உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வர் ஸ்டாலினின் பகுத்தறிவு சர்ச் செல்வதை தடுக்கவில்லையா? ஹிந்து முன்னணி கேள்வி

முதல்வர் ஸ்டாலினின் பகுத்தறிவு சர்ச் செல்வதை தடுக்கவில்லையா? ஹிந்து முன்னணி கேள்வி

திருப்பூர்: ''முதல்வர் ஸ்டாலின், மதச்சார்பற்றவராக இல்லை'' என்று ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

சிவகங்கை, அடைக் காட்டூர் இருதய ஆண்டவர் சர்ச்சில், அரசு நிதியில் நடக்கும் புனரமைப்பு பணிகளை, முதல்வர் ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்துள்ளார். இது அப்பட்டமான மதவாத அரசியல். தேர்தலில், தி.மு.க., பெற்ற வெற்றியை, கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சை என்று பாதிரியார் ஒருவர் பகிரங்கமாக கூறினார். தற்போது, மக்கள் வரிப்பணத்தை நிதியாக வழங்கி, சர்ச்சுகளில் புனரமைப்பு பணிகள், அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அதில் ஒரு பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ஹிந்து அறநிலையத்துறை பிடியில் சிக்கி, கோவில்கள் சீரழிகின்றன. பல கோவில்கள் ஒரு கால பூஜைக்கு வழியின்றி உள்ளன. வருவாய் வரும் கோவில்களில் மட்டும், அங்குள்ள நிதியை எடுத்து செலவு செய்து விட்டு, அரசு நிதியில் செய்ததுபோல், தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. அந்த பணியை கூட, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்ததில்லை. அன்னிய மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதோடு, நேரடியாக அந்த பண்டிகைகளில் பங்கேற்று மகிழும் ஸ்டாலினை, சர்ச்சுக்கு செல்வதும் மத நம்பிக்கை தான் என அவரது பகுத்தறிவு தடுக்கவில்லை. ஹிந்து பண்டிகை, ஹிந்து கோவில்கள் என்றால் மட்டும், அவருக்கு பகுத்தறிவு குறுக்கே வந்து தடுக்கிறது. இஸ்லாமிய மாணவர்கள், பத்து பேர் வெளிநாடு சென்று பயில, 3.60 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை ஸ்டாலின் வழங்கினார். இது போன்ற அவரது நடவடிக்கைகள், அவர் மதச் சார்பற்றவராக இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. முதல்வர் ஸ்டாலின் நடுநிலையோடு நடப்பார் என எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். ஹிந்துக்கள் 85 சதவீதத்துக்கு மேல் இருந்தும் மரியாதை இல்லை. ஆனால், 15 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, அவர்களின் ஏவலாளாக தி.மு.க., செயல்படுகிறது. ஹிந்துக்கள் ஒன்றிணைந்து, ஹிந்துக்களை மதிப்பவருக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டும். அது தான் வருங்காலத்தில் நமக்கு பாதுகாப்பு. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

மணிமுருகன்
அக் 04, 2025 23:24

என்று கந்த சஷ்டி கவசத்தை கேலி செய்த கூட்டத்திற்கு ஆதரவு கொடுத்தாரோ அன்றே அவர் இந்து மத எதிர்ப்பாளராக தான் இன்றும் உள்ளார் என்ற ஒருஎ ண்ணம் இருந்தது அது உணமை என்று பல செயல்களில் காட்டி வருகிறார் சிறுபான்மையினர் என்றுக் கூறி அவர்களை பினாமி ஆக்கும் ஊழல் பித்தலாட்டத்தை எப்போது நிறுத்தப்போகிறது அயர்லாந்த் வாரிசு திராவிடமாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி.திமுககூட்டணி கிறித்தவர்களால்தான் அவாதிமாஓவிமோ ஊழல்கட்சி திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததா இந்துக்களே இந்த முறை ஓட்டு போடக்கூடாது


C.SRIRAM
அக் 04, 2025 19:48

அறிவே இல்லை . பகுத்தறிவுக்கு எங்கு போவது ?. நாட்டின் அல்லது மாநிலத்தின் ஏதாவது ஒரு பிரச்னையை பற்றி துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியாது . அறிவின் எல்லை அது தான் .


Kulandai kannan
அக் 04, 2025 15:13

ஸ்டாலினுக்கு ஜோசஃப் விஜய் ஜுரம்.


Apposthalan samlin
அக் 04, 2025 11:18

2026 இல் கண்டிப்பா உறுதியாக மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் .சிறுபான்மை வோட்டை சதவீதம் உயர்ந்து உள்ளது . ஒரு தம்பதியினர் 12 வருடம் குழந்தை இல்லை என்று சர்ச்சிக்கு வந்து குழந்தை கிடைத்தவுடன் எனக்கு தெரிந்து குடும்பம் சொந்த உறவுகள் ஐம்பது பேர் வருகின்றனர் .என்னை விட அவர்கள் தீவிரமா இருக்கிறார்கள் .முன்னாள் சிறுபான்மை வோட் திமுக அதிமுக பிரியும் இப்பொழுது சோலயா திமுகவுக்கு .சிறுபான்மை தலித் வோட் போதும் திமுக ஜெயிப்பதற்கு .


தமிழ்வேள்
அக் 04, 2025 10:10

ஒழுக்கத்தை வலியுறுத்தும் தர்மம் எதையும் பிடிக்காது.. அந்த லட்சணம்..


Ragupathy
அக் 04, 2025 09:46

2026 தேர்தல் திமுகவுக்கு முடிவுகட்டும்.


kamal 00
அக் 04, 2025 08:43

அட போங்க பேர்லயே தூய தமிழ் பெயர் உள்ளவர.... கோவில்ன்னா முகம் அஷ்ட கோணலாகி அந்த பக்கமே போகாதவர்.....


Mecca Shivan
அக் 04, 2025 08:14

அறிவு இருந்தால்தான் பகுத்து அறியும் ஆராயும் அறிவு இருக்கும்


D Natarajan
அக் 04, 2025 07:47

முற்றிலும் உண்மை. ஹிந்துக்கள் ஒன்று பட்டு 2026ல் dmk விற்கு பாடம் கற்பிக்க வேண்டும்.


Svs Yaadum oore
அக் 04, 2025 07:44

தமிழ்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்ப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இந்தத் திட்டத்திற்கு ரூ.700 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 18 மாவட்டங்களில் உள்ள 25 தேவாலயங்களை பழுதுபார்ப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் இதுவரை ரூ.65.40 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் ஆண்டிற்கு, இந்தத் திட்டத்திற்கு ரூ.600 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


புதிய வீடியோ