உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  ஒருங்கிணைப்பு செயல்பாடுகளில் அதிருப்தி; பா.ஜ.,வை எதிர்க்க துவங்கிய பன்னீர்செல்வம்

 ஒருங்கிணைப்பு செயல்பாடுகளில் அதிருப்தி; பா.ஜ.,வை எதிர்க்க துவங்கிய பன்னீர்செல்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தற்போது எதிர்க்க துவங்கி உள்ளார். அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வருகிறார்.

டில்லிக்கு அழைப்பு

கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று, ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். தொடர்ந்து பா.ஜ., தலைமைக்கு விசுவாசமாக இருந்தார். இந்த சூழலில், வரும் சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்தது. கூட்டணியில், பன்னீர்செல்வம் இடம் பெறுவதை பழனிசாமி விரும்பவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம், கூட்டணியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, த.வெ.க., கூட்டணியில் இணைய முடிவு செய்தார். இதை அறிந்த பா.ஜ., தேசிய தலைமை, அவரை டில்லிக்கு வரும்படி அழைத்தது. அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பன்னீர்செல்வம் சந்தித்தார்; அப்போது, அ.தி.மு.க.,வில் தன்னையும், தன் ஆதரவாளர்களையும் இணைக்க வலியுறுத்தினார். அவரிடம் அமித் ஷா, 'சற்று பொறுமையாக இருங்கள்' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பா.ஜ., தலைமையும் பழனிசாமியிடம் பேசி உள்ளது. எனினும், இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆனால், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 'அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டால் அதை ஏற்போம். 'பதிலாக, பா.ஜ.,வுக்கு ஒதுக்கும் இடங்களில் நம்மை நிற்கும்படி கூறினால் ஏற்க வேண்டாம்' என திட்டவட்டமாக கூறி உள்ளனர். இதனால், பன்னீர்செல்வம் குழப்பம் அடைந்து உள்ளார். இதையடுத்து, பா.ஜ.,வை விமர்சிப்பதை தவிர்த்து வந்த பன்னீர்செல்வம், தற்போது எதிர்க்க துவங்கி உள்ளார். மத்திய அரசை விமர்சித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக, 'வளர்ச்சி அடைந்த பாரதம், ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்ட மசோதாவை' லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

வெந்த புண்ணில் வேல்

இந்த மசோதாவின்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மத்திய அரசு வகுக்கும் வரம்புகளுக்கு உட்பட்டு, மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும். மக்கள் தொகை, வறுமை ஆகியவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடும், வேலை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும். மத்திய நிதி உதவி 60 சதவீதமாக குறைக்கப்பட்டு, மாநிலங்களின் மீது 40 சதவீதம் கூடுதல் நிதி திணிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, நிதி பகிர்வின் வாயிலாக, குறைந்த ஒதுக்கீட்டை பெறும் தமிழகத்துக்கு, இந்த சட்ட மசோதா, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RADHAKRISHNAN
டிச 19, 2025 17:48

பன்னீரு தனக்குத்தானே சும்மா சும்மா சூத்ல சுன்னாம்பு வெச்சுக்கராரு, மொத்தத்தில் தெவசம்தான்


சந்திரன்
டிச 18, 2025 18:57

எல்லாம் மத்திய அரசு ஓட்டனும் நீங்க ஸ்டிக்கர் ஒட்டனும் அப்புறம் ஒன்றிய அரசு குன்றிய அரசுனு திட்டனும் கொடுமை


Sun
டிச 18, 2025 15:38

என் தலைவன் சிங்கம் வந்துட்டான்டா ! அவன் உடையைப் பார்! நடையைப் பார்! எடையைப் பார்! எங்க அண்ணே கார்கிலுக்கு போனா பனி மலை எல்லாம் எரிமலையா மாறும்!


Maheswaran Kannan
டிச 18, 2025 12:41

மொத்தமா அதிமுக கூடாரம் பிஜேபிய கால்பந்தாட்டம் ஆடிடும் பிஜேபிய கருவேப்பிலை போல் பயன்படுத்தி தேர்தல் நெருகட்ல கழட்டி விட்டும்


Kovandakurichy Govindaraj
டிச 18, 2025 12:27

பாஜகவை எதிர்க்கும் முடிவை ஓபிஸ் முன்பே எடுத்திருக்க வேண்டும் . அதே போல டீ டீ வீ தினகரன் அவர்களும் எடுக்க வேண்டும்


Appan
டிச 18, 2025 09:56

இந்த பன்னிருக்கு இவ்வளவு துல்லியமாக விபரங்கள் அறியும் அளவுக்கு திறமை உள்ளதா ..? ஒரு செலவாடை உள்ளது. தினம் கடவுளை தேரில் வைத்து ஊர்வலம் போகும் பொது அதை பார்த்து மக்கள் கும்பிடுவார்கள். அப்போது அந்த தேரோட்டி தன்னைத்தான் கும்பிடுவார்கள் என்று நினைப்பானாம் . பன்னிரு தன் உண்மை நிலை அறிந்து நடக்கணும். இல்லை முடவன் கொம்பு தேனுக்கு ஆசை பட்டவன் போல் ஆகிவிடும் .


Raj
டிச 18, 2025 06:36

இப்போ தான் கட்சியை தொடங்கி உள்ளார் அ. தி. மு .தொ உ. மீ. க. அதற்குள் தேசிய கட்சியை எதிர்ப்பதா?


Sangi Mangi
டிச 18, 2025 11:54

அவர் தேசிய கட்சியை எதிக்கவில்லை? துரோகிகளை நம்ப வைத்து ஏமாற்றிய நம்பிக்கை துரோகிகளை தான் எதிக்கிறார் ராஜா........


A viswanathan
டிச 18, 2025 17:28

ஏபிஎஸ் அவர்களே உங்களுடைய மனகுமுறலை சற்று அடக்கி பொது எதிரிகளை வீழ்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள் சிறிது வாழ்ந்தாலும் பரவாயில்லை அம்மா வின் ஆட்சி மீண்டும் மலர. .