உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திமுகவின் ஏக்நாத் ஷிண்டே இவர்தானா?

திமுகவின் ஏக்நாத் ஷிண்டே இவர்தானா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா. ஜ.,வின் இளம் எம்.பி., பெங்களூரைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா. இவருக்கு சமீபத்தில் திருமணமானது. பார்லி., குளிர்கால கூட்டத்தொடரின் போது, இந்த புது தம்பதிக்கு விருந்தளித்தார் மூத்த தலைவரான ஒரு தி.மு.க., - எம்.பி.,சபையில் எப்போதும் தி.மு.க.,வை கடுமையாக விமர்சிப்பவர் சூர்யா. அவருக்கு தி.மு.க., - எம்.பி., விருந்து கொடுத்தது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பா.ஜ., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்களும் இதில் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kbj2irsc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விருந்திற்கு ஏற்பாடு செய்த அந்த தி.மு.க., - எம்.பி., மீது, கட்சி தலைமைக்கு எப்போதும் அதிக நம்பிக்கையும் மரியாதையும் உண்டு. இதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கிட்டத்தட்ட, 60 தொகுதிகளை கவனிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாம்.இவரிடம், பா.ஜ., - எம்.பி.,யும், முன்னாள் அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் நல்ல தொடர்பில் உள்ளார்; இருவரும் அடிக்கடி பேசிக்கொள்கின்றனர்.தவிர, சபாநாயகர் ஓம் பிர்லாவும் இவருடன் நட்பில் உள்ளார். அத்துடன், சபாநாயகர் சபையில் இல்லாதபோது, அவருடைய நாற்காலியில் அமர்ந்து, அவையை கவனிக்க ஒரு குழு உண்டு. அதில் இந்த தி.மு.க., - எம்.பி.,யும் உள்ளார்.விருந்தளித்த விஷயம், தி.மு.க., - எம்.பி.,க்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வில் மூத்த தலைவரான இந்த எம்.பி.,க்கு, பா.ஜ., துாண்டில் போடுகிறதா? 'சிவசேனாவை இரண்டாக உடைத்து பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த ஏக்நாத் ஷிண்டே போல், இவரும் அடுத்த ஏக்நாத் ஷிண்டேவாக மாற போகிறாரா' என, தி.மு.க., வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sridhar G
ஜன 08, 2026 13:56

கனிமொழி ?


Natchimuthu Chithiraisamy
ஜன 05, 2026 12:28

திமுகவின் கீழ் மத்திய அரசு என்கிற கருதும் உள்ளது. மத்திய அரசு கிராம சாலைகள் அமைந்ததற்கு எங்கும் மோடி போட்டோவுடன் விளம்பரம் இல்லை ஏன் ?


பேசும் தமிழன்
ஜன 04, 2026 23:27

விருந்து கொடுத்தது.... நம்ம பாலு தானே ?


bharathi
ஜன 04, 2026 16:38

It is A Raja ..if that happened there is no scope for BJP anymore. Also A Raja has no importance other than his conflict speeches.


Vasantha Kumar
ஜன 04, 2026 14:53

திருச்சி சிவா


எஸ் எஸ்
ஜன 04, 2026 11:36

சபாநாயகர் இல்லாத போது அவர் இருக்கையில் சில சமயம் ஆ. ராசா அமர்ந்து இருப்பதை பார்த்திருக்கிறேன்


ஆரூர் ரங்
ஜன 04, 2026 10:45

பல்லு போன சிங்கம்.


raja
ஜன 04, 2026 10:38

யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லது நடக்கப் போவது கிடையாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை