உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தர்மேந்திர பிரதான் சென்னை வருகை ரத்து; ஆனாலும் எதிர்ப்பு காட்ட அறைகூவல்

தர்மேந்திர பிரதான் சென்னை வருகை ரத்து; ஆனாலும் எதிர்ப்பு காட்ட அறைகூவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை, திடீரென ரத்து செய்யப்பட்டது.சென்னை, ஐ.ஐ.டி., யில், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்களுக்கான மாநாடு இன்று துவங்கி மார்ச் 2ம் தேதி வரை நடக்கிறது. இதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைப்பதாக இருந்தது.இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழக கல்விக்கான மத்திய ஒதுக்கீட்டு நிதியை வழங்க முடியாது' என தெரிவித்திருந்தார். இதற்கு, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், மாணவர் அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றன.தர்மேந்திர பிரதானின் வருகையை எதிர்த்து, கருப்புக் கொடி காட்டப் போவதாக, காங்., - கம்யூ., கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர், 'போஸ்டர்' ஒட்டி வருகின்றனர்.இந்நிலையில், 'தர்மேந்திர பிரதானின் வருகை ரத்து செய்யப்பட்டு, அவருக்கு பதில், மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்பார்' என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், 'கருப்பு கொடி போராட்டம், தர்மேந்திர பிரதான் என்ற ஒற்றை நபரை கண்டிக்கும் போராட்டம் அல்ல; நிதி தர மறுத்து, ஹிந்திக்கு ஆதரவாக உள்ள தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிரானது. 'அதனால், இணை அமைச்சருக்கும் கருப்புக் கொடி காட்டுவோம்' என, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ManiK
பிப் 28, 2025 18:52

கருப்பு கொடி காட்டினாலும், கதறி கதறி அழுதாலும் 2026ல மும்மொழி கொள்கை மக்களாள் ஏற்கப்படும்.


sankaranarayanan
பிப் 28, 2025 18:51

அந்தந்த பகுதியில் எந்த இந்திய மொழி அதிகம் பயில மாணவர் விரும்புகிறார்களோ அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் பள்ளி நியமிக்க ஏற்பாடு செய்ய பேண்டும்


pmsamy
பிப் 28, 2025 17:29

. ஒழிக்கப்பட வேண்டும்


DUBAI- Kovai Kalyana Raman
பிப் 28, 2025 17:23

சென்ட்ரல் கோவர்ன்மெண்ட் நியூ education scheme எ ஏத்துகிட்டா தான் பணம் கொடுக்கப்படும் , சரி தான் , 2000 கோடி பணமே நியூ education scheme கு தானே ..scheme அ ஏத்துக்கிட்டு புது பள்ளிக்கூடம் , சென்ட்ரல் கோவர்ன்மெண்ட் சொல்ற போல எல்லா வசதியோடு , கட்டி , டீச்சர்ஸ் போஸ்டிங் போட்டு , நியூ ஸ்கூல் ரன் பண்ண தான் பணம் ..scheme வேண்டாம் , நியூ ஸ்கூல் கட்ட முடியாது , அப்புறம் எப்படி பணம் கிடைக்கும் ..பழைய பணம் கொடுத்தாச்சு ..புது scheme கு தான் payment ஸ்டாப் பண்ணி வைச்சிருக்கார்கள் ..2000 கோடி வேணாம் னு சொல்லும் தமிழ் நாடு கோவர்ன்மெண்ட் தான் mut.. .. full mistake TN திராவிட கோவேர்ந்மேன்ட் தான் ..ஒன்னும் பண்ணாத வேலைக்கு 2000 கோடி கொடுக்க சென்ட்ரல் கோவர்ன்மெண்ட் ஒன்னும் mut.. இல்லை. மக்களை ஏமாற்றும் வேலை செய்யாமல் ..உண்மை சொல்ல வேண்டும் tn அரசு .. மக்களும் உண்மை புரிஞ்சு பேச வேண்டும் ..வெப்சைட் , நியூஸ் படித்து உண்மை தன்மை அறிந்து பேச , எழுத vendum..


