உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பாதிரியார்கள்; முறியடிக்க தி.மு.க.,வும் எதிர் பிரசாரம்

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பாதிரியார்கள்; முறியடிக்க தி.மு.க.,வும் எதிர் பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிறிஸ்தவ வன்னியர்களை, எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை, தி.மு.க., அரசு நிறைவேற்றாததால், அவர்களின் ஓட்டுக்களை, விஜய் கட்சிக்கு திருப்பி விடும் திட்டத்தில், சில கத்தோலிக்க பாதிரியார்கள் களமிறங்கி உள்ளனர். அதை முறியடிக்க, தி.மு.க., தரப்பும் எதிர்பிரசாரத்தில் இறங்கி உள்ளது.வன்னியர் சமுதாயத்தினர், எம்.பி.சி., எனும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தாலும், அதில் கிறிஸ்தவ மதத்தை தழுவியர்கள் என்பதால், சட்டரீதியில் அவர்களை அந்த பட்டியலில் சேர்க்க முடியாது. அதன் காரணமாக, இடஒதுக்கீடு உள்ளிட்ட பலன்களை, அவர்களால் பெற முடியவில்லை.எனவே, கிறிஸ்தவ வன்னியர்கள், தங்களையும் எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். அதை ஏற்ற தி.மு.க., தலைமை, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாக, 2021ம் ஆண்டு தேர்தலின்போது உறுதி அளித்தது. இதுவரை, அக்கோரிக்கையை தி.மு.க., அரசு நிறைவேற்ற முன்வராததால், அதிருப்தி அடைந்த கிறிஸ்தவ வன்னியர்கள், திண்டுக்கல்லில் இடஒதுக்கீடு கோரிக்கையை மையப்படுத்தி மாநாடு நடத்தினர். அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிஷப் தாமஸ் பால்சாமி பேசுகையில், 'வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், யாருக்கு ஓட்டளிப்பது குறித்து, தமிழக ஆயர் பேரவை கூடி முடிவெடுக்கும்' என்றார்.அதே மாநாட்டில், வட மாவட்டத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் பேசுகையில், 'தி.மு.க., அரசு, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், விஜய் கட்சிக்கு கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை திசை மாற்றி விடுவோம்' என எச்சரித்தார்.அவரது பேச்சுக்கு, அம்மாநாட்டில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களிலும், அதை வலியுறுத்தி ஆதரவு பிரசாரம் செய்யப்பட்டது. கத்தோலிக்க பாதிரியார் சிலர், தி.மு.க.,வுக்கு எதிராக செயல்படும் தகவல், முதல்வருக்கு தெரிய வந்ததும், தலைமை செயலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம், கிறிஸ்தவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும், தி.மு.க.,வில் உள்ள கிறிஸ்தவ நிர்வாகிகள், 'யு டியூப்' நெறியாளர்கள் வாயிலாக, சமூக வலைதளங்களில், 'விஜய்க்கு ஓட்டளிக்காதீர்கள்' என்ற தலைப்பில், எதிர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக, அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், 40 சதவீதம் ஓட்டுக்களை பெற வேண்டும். குறைந்தபட்சம், 35 சதவீதத்துக்கு மேல் எடுக்க வேண்டும். இந்த தேர்தலில் விஜய் கட்சியால், 40 சதவீதம் ஓட்டுக்களை வாங்க முடியாது. எனவே, அவர் உறுதியாக ஆட்சியை பிடிக்க முடியாது. இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், விஜய் கிறிஸ்துவர் எனக்கருதி, அவருக்கு ஓட்டு போட்டால், அது விஜய்க்கு போடுகிற ஓட்டு அல்ல; மறைமுகமாக பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு செலுத்துகிற ஓட்டு. அப்படி கிறிஸ்தவர்கள் அணி மாறி ஓட்டுப் போட்டால், தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அதன்பின், உங்கள் கோரிக்கை ஒரு நாளும் நிறைவேறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 10, 2025 19:37

கிறுத்தவர்களின் வெளிநாட்டு பணபலம் தெரிந்ததே. மதத்தை பரப்ப வெறி கொண்டு திரிவார்கள். இந்துக்களின் எழுச்சி அவர்களின் இலக்கை பாதித்து விட்டது. அரசியல் பலம் அவர்களுக்கு உதவலாம் என்று TVK தலைமையில் இணைகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள் மாற மாற இந்துக்களின் ஒற்றுமை உணர்வு மேன்மேலும் உயரும். மத ஓட்டு வங்கி மாறும். திமுகவின் கிறுத்தவ முஸ்லிம் ஓட்டு வங்கி நிச்சயம் சரியும். நல்லதே நடக்கும்.


Jagan (Proud Sangi )
ஜூன் 10, 2025 18:45

அங்கு தான் ஜாதி ஏற்ற தாழ்வு இல்லையே, எல்லோரும் சமமே அப்புறம் எதற்கு இடஒதுக்கீடு ? நிச்சயம் குடுக்க கூடாது


naranam
ஜூன் 10, 2025 17:56

சபாஷ்! திமுகவின் கிறிஸ்தவ வாக்குகளை விஜய் நிச்சயம் பிரிப்பார். அதிமுக பா.ஜ.,கூட்டணி முன்னணி!


naranam
ஜூன் 10, 2025 17:11

முள்ளக்கல் போன்ற பாதிரியார்கள்‌ தவெக வில் ஆதிக்கம் செலுத்தினால் விஜய் நிச்சயம் தோற்பார் .


Kulandai kannan
ஜூன் 10, 2025 15:42

சபாஷ், சரியான போட்டி. ஆமாம், மதம் மாறியவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு? வழக்கம்போல் அதிமுக வாயில் வாழைப்பழம்.


Anand
ஜூன் 10, 2025 14:28

இந்த கூத்தாடிக்கு பத்து பாதிரியார்கள் ஒட்டு நிச்சயம்


Murugan
ஜூன் 10, 2025 12:34

பெயர் நீக்கனும் இவனுகள


கண்ணன்
ஜூன் 10, 2025 12:31

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்


Kalyanaraman
ஜூன் 10, 2025 10:30

விஜய் கட்சி, திமுகவின் பி டீம் என்ற கருத்தை மாற்றவே இந்த பேச்சு.


Shekar
ஜூன் 10, 2025 16:54

B டீம் தான், ஆனால் விளைவு எதிர்மறை ஆகிறது. திமுக எதிர்ப்பு ஓட்டை பிரிக்க தவெக இறக்கப்பட்டு அவர்களும் திமுக வை எதிர்ப்பது போல நடிக்கின்றனர், ஆனால் உண்மையில் அது திமுக ஓட்டையும் பதம் பார்க்கிறது


பேசும் தமிழன்
ஜூன் 10, 2025 09:23

அட அவனே திமுக B டீம் தான்.. தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் ஐக்கியமாகி விடுவான்.. அல்லது தேர்தலை புறக்கணிப்பதாக கூறுவான் பாருங்கள்! இந்து ஓட்டுக்களை பிரிப்பதற்காக தான் இந்த தனி கட்சி நாடகமே !!!


Haja Kuthubdeen
ஜூன் 10, 2025 16:08

அண்ணாமலை கூடத்தான் திமுகவின் ஏதோ ஒரு டீம்னு பேச்செல்லாம் வருது...விஜய் கிருத்தவர்களின் ஓட்டை பிரிப்பார்..பிரிக்கிறார் என்று நல்லாவே தெரியுது..அவுரு எப்டியா பி டீம்!!!