உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஐந்து ஆண்டுகளாக காத்திருந்தும் வீடு கிடைக்காமல் போலீசார் விரக்தி

ஐந்து ஆண்டுகளாக காத்திருந்தும் வீடு கிடைக்காமல் போலீசார் விரக்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில், சீனியாரிட்டியில் உள்ளவர்களுக்கு குடியிருப்பு ஒதுக்காமல் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படுவதாக, போலீசார் குற்றஞ்சாட்டி உள்ளனர்.புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், 217 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, ஒதுக்கப்படாமல் இருந்தன. தற்போது இந்த குடியிருப்புகள் போலீசாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. 'சீனியாரிட்டியில் உள்ள போலீசாருக்கு இந்த குடியிருப்புகள் ஒதுக்கப்படவில்லை' என, ஐந்து ஆண்டுகளாக காத்திருக்கும் போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இதுகுறித்து போலீசார் சிலர் கூறியதாவது:புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், ஏற்கனவே 680 குடியிருப்புகள் போலீசாருக்கு ஒதுக்கப்பட்டு விட்டன. புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு அடுக்குமாடி கட்டடங்களில் உள்ள குடியிருப்புகள், யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இதற்கு, 12 அடுக்குமாடிகள் கட்டுவதற்கு மாறாக 14 மாடிகள் கட்டப்பட்டதாக கூறுகின்றனர். கட்டடத்தின் உறுதியை ஆய்வு செய்த உயர் அதிகாரிகள், அவை தரமாக உள்ளதாக சான்று கொடுத்துள்ளனர். தற்போது குடியிருப்பு ஒதுக்கீடு நடைபெற இருந்த நிலையில், சீனியாரிட்டியில் இருந்தவர்கள் பெயர்கள் எல்லாம் நீக்கப்பட்டு விட்டன. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஆயுதப்படையில் உள்ளவர்களுக்கு மட்டுமே குடியிருப்புகள் ஒதுக்கப்படும்' என, கூறுகின்றனர். இதனால், ஐந்து ஆண்டுகளாக வீடு ஒதுக்கப்படும் என காத்திருந்தோர் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஆயுதப்படையில் இருந்தவர்கள் சிலரை, சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு மாற்றிவிட்டனர். குடியிருப்பு வேண்டும் என்றால், மீண்டும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சென்னையில், வீட்டு வாடகை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே, போலீசாருக்கு குடியிருப்புகள் கட்டி தர, அரசு முன் வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