உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புகாருக்கு இடம் தராமல் செய்முறைத்தேர்வு நடத்த இயக்குநரகம் உத்தரவு

புகாருக்கு இடம் தராமல் செய்முறைத்தேர்வு நடத்த இயக்குநரகம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வை, எந்த புகாருக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடத்தி முடிக்க, அரசு தேர்வுகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 28 முதல் ஏப்., 15ம் தேதி வரை நடக்கிறது. முன்னதாக, வரும், 22 முதல் 28ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைத்தேர்வு நடக்கிறது. செய்முறைத்தேர்வு முடிந்த பின், அனைத்து பள்ளிகளில் இருந்தும், மதிப்பெண் பட்டியல்களை மார்ச் 4க்குள், சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளில் இருந்தும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் பெற்றவுடன், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர்கள் அலுவலகம் வாயிலாக, www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், பதிவேற்றம் செய்ய வேண்டும்.மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களின், செய்முறைத்தேர்வு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என, அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் உறுதி செய்ய வேண்டும். ஒரு மாணவர் விபரம் கூட விடுபடக்கூடாது.செய்முறைத்தேர்வை, எந்தவொரு புகாருக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் நடவடிக்கை எடுக்குமாறு, அரசு தேர்வுகள் இயக்குநர் லதா உத்தரவிட்டுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை