உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய்க்கு எதிராக கமலை களமிறக்குகிறது தி.மு.க.,

விஜய்க்கு எதிராக கமலை களமிறக்குகிறது தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை நடக்கிறது. ம.நீ.ம., வட்டாரங்கள் கூறியதாவது:ஜூலை மாதத்தில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., சார்பில், ம.நீ.ம., தலைவர் கமல் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட உள்ளார். நாளை நடக்கும் கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கிறார்.அதாவது, கட்சிக்கு குறைந்தபட்சம் 30,000 ஓட்டு வங்கி உள்ள தொகுதிகளை தேர்வு செய்து, அந்த பட்டியலை தி.மு.க.,விடம் கொடுத்து, தொகுதி உடன்பாடு செய்ய கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில், த.வெ.க., தலைவர் விஜய், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று, அவரது பேச்சுக்கு எதிராகவும், தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும் பேசுமாறு, கமலுக்கு ஆளும் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கான பயணத் திட்டமும், நாளைய கூட்டத்தில் வகுக்கப்பட உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

vinoth
மார் 21, 2025 21:11

Tvk will win in 2026


பேசும் தமிழன்
மார் 21, 2025 19:06

ஒரு சீட்டுக்காக.... என்னமா கூழை கும்பிடு போடுகிறான்.... மானம்.... கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு குனிந்து விட்டார்.


theruvasagan
மார் 21, 2025 18:19

தெருவோர வித்தைகாரன் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை என்று சொல்லி கூட்டத்தை சேர்க்கிற மாதிரி. ரெண்டுத்துக்கும் கண்ட்ரோல் வித்தைகாரன் கையில. ரெண்டுமே வித்தைகாரன் சொல்படி ஆடற டம்மி பீசுங்க.


Rajarajan
மார் 21, 2025 15:41

எதுக்கு உணர்ச்சிவசப்பட்டு தொலைக்காட்சியை உடைச்சீங்க ? இந்த ஒரு பதிலை மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்.


ராமகிருஷ்ணன்
மார் 21, 2025 14:31

மையத்தை வடிவேலு லெவலுக்கு இறக்கி விட்டார்கள் ஓடும் தண்ணீரில் சுழி மையத்தில் மாட்டிக் கொண்டது மாதிரி கமல் மாட்டிக் கொண்டு விட்டார்.


Ramachandran
மார் 21, 2025 14:01

Both clowns Useless jokers.


hariharan
மார் 21, 2025 13:38

வெத்துவேட்டு


vijai hindu
மார் 21, 2025 13:32

ஒரு அடிமையை எதிர்க்க ஒரு அடிமை


Padmasridharan
மார் 21, 2025 12:27

மொத்தத்துல கூட்டு கொள்ளைக்காரர்கள்


anonymous
மார் 21, 2025 11:15

ராஜ்ய சபா MP க்கு ஆப்பா?


புதிய வீடியோ