உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திமுக இளைஞரணியினர் இரு மடங்கு உழைக்கணும்: ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக இளைஞரணியினர் இரு மடங்கு உழைக்கணும்: ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தி.மு.க.,வின் பிரதான அணியாக கருதப்படும் இளைஞர் அணி, நேற்று 47ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க., இளைஞரணி செயலருமான உதயநிதி ஆகியோர், தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்: ஸ்டாலின்: நான் ஊட்டி வளர்த்த இளைஞரணி, 47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தனி அலுவலகம், தமிழகம் முழுதும் கிளை வரை நிர்வாகிகள் என, தி.மு.க.,வின் முன்வரிசை படையணியாக பணியாற்றும் இளைஞரணியின் தொண்டர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். இனி வரும் காலம், முன்பை விட, இளைஞரணி இரு மடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பை கொடுப்போம்; தி.மு.க.,வை காப்போம்; தமிழகம் காப்போம். உதயநிதி: தி.மு.க., நெருக்கடியில் இருந்த நேரத்தில், ஸ்டாலின் தலைமையில், 'மிசா' பேட்ஜை கொண்டு தொடங்கப்பட்ட இளைஞரணி, 47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கொள்கை பணி, மக்கள் பணிகளை, களத்திற்கும், காலத்திற்கும் ஏற்றார் போல் முன்னெடுக்க காத்திருக்கும் இளைஞரணியின், அடுத்த இன்னிங்சை ஆரம்பிக்கலாமா? இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

krishna
ஜூலை 21, 2026 22:34

EDHUKKU THALA OOH MEENDUM AATCHIKKU VANDHU LATCHAM KODIGALIL SURUTTAVA.


Ramesh Sargam
ஜூலை 21, 2026 20:53

காலையிலிருந்து மாலை வரை இரு மடங்கு உழைக்கணும். சாயங்காலம் பொழுதுபோனவுடன், ஒரு டோக்கன் வாங்கிண்டு டாஸ்மாக் போய் இருமடங்கு இலவசமா சரக்கு வாங்கி குடிக்கணும்.


முருகன்
ஜூலை 21, 2026 20:05

மீண்டும் வர பழைய ஆட்களை விடுவித்து புதியவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் ஆக்கபூர்வமான மக்கள் பிரச்சனைகளுக்கு மட்டும் குரல் கொடுக்க வேண்டும்


krishna
ஜூலை 21, 2026 23:22

OOPIS MURUGAN ENNA IPPADI KARUTHU.200 ROOVAA COOLIE CUT AAYIDUM JAKKIRADHAI.


V Venkatachalam Chennai -87
ஜூலை 21, 2026 15:50

இளைஞர் அணியா? இளைத்த அணியா? இப்ப எவனுமே இல்லாத இளைஞர் அணிக்கு இரு மடங்கு உழைக்கணும் ன்னு என்னா அட்வைஸ் வேண்டி கிடக்கு? யாருமில்லாத கடையில் இவிங்க டீ ஆத்துறாய்ங்க. அப்பறம் அந்த டீ யை இவிங்களேதான் குடிக்கோணும். போலி போலி எங்கும் எதிலும் போலி. மானங்கெட்டவுனுங்க.


VR Anandan
ஜூலை 21, 2026 15:18

என்ன தான் உழைத்தாலும் கட்சியில் அடிமட்ட தொண்டருக்கு பயனில்லை புதியவர்களுக்கு வழங்கப்படும் கட்சி பதவியை மரியாதையையிம் குறைக்க வேண்டும் கட்சி தாவல் என்பது பிஸ்னஸ் என்று நினைத்து வருபவர்களுக்கு வழங்கப்படும் பதிவியாலையே கழகம் பாதிக்க படுகிறது புதியவர்கள் குறைந்த பட்சம் 10 ஆண்டு உழைக்க வேண்டும்.


ருத்ரன்
ஜூலை 21, 2026 15:14

1947 இல் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஸ்டாலினால் குவாட்டர், பிரியாணி என்று ஊட்டி வளர்க்கப்பட்ட, 47 வருடம் ஓயாமல் உழைத்த, ஊபிஸ் களுக்கு இனி தான் விடுதலை என்று எடுத்து கொள்ள வேண்டும். அதே குடும்பம், அதே ஊபிஸ், அதே போஸ்டர் ஒட்டுவது, என்று இல்லாமல் திமுக இளைஞர்கள் இனி சிந்தித்து செயல் பட வேண்டும்.


surya krishna
ஜூலை 21, 2026 14:50

Appothuthaan naanum en kudumbatthinarum rajaboga vazhalkai vazha mudiyum


VRM
ஜூலை 21, 2026 10:29

ஏன் நீங்க உங்க பேமிலியோடு கூத்தடித்து வாழவா..??


theruvasagan
ஜூலை 21, 2026 08:51

ஆமாம். கொத்தடிமைகள் உயிரைக் கொடுத்து இன்னும் நல்லா உழைக்கணும். 30000 கோடி இன்னும் பலமடங்காக பெருகணும்.


குத்தூசி
ஜூலை 21, 2026 08:47

கொத்தடிமைகள் உழைப்பில் ஜாலியாக இருக்கணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை