சென்னை: ''ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பதிலாக, தி.மு.க., கொடுக்கப் போவதை வெளியில் சொல்ல முடியாது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துஉள்ளார்.அவர் அளித்த பேட்டி:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=67rzh5yy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கிணங்க, காங்கிரஸ் தலைமையும், தமிழக காங்கிரஸ் தலைமையும் ஆலோசித்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. 10 மாதங்களே இருப்பதால், தி.மு.க., போட்டியிடக் கோரியதால் விட்டுக் கொடுத்திருக்கிறோம்.காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு, பகலாக பாடுபட்டு, தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம்; களத்தில் கடுமையாக பணியாற்றுவோம்.ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட, இளங்கோவன் மகன் சம்பத் உட்பட ஏழு பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதனால், போட்டியிட யாரும் முன்வரவில்லை என கூறுவது தவறு. காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்பர். காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது தான் உண்மையான தோழமை. வரும் 2026 சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை தி.மு.க., கொடுக்கும்; அதற்கான நம்பிக்கை எங்களிடம் உள்ளது.இப்போது, ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறோம் என்றால், இன்னொரு உதவியையோ, உரிமையையோ காங்கிரசுக்கு தி.மு.க., கொடுக்கும்; அதை வெளியில் சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.