உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை

தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “தி.மு.க., கூட்டணி, யாரும் இடித்து, தகர்த்தெறிய முடியாத இரும்புக் கோட்டைகளால் ஆன கூட்டணி,” என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.அவரது பேட்டி: 'தமிழக காவல் துறை முறையாக செயல்படவில்லை' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார். காவல் துறையை கட்டுப்படுத்துவது குறித்து, அவர் பேசி நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.பா.ம.க.,வை அவரது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ராமதாசும், அன்புமணியும், மேடையில் சண்டை போட்டுக்கொள்ளும் சூழல் உள்ளது. அவர் எங்கே தமிழகத்தை கட்டுப்படுத்த போகிறார்?இன்னும் எட்டு மாதங்களில், கூட்டணியிலிருந்து தி.மு.க., தனிமைப்படுத்தப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அது, அவரின் நப்பாசை. இந்த கூட்டணி ஏதோ அரசியல் லாபத்திற்காக ஏற்பட்ட கூட்டணி அல்ல; கொள்கை சார்ந்த கூட்டணி. இதை யாரும் இடித்து தகர்த்து எறிய முடியாத இரும்புக் கோட்டைகளால் ஆன கூட்டணி.யாரெல்லாம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனரோ, அவர்களுக்கெல்லாம் ஆதரவளிக்கிற, கர்நாடக 'டூப் போலீஸ்' தான் அண்ணாமலை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மார் 03, 2025 23:29

இரும்புக்கை சொன்ன பிறகு சட்டம் ஒழுங்கு மொத்தமா கேள்விக்குறி. அடுத்தது இரும்பு கோட்டையா?


Bhakt
மார் 03, 2025 22:50

தீயமுகவே முழுவதுமாக துரு பிடித்துவிட்டது.எப்போது வேணும்னாலும் இடியலாம்.


தமிழ்
மார் 03, 2025 20:36

இரும்புகை எப்படி இருந்துச்சுனு பார்த்துட்டோம் . இப்ப இரும்பு கோட்டை.


ஜான் குணசேகரன்
மார் 03, 2025 19:46

பணக் கோட்டை


Kjp
மார் 03, 2025 19:07

திமுக கூட்டணி கோட்டை இரும்பு கோட்டை என்றால் திமுக என்ன கோட்டை.என்ன கோட்டை.அதிமுக வில் இருந்த போது கலைஞரை தரக் குறைவாக விமர்சித்தவர்.


எவர்கிங்
மார் 03, 2025 18:30

அதான் துரு பிடித்து பாவாடையை கிழிக்குது


Rajasekar Jayaraman
மார் 03, 2025 17:43

அப்போப்போ சொல்லி நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் அப்போது தான் குதிரை பேரம் கூட்டணி கட்சிகள் பேச வசதியாக இருக்கும்.


theruvasagan
மார் 03, 2025 17:41

தலீவரு இப்படியே தலைகால் புரியாம தப்பாட்டம் ஆடிட்டு இருந்தாஇத்துப்போன இரும்புக் கோட்டையாயிடும். அதை போட்டு பேரீச்சம் பழம் வாங்கக் கூட லாயக்கில்லாத மாதிரி ஆகிவிடும்.


ராமகிருஷ்ணன்
மார் 03, 2025 16:41

கூவம் சாக்கடையில் 50 வருடங்கள் ஊறிப்போன ஊளுத்துபோன இரும்பாலான கோட்டை தான் திமுக, அண்ணாமலையின் ஒரு கையால் பிடித்து உழுக்கினால் பொடிப் பொடியாய் உதிர்ந்து போய்விடும் பாபு.


raja
மார் 03, 2025 16:12

உங்களை ஆதரிக்க ஒரு ............. கூட்டம் இருக்கிற திமிர்த்தனத்தில் பேசுங்க எசமான் பேசுங்க என்ன செய்ய கலிகாலம்.....