Oviya Vijay
பிப் 28, 2025 14:52

நான் கேட்கும் கேள்விக்கு தகுந்த பதில் சொல்ல துப்பில்லாமல் என்னை வசை பாட வந்து விட்டான் Vivek என்னும் ஒரு சங்கிமங்கி... ஆக நான் கேட்குறதுக்கு பதில் உங்களுக்கே தெரியாம தான் இவ்ளோ நாளா மும்மொழி கொள்கைக்கு முட்டுக் கொடுக்குறீங்களா டா... அடப்பாவிகளா...


vivek
பிப் 28, 2025 15:57

அறிவிலி ஓவியர்.... நீ படித்தது சம சீர் கல்வி என்பதை எல்லோருக்கும் நிரூபித்து விட்டாய்..கோமாளி


vivek
பிப் 28, 2025 13:14

தமிழ் பயிலும் மாணவர்கள் தமிழில் அதிகம் தோல்வி அடைவது ஏன்.. இரண்டாம் வகுப்பு தமிழை எட்டாம் வகுப்பு மாணவன் படிக்க திணறுவது ஏன்... பதில் வருமா


JANA VEL
பிப் 28, 2025 12:56

இருக்கிற தாய்மொழி தமிழ், உலகமொழி ஆங்கிலம் சொல்லித்தர மட்டும் அங்கே ஆசிரியர்கள் இந்த அரசு வச்சிருக்கா ... உங்க சந்தேகம் தீர்ந்ததா


Oviya Vijay
பிப் 28, 2025 12:31

எனக்கு இருக்கும் ஒரு சந்தேகத்தை இங்கு யாரேனும் நிவர்த்தி செய்யுங்களேன்... உங்களுக்கு என் கேள்விக்கான பதில் தெரிந்தால்... என் கேள்வி என்னவெனில்... தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் மும்மொழிக் கொள்கை அடிப்படையிலான அரசுப் பள்ளி ஒன்று செயல்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்... மும்மொழி கொள்கையின் படி அப்பள்ளியில் இந்திய மொழிகளில் எதை வேண்டுமானாலும் மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம் என்று கூறிவருகிறீர்கள்... அப்படியானால் உதாரணத்திற்கு அந்த அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பில் பயிலும் ஒரு மாணவருக்கு தமிழ் ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக தெலுங்கு மொழி பயில விருப்பம்... ஒரு மாணவருக்கு கன்னட மொழி பயில விருப்பம். ஒரு மாணவருக்கு ஒரியா மொழி பயில விருப்பம்... ஒரு மாணவருக்கு பஞ்சாபி மொழி பயில விருப்பம்... ஒரு மாணவருக்கு ராஜஸ்தானி மொழி பயில விருப்பம்... ஒரு மாணவருக்கு குஜராத்தி மொழி பயில விருப்பம்... ஒரு மாணவருக்கு மலையாள மொழி பயில விருப்பம்... இவ்வாறிருக்கையில் இத்தனை மொழிகளையும் சொல்லிக் கொடுப்பதற்கு ஒவ்வொரு மொழிக்கும் புலமை வாய்ந்த ஆசிரியர்களை தனித்தனியாக நியமனம் செய்வார்களா??? இல்லையேல் இதனை எவ்வாறு கையாள்வார்கள்...??? இந்த கேள்விக்கான பதில் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்... உண்மையில் நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்... ப்ளீஸ்...


vivek
பிப் 28, 2025 13:11

பல மொழி ஓவியர்... நேற்றைக்கு பதில் சொல்லியாச்சு....தமிழ் படிக்கும் மாணவர்கள் தமிழில் தோல்வி அடைவது ஏன்...அதற்கு பதில் சொல்லேன் ....


ஆரூர் ரங்
பிப் 28, 2025 17:12

ஒற்றைப் படை எண்ணிக்கை மாணவர்களே உள்ள அரசுப் பள்ளிகளில் ஏழெட்டு ஆசிரியர்கள் கூட உள்ளனரல்லவா?. இல்லம் தேடிக் கல்வி மூலம் தனித்தனியாக மொழி கற்றுக் கொடுக்க முடியுமே.


senthil kumaran
பிப் 28, 2025 18:32

நீங்கள் முதலில் புதிய கல்வி கொள்கை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள், மூன்றாம் மொழியை அந்தந்த பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக தேர்வு செய்யலாம்..


naranam
பிப் 28, 2025 11:18

கல்வியை வைத்து மக்களை ஏமாற்றும் இவர்களைத் திருட்டு திராவிட மூடர்கள் என்றும் சொல்லலாம்!


ஆரூர் ரங்
பிப் 28, 2025 10:50

உலகம் உருண்டை வடிவமானது என்று கூறிய ( பிரதான்)கலிலியோவுக்கு அங்கிருந்த மதத் தலைவர்கள் காட்டிய எதிர்ப்பு நினைவுக்கு வருகிறது. பூ கோளம் என்று உருண்டையான பூமிக்கு பொருத்தமான பெயர் வைத்து அறிவைக் காட்டிய இந்தியாவிலும் மூடர்கள் உள்ளனரே.


அப்பாவி
பிப் 28, 2025 18:12

பூகோளம் என்னும் வார்த்தை வேதங்களில் கிடையாது. பின்னால் வந்த சமஸ்கிருத நூல்களில் வந்த போது உலகம் உருண்டைன்னு எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு.


புதிய வீடியோ