உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: மனைவி சொல்லே மந்திரம்!

டில்லி உஷ்ஷ்ஷ்: மனைவி சொல்லே மந்திரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியின் முதல்வராக பதவியேற்றுள்ள ஆதிஷியின் முழுப்பெயர், -ஆதிஷி மர்லேனா சிங். இவருடைய பெற்றோர், டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள்.'ஆம் ஆத்மி கட்சியில், எத்தனையோ பேர் தகுதியானவர்களாக இருக்க, எப்படி இவர் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமே நடந்தது. 'சஞ்சய் சிங், ராகுல் சட்டா, சவுரவ் பரத்வாஜ் போன்ற சீனியர் அமைச்சர்களில் ஒருவர் முதல்வராக வருவார்' என கட்சிக்குள் முதலில் சொல்லப்பட்டது.ஆனால், கெஜ்ரிவாலோ ஆதிஷியைத் தான் தேர்ந்தெடுத்தார். இதற்கு, பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவின் விருப்பம். 'நாம் சொல்வதைக் கேட்பார்; பதவி விலகு என்றால், உடனே முதல்வர் நாற்காலியைக் காலி செய்து விடுவார். மற்ற தலைவர்கள் குறித்து சொல்ல முடியாது. அவர்கள் முதல்வரானால், உங்களுக்கு வேட்டு வைக்கவும் வாய்ப்புகள் உள்ளன...' என்று, அவர் கணவருக்கு, 'அட்வைஸ்' தந்துள்ளதாக, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.இதனால், மதுபான லைசென்ஸ் ஊழல் வழக்கில் சிக்கி ஜாமினில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவால், மனைவியின் அறிவுரையை ஏற்று ஆதிஷியை முதல்வராக்கி விட்டார்.'பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு துணைபோன குடும்பம் ஆதிஷியுடையது. பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் கைதான, தீவிரவாதி அப்சல் குருவைக் காப்பாற்ற, அனைத்து முயற்சிகளையும் எடுத்தவர்கள் ஆதிஷியின் குடும்பத்தினர்.'தேசத்திற்கு எதிரானவர் டில்லி முதல்வராகி உள்ளார். இவர் ஒரு, 'டம்மி' முதல்வர்' என கடுமையாக எதிர்த்துள்ளார், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஸ்வாதி மலிவால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankar
செப் 26, 2024 10:15

கிச்சன் கேபினெட்- உருப்படாது


Sridhar
செப் 22, 2024 11:27

வீட்டை காலி செஞ்சானா இல்லையா? அத மொதல்ல சொல்லுங்க.


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 05:51

எதிரி நாட்டின் உளவாளி / ஆதரவாளர் / விசுவாசி ஒருவர் உயர்ந்த பொறுப்புக்கு வர இந்தியாவில் மட்டுமே முடியும் ....... அடுத்த பிரதமராக ராகுல் வரவும் வாய்ப்பு ........


Sridhar
செப் 22, 2024 11:26

போலி வாக்குறுதி கொடுத்து ஊரை ஏமாற்றி அப்பகூட வெறும் 99 சீட்டே பெற முடிந்த ஒரு வெத்து பயலை பிரதமராகும் வாய்ப்பு ங்கற லெவெலுக்கு உங்களைப்போன்ற ஆட்கள் கொடுக்கற பில்டப் னாலதான் அந்த திரியான தரம்கெட்ட அரசியல்வாதிகள் நாட்டில் வலம்வருகிறார்கள்.


SUBBU,MADURAI
செப் 22, 2024 03:56

Portfolios Kejriwal had when he was the CM= Zero. Portfolios Kejriwal has when he's not the CM=Zero. What changed for people of Delhi? Nothing!


A Viswanathan
செப் 22, 2024 11:20

இவரை கண்ணில் விளக்கெண்ணை விட்டு கண்காணிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை