உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., மறுசீரமைப்பு குழுவால் கடும் அதிருப்தியில் நிர்வாகிகள்

தி.மு.க., மறுசீரமைப்பு குழுவால் கடும் அதிருப்தியில் நிர்வாகிகள்

மதுரை: சட்டசபை தேர்தலில் தி.மு.க., 59 தொகுதிகளிலும், கூட்டணியுடன் சேர்ந்து மொத்தம் 73 தொகுதிகளிலும் வென்றது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் ஆசை, த.வெ.க.,வின் அபார வெற்றியால் தகர்ந்தது. எனவே, தோல்விக்கான காரணங்களை ஆராய 38 பேர் கொண்ட குழுவை தி.மு.க., அமைத்தது. தொகுதிவாரியாக களஆய்வு நடத்திய அந்த குழு, 34 மா.செ.,க்கள் மீது நடவடிக்கை, 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மா.செ., என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை, ஸ்டாலினிடம் முன்வைத்தது. அந்த அறிக்கையின்படி நடவடிக்கைகளை எதிர்பார்த்து நிர்வாகிகள் காத்திருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ydy0mw63&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், 'உடன்பிறப்பின் குரல்' எனும் ஆன்லைன் நிகழ்ச்சியில் 6 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்தபடி, தி.மு.க., மறுசீரமைப்புக் குழு அமைத்துள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார். இதன் வாயிலாக, தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்த குழுவின் பரிந்துரையை தி.மு.க., தள்ளிப்போடுகிறதா என கட்சிக்குள் அதிருப்தி உருவாகியுள்ளது. தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தேர்தல் தோல்வி குறித்த ஆய்வுக்குழு அறிக்கை மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால் நடவடிக்கை எடுத்தால் த.வெ.க.,விற்கு ஓடிவிடுவர் என தலைமை அஞ்சுகிறது. இதனிடையே, வரும் 5ம் தேதி லண்டன் செல்லும் ஸ்டாலின் குடும்பத்தினர், 20ம் தேதி திரும்புகின்றனர். அதுவரை அதிருப்தி நிர்வாகிகள் த.வெ.க.,வுக்கு தாவி விடக் கூடாது என்பதற்காக மறுசீரமைப்பு குழுவை ஸ்டாலின் நியமித்துள்ளாரோ என்று தான் தோன்றுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பைரவன்
ஜூலை 02, 2026 20:10

லண்டனுக்கா? முன்னாள் திராவிஷ அமைச்சர் நேருவின் அறிவுரைப்படியா? சம்பாரித்த சொத்தை பத்திரப் படுத்திக் கொள்ளவா?


sankaranarayanan
ஜூலை 02, 2026 19:27

இங்கே தோற்கடிக்கப்பட்டவுடன் லண்டன் சென்று அங்கே கட்சியை தொடங்கி பேராண்டியை அரசியலில் இழுக்க முயற்சியோ நடைபெறாது இங்கே திரும்பி வருமுன்னே கட்சியில் பலர் காணாமல் போயிடுவார்கள் இங்கே புள்ளையாண்டானினால் ஆட்சியே போச்சு அங்கே பேராண்டியினால் கொஞ்சநஞ்சம் இருக்கும் ஆசையும் போச்சு டோப்பாவின் மகிமைதான் காரணம்


duruvasar
ஜூலை 02, 2026 10:45

நடவடிக்கை அப்படி இப்படி ஏதாவது எடுத்தால் முதலில் ஓடுபவது வடசென்னை வஸ்த்தாதுவாகதான் இருக்கும். 3 FIR இருக்கு. எப்ப வேணுமானாலும் உள்ளாரா போயிடுவார்


duruvasar
ஜூலை 02, 2026 10:39

கவலைப்படாம போங்க தலைவா . திரும்பி வரும்போது அறிவாலயம் முழுவதும் ஒட்டடை அடித்து, புது வர்ணம் பூசி சும்மா பளிச்சுனு சீரமைச்சு வைக்கிறோம்


வில்லிபுத்தூரான்
ஜூலை 02, 2026 10:20

அப்பா குடும்பம் மட்டும் பெருங்கொள்ளை அடித்தது.இப்போ அதன் விளைவை அனுபவிக்கிறது


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 02, 2026 10:12

இனி தலை கீல நின்னாலும் ஒன்னும் நடக்காது என்பது கூடிய விரைவில் தெரியவரும்.


Tamilan
ஜூலை 02, 2026 08:53

அதிருப்தியே இல்லாத கொத்தடிமைகள் நிறைந்த சர்வாதிகார கட்சி நாட்டில் ஒன்றே ஒன்றுமட்டும்தான் .


krish
ஜூலை 02, 2026 15:18

அது திமுக தானே


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை