உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., விமர்சனம்: கமல் கட்சியினர் அதிருப்தி

தி.மு.க., விமர்சனம்: கமல் கட்சியினர் அதிருப்தி

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில் தி.மு.க., சார்பில் நடந்த ஓரணியில் தமிழகம் உறுதிமொழி ஏற்பு கூட்டத்தில், ''தி.மு.க.,வை விமர்சிக்கும் விஜய்க்கும், எதிர்காலத்தில் நாம் ராஜ்யசபா சீட் தரும் நிலை வரும்,'' என அமைச்சர் பெரியகருப்பன் பேசியுள்ளது, மக்கள் நீதி மய்யம் கட்சியினரை அதிருப்தியடைய வைத்து உள்ளது.

பெரியகருப்பன் பேசியதாவது:

நடிகர் கமல் பல விருது பெற்ற நடிகர். அவரைப் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்து முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. என்றாலும், முதல்வர் அரவணைத்து ராஜ்யசபா எம்.பி., ஆக்கினார். தற்போது தி.மு.க.,வை விமர்சிக்கும் விஜய்க்கும், எதிர்காலத்தில் நாம் ராஜ்யசபா சீட் தரும் நிலை வரும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pu41bzbp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க.,வை எதிர்த்தவர்கள் பலரும் இப்போது தி.மு.க.,வில் தான் உள்ளனர். அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம், தினகரன்அனைவரும் இருந்த நிலையில் கூட்டணி பலம் இருந்தும் ஜெயிக்க முடியாத பழனிசாமி, 2026ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து முதல்வராவோம் என்று நினைக்கவில்லை. அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தான் எதிர்பார்க்கிறார். கட்சியை தக்க வைத்துக் கொள்ளதான் பழனிசாமி திட்டமிட்டுஉள்ளார். இவ்வாறு பெரிய கருப்பன் பேசினார்.

கூட்டணி தலைவரை விமர்சிப்பதா?

இது குறித்து, மக்கள் நீதி மய்யம் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

நடிகர் விஜயை விமர்சித்துப் பேசுகிறோம் என்ற பெயரில் எங்கள் தலைவர் கமலை கிண்டல் செய்து பேசி உள்ளார் அமைச்சர் பெரிய கருப்பன். அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., தலைவர்களும் நிர்வாகிகளும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மனம் வருந்தும்படி பேசக் கூடாது என முதல்வர் ஸ்டாலின், கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும். முக்கியமான காலகட்டத்தில் நடிகர் கமல், தி.மு.க., கூட்டணியில் இணைந்து, லோக்சபா தேர்தலில், தி.மு.க., 39 இடங்களை வெல்ல உதவிகரமாக இருந்தவர் என்பதை தி.மு.க.,வினர் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

R K Raman
செப் 26, 2025 13:09

உண்மையைச் சொன்னால் ஏன் கோபம் வருகிறது? டிவியை உடைத்தால் மட்டும் போதுமா?


Padmasridharan
செப் 24, 2025 18:22

மக்கள் ஏதோ தனியாக நின்று எதிர்க்கிறாரென்று கமலுக்கு போட்ட ஓட்டுக்களை மதிக்காமல் கூட்டணி சேர்ந்தப்பவே மானம் போய்விட்டது, இப்பொழுது வெறும் வாயால் பேசுவதனால் மட்டும் வருந்தினால் போதுமா சாமி. இவருக்கு முன்பு போட்ட வோட்டுக்களும் விஜயம் செய்யும் கட்சிக்கு 2026 இல் மாறப்போகிறது.


duruvasar
செப் 24, 2025 15:07

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு என்ற பாட்டில் கமல் என்னமா கம்பு சுத்துவார் . அந்த கம்பு சுத்தும் போட்டியில் பெற்ற வெற்றிக்கு கிடைத்த பரிசுதான் ராஜ்ய சபா எம்.பீ பதவி.


senthilanandsankaran
செப் 24, 2025 08:45

கமலஹாசன் நடிகர்களுள் அறிவாளி , அறிவாளிகளுள் நடிகர் ...ஒரு சுயநல பேய் .


bharathi
செப் 23, 2025 15:56

Slaves has no say.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 23, 2025 13:35

மக்கள் நீதி மையம் என்ற ஒரு கட்சி இருந்தது அதில் உறுப்பினர் நிர்வாகிகள் என்று இருந்தது உண்மை தான். ஆனால் இன்னுமா மக்கள் நீதி மையம் உயிரோடு உள்ளது. இந்த மக்கள் நீதி மையம் ஆரம்பித்த போதே நான் சொன்னேன் இது திமுகவின் கிளை கட்சி. திமுக தான் ஆரம்பித்தது என்று. ஆனால் பலரும் நம்பவில்லை. இறுதியில் என்னாயிற்று கமல் தனக்கு திமுக இட்ட பணியை செவ்வனே செய்து முடித்து முதலில் மநீமை நிர்வாகிகளை திமுகவில் இணைத்து விட்டு பின்னர் தானும் திமுகவில் ஜக்கிய மாகி ராஜ்ய சபா எம்பி ஆகி விட்டார். இனி மநீமை கட்சி திமுகவின் தேர்தல் செலவினத்தை தேர்தல் கமிஷனுக்கு அட்ஜெஸ்ட் செய்து காட்டப்போகும் ஒரு லெட்டர் பேடு கட்சி தான். நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகள் தங்கள் தாயாரிக்கும் பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் அடிக்கடி லேபிள் கவர் கவர்கள் அதில் உள்ள வாசகங்கள் மற்றும் அதன் விளம்பரத்தில் நடிப்பவர்களை மாற்றி கொண்டே இருக்கும். அப்பொழுது தான் மக்களுக்கு சலிப்பு வராது. இதே ஃபார்முலாவை பின்பற்றி தான் திமுக இப்போது தவெகவை உருவாக்கி உள்ளது. இதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி கொண்டு உள்ளேன். இதனை மந்திரி அவர்கள் உறுதி படுத்தி உள்ளார்கள்.


ஆதிநாராயணன்
செப் 23, 2025 13:35

எல்லாம் சரி தான்


Venkatraman Ravishankar
செப் 23, 2025 12:33

சரியான...........


RRR
செப் 23, 2025 11:21

"மக்கள் நீதி மய்யம் கட்சியினரை அதிருப்தியடைய வைத்து உள்ளது"??? மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் உட்பட கட்சியே காலாவதி ஆகிவிட்டதே... அந்தக்கட்சியில் "கட்சியினர்" எங்கே இருக்கிறார்கள்...?


R K Raman
செப் 26, 2025 13:17

சூப்பர்


theruvasagan
செப் 23, 2025 09:33

அந்த கட்சி இன்னுமா இருக்கு. அதுல உறுப்பினர் வேற இருக்காங்களா. ஒட்டு மொத்தமாக தன்னையும் சேர்த்து விற்றுவிட்டு கிரயம் வாங்கினவங்க காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடி பதவி வாங்கியாச்சே. அப்புறம் என்ன கட்சி கத்தரிக்கா மானம் ரோஷம் இத்தியாதி எல்லாம்.