்றுள்ளனர்.புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என, அம்மாநில காங்கிரஸ் அறிவித்த நிலையில், தமிழக காங்கிரசிலும் மாற்றம் ஏற்படத் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக கிரிஷ் சோடங்கர் நியமிக்கப்பட்ட பின், இரு மாநிலங்களிலும், இரு முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஆனால், இரு முறை சென்னை வந்த கிரிஷ் சோடங்கர், முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவில்லை.நேற்று முன்தினம் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அவரது ஆலோசனைக்கு பின், அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி, 'புதுச்சேரியில், 'இண்டி' கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. 'வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமை யில்தான் கூட்டணி; தி.மு.க., விரும்பினால் தனித்து நிற்கலாம்' என, அதிரடியாக அறிவித்தார். நேற்று முன்தினம், சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், கிரிஷ் சோடங்கர் பங்கேற்றார். இக்கூட்டத்தில், அவரும், மாநில நிர்வாகிகளும் காரசாரமாக பேச, அதை காங்கிரசார் கைதட்டி வரவேற்றுள்ளனர்.கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிலர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., காலத்தில், சாராயக் கடைகள் வழியாக அ.தி.மு.க.,வினருக்கும், ஜெயலலிதா காலத்தில், 'டாஸ்மாக் பார்'கள் வாயிலாக, அ.தி.மு.க.,வினருக்கும், வருமானம் கிடைத்தது. தற்போது, தி.மு.க., வினருக்கு வருமானம் வருகிறது. ஆனால், கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு, எந்த வருமானமும் இல்லை. வாரியத் தலைவர், கூட்டுறவு சங்க நிர்வாகி, கோவில் அறங்காவலர் என, எந்த பதவியும் தரவில்லை. கட்சி வளர்க்க பணம் தேவை. காங்கிரசாரிடம் அது இல்லை.காங்கிரஸ் கட்சி வளரக் கூடாது என, தி.மு.க., விரும்புகிறது. அதற்கு நாம் இடம் தரக் கூடாது. கேரளாவில் ஏழு எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் காங்கிரசுக்கு இருந்தனர். இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருந்தனர். கருணாகரன் என்ற தனிமனிதனின் முயற்சியால், காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தது. தமிழகத்தில், 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். நம்மால் ஏன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியவில்லை. தி.மு.க.,விடம் காங்கிரஸ் அடிமையாக இருப்பதாலேயே இதெல்லாம் நடக்கிறது. இனியாவது ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

அதிகார பகிர்வு தேவை!

நிகழ்ச்சியில் கிரிஷ் சோடங்கர் பேசியுள்ளதாவது: அதிகாரப்பகிர்வு என்பது அடிமட்ட தொண்டர்களுக்கும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான, நியாயமான கூட்டணி தர்மத்திற்கு முழு வடிவம் கிடைக்கும். அது கிடைக்க, கட்சியை பலப்படுத்த வேண்டும்.நான் முன்பு பணியாற்றிய மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அம்மாநிலத்தில் பணியாற்றியதுபோல், இங்கு பணியாற்ற விரும்புகிறேன். அரசியல் விவகாரக் குழு, சொத்து பாதுகாப்புக் குழு, ஒழுங்கு நடவடிக்கை குழு போன்றவற்றுக்கு, உறுப்பினர்கள் பட்டியலை தாருங்கள். நான் டில்லி மேலிடத்திற்கு அனுப்பி வைப்பேன். கட்சி விவகாரம் குறித்து, இஷ்டத்துக்கும் பேட்டி அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Raj S
மார் 18, 2025 23:02

நீங்களும் உங்க தாய் கழகமும்மான திருடர்கள் முன்னேற்ற கழகமும் யாருடனும் கூட்டணி இல்லாம நின்னா டெபாசிட் கூட கிடைக்காது...


மணி
மார் 18, 2025 19:05

......... சாகுங்க


Bhaskaran
மார் 18, 2025 18:18

பிச்சைகாரர்கள் திருவோடு நிறையனும்னு மட்டுமே ஆசைப்பட வேண்டும்


DUBAI- Kovai Kalyana Raman
மார் 18, 2025 18:13

ஏன் இன்னும் ஆளு இல்லா கடைல டீ காபி ஆத்திக்கிட்டு இருக்கீங்க ..தலை இல்லா கட்சியெல்லாம் தலை இல்லா முண்டம் போல ..நேரத்தை வேஸ்ட் பண்ணாம வேற வேலை இருந்த போய் பார்க்கவும்


अप्पावी
மார் 18, 2025 17:24

இப்பிடித்தான் நாலு எம்.எல்.ஏ க்களை வெச்சிக்கிட்டு பா.ஜ வும் கூவுது.


venugopal s
மார் 18, 2025 17:10

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் திராவிடக் கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது!


theruvasagan
மார் 18, 2025 14:18

வாசல்ல நின்னு அம்மா தாயே பிச்சை போடுங்கம்மா. பழைய சோறா இருந்தாலும் பரவாயில்லை என்று கெஞ்சி வயித்த கழுவுகிற வேலைவெட்டி இல்லாத உதவாக்கரை வீட்டுக்காரன் தன்னை உள்ளே கூட்டிகிட்டு போய் அருசுவை விருந்து பரிமாறணும்னு ஆசைப்படலாமா.


krishna
மார் 18, 2025 12:22

BEGGERS HAS NO CHOICE.


sankar
மார் 18, 2025 11:42

கர்மவீரரை அண்டங்காக்கை என்று சொன்னவர்களின் காலடியில் தவழ்ந்துகொண்டு இருக்கும் காங்கிரஸ் - இந்தக்கேள்வி உங்களுக்கு அவசியமா


ஆரூர் ரங்
மார் 18, 2025 10:45

எல்லா கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்து 30 எம்எல்ஏ சீட் மட்டுமே கொடுக்க மகன், மருமகன் தீர்மானித்துள்ளது தெரியுமா? வாயை அதிகமா திறந்தா பத்து சீட் கூட யாசகம் போடமாட்டார்கள். ஜாக்கிரதை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை