உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிராமண சமூகத்தினருக்கு சீட்; தி.மு.க., பிரசார வியூகம்

பிராமண சமூகத்தினருக்கு சீட்; தி.மு.க., பிரசார வியூகம்

நலிந்த பிராமணர்களுக்கு நல வாரியம் அமைக்கும் வாக்குறுதியை, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., செயல்பட்டபோது, பிராமண சமூகத்தினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பிராமணர் சமூகத்தினருக்கு, 'சீட்' வழங்கினார். தற்போது, 2026 சட்டசபை தேர்தலை, பா.ஜ., கூட்டணியுடன் அ.தி.மு.க., சந்திக்கிறது. எனவே, இரு கட்சிகளிலும், பிராமணர் சமூகத்தினருக்கு, 'சீட்' வழங்கப்படும். தி.மு.க.,வில் பிராமணர் சமூகத்தினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதில்லை என்ற அதிருப்தி நீடித்து வருகிறது. எனவே, வரும் சட்டசபை தேர்தலில், 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற அடிப்படையில், பிராமண சமூகத்தினருக்கு 'சீட்' வழங்குமாறு, முதல்வரிடம் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிராமண சமூகத்தினருக்கு சில தொகுதிகளை ஒதுக்கினால், 'சமூக நீதி, எல்லாருக்கும் எல்லாம்' என்ற இலக்கு நிறைவேறும் என, தி.மு.க., தலைமையும் கருதுகிறது. பிராமண சமூகத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றினால், அவர்களின் ஓட்டு தி.மு.க.,வுக்கு கிடைக்கும் எனவும், பிராமணர் நல வாரியம் அமைக்கும் கோரிக்கையை தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யவும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும் போட்டி இருக்கும். சில லட்சம் ஓட்டுகள் வித்தியாசம் கூட, ஆட்சியை நிர்ணயிக்கலாம். தமிழகத்தில் பிராமண சமூகத்தினர், 40 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில், 5 லட்சம் பேர் வறுமை நிலையில் உள்ளனர். எனவே, பிராமணர்களின் ஓட்டுகளை கவர, தி.மு.க., திட்டம் வகுத்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில், நலிந்த பிராமணர்களின் கல்வி, சமூக மேம்பாட்டிற்காக, 'பிராமணர்கள் நல வாரியம்' அமைத்து, 50 கோடி ரூபாய் வரை வழங்கி உள்ளனர். அதேபோல், முதல்வர் ஸ்டாலினும் வழங்கினால், நலிந்த பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தி.மு.க.,வுக்கு ஆதரவாக மாறுவதோடு, அது தி.மு.க., ஆட்சி அமையவும் உதவும். எனவே, பிராமணர் ஓட்டு வங்கிக்காக, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது உட்பட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து, தி.மு.க., தலைமை ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

மாபாதகன்
செப் 16, 2025 12:09

பயங்கர தமாஸு?


Padmasridharan
செப் 15, 2025 08:51

நடிகர் கமலஹாசன் வந்துட்டாரோனோ சாமி. .


BalaG
செப் 15, 2025 00:04

பிராமணரை முதலமைச்சராக உட்கார வைத்தால் கூட, பிராமண சமூகம் தி மு க-வை நம்பாது. ஏனென்றால் செய்த அட்டூழியங்கள் அப்படி.. அதனால் தி மு க அதற்கு முயற்சி செய்வது வேஸ்ட்


Harshavardhan
செப் 14, 2025 22:16

இதுல நடக்குற மாதிரி இருக்கு


pakalavan
செப் 14, 2025 22:12

திமுக வெற்றிபெறுவது்உருதியாகிவிட்டது,, திமுக கூட்டனி -212 , பாஜக -0 அதிமுக -20 விஜய்-1 சைமன்-1


Balasubramanian
செப் 14, 2025 22:11

மூன்று சதவிகிதம் தமிழகத்தில், ஆக 234 க்கு 7 சீட் ஒதுக்கித் தாருங்கள் - என்று அவர்கள் கேட்கவா போகிறார்கள், கேட்டாலும் தந்து தான் விடுவாரா?


Tamilan
செப் 14, 2025 21:31

திமுகவில் எப்போதும் பிராமணர்கள் இருக்கிறார்கள்


Krishnamurthy Venkatesan
செப் 14, 2025 20:00

இவர்களின் சார்பாக போட்டியிடும் ப்ராஹ்மணன் டெபாசிட் இழப்பான்.


K V Ramadoss
செப் 18, 2025 20:21

பிராமணர்களே அந்த பிராமணனுக்கு ஒட்டு போடமாட்டார்கள்..


Nachiar
செப் 14, 2025 19:25

ப்ரம்மண சமூகத்தை நாட்டை விட்டு வெளியேற செய்ததால் நாட்டுக்குத் தான் இழப்பு. அவர்கள் சென்ற நாடுகளுக்கு லாபம் தான்.


Natarajan Mahalingam
செப் 14, 2025 18:38

வாய்ப்பில்லை ராஜா S Ve sekar அல்லது அவர் மகனிற்கு MLA seat கிடைக்கலாம். இந்த குடும்பம் தவிர மற்றபடி பிராமண சமூகம் திமுக என்ற துரோகிகளை என்றும் நம்பாது.


முக்கிய வீடியோ