தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 200 தொகுதிகளில் களமிறங்க, தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vmswf6d3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 24 அணிகளின் நிர்வாகிகளிடம், தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. கருத்து
எந்தெந்த தொகுதிகளில் தி.மு.க., மீண்டும் வெற்றி பெறும் என்பது குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு குறித்தும், அந்த கூட்டங்களில் அலசப்பட்டு வருகிறது.இதில், 'கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற எண்ணிக்கை அடிப்படையில், வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு தொகுதிகள் ஒதுக்கினால் போதும். ஆளுங் கட்சியாக இருப்பதால், 200 தொகுதிகளில் போட்டியிட்டு, தி.மு.க.,வால் வெற்றி பெற முடியும்' என, பெரும்பான்மை நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 174 தொகுதிகளில் போட்டியிட்டு, 125ல் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு, 25 தொகுதிகள் ஒதுக்கியும், 18ல் தான் வெற்றி பெற்றது. தற்போது, ஆளும் கட்சியாக இருப்பதால், 200ல் போட்டியிட்டால் தான், 150 தொகுதிகளை கைப்பற்ற முடியும் என, தி.மு.க., கருதுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற, அதே எண்ணிக்கை தொகுதிகளை மட்டும், இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவும், தி.மு.க., ஆலோசித்து வருகிறது. புதிய வரவான கமல் உட்பட, கூட்டணி கட்சிகளுக்கு, 34 தொகுதிகள் மட்டும் ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 200 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடும் வகையில் தொகுதி பங்கீட்டை அமைத்து கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 7 மண்டலங்கள்
இந்த வகையிலான தொகுதி பங்கீட்டுக்கு கூட்டணி கட்சியினர் எப்படி ஏற்றுக் கொள்வர் என்பது குறித்த ஆலோசனையும் நடக்கிறது.இதற்கிடையில், இப்பணிகளை திட்டமிட்டபடி செய்து முடிக்க, தி.மு.க.,வில், 7 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்திற்கு கனிமொழி, தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ள மண்டலத்திற்கு, அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்திற்கு அமைச்சர் சக்கரபாணியும், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.தஞ்சாவூர், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு, அமைச்சர் நேரு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு, அமைச்சர் வேலு ஆகியோர் பொறுப்பாளர்களாகி உள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா என, 7 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -