உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வின் பி டீம் விஜய்; அ.தி.மு.க.,வை உஷார்படுத்த பா.ஜ., திரட்டிய பகீர் தகவல்

தி.மு.க.,வின் பி டீம் விஜய்; அ.தி.மு.க.,வை உஷார்படுத்த பா.ஜ., திரட்டிய பகீர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கூட்டணியில் சேர, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, அ.தி.மு.க., தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. அதை, விஜய் ஏற்கவில்லை. 'தி.மு.க.,வின், 'பி டீம்' தான் விஜய்; எத்தனை முறை அழைத்தாலும், அவர் கூட்டணிக்கு வர மாட்டார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் தெரிவிக்க, பா.ஜ., மேலிடம் ஆதாரங்களை திரட்டி வருகிறது.இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. தேர்தல் நெருக்கத்தில், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்த்தால், அக்கட்சிகளின் தொண்டர்கள் இடையே, தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. இது, தேர்தல் வெற்றிக்கு உதவுவதில்லை என்பதை, உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட நம்புகிறார்.எனவே தான் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்னதாக, கூட்டணியில் கட்சிகளை சேர்த்து, தேர்தலுக்குள் அக்கட்சிகளின் தொண்டர்கள் இடையிலான உறவை பலப்படுத்த, அமித் ஷா விரும்பினார். இதற்காகவே, கடந்த ஏப்ரலில், சென்னை வந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, இரு கட்சிகளின் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.த.வெ.க.,வை கூட்டணியில் சேர்க்க, விஜயுடன் பா.ஜ., மேலிடம் பேச்சு நடத்தியது. அதை அவர் ஏற்கவில்லை. 'பா.ஜ., உடன் கூட்டணி இல்லை' என, அறிவித்து விட்டார். இருந்தபோதும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பழனிசாமி, விஜய்யை கூட்டணிக்கு வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார். அதை விஜய் பொருட்படுத்தவே இல்லை. தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள விஜய், தன்னை முதல்வர் வேட்பாளராக கருதுகிறார்.அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் உறுதியாக வர மாட்டார். ஏனெனில், அவர் தி.மு.க.,வின், 'பி டீம்' போல் செயல்படுகிறார். கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்த மக்கள் நல கூட்டணியை அ.தி.மு.க., பயன்படுத்திக் கொண்டது போல, வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வை வீழ்த்த விஜயை பயன்படுத்த தி.மு.க., விரும்புகிறது. அதாவது, தி.மு.க., அரசு மீதான அதிருப்தி ஓட்டுக்கள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு சென்று விடக்கூடாது; அந்த ஓட்டுகளை விஜய் பிரிக்க வேண்டும் என்பதே தி.மு.க.,வின் எண்ணம்.இதையறிந்ததும், விஜயின் நகர்வுகள் அனைத்தையும் பா.ஜ., உன்னிப்பாக கவனித்து வருகிறது. 'தி.மு.க.,வுக்கு எதிராக கட்சி நடத்துங்கள். அதேநேரம், அ.தி.மு.க., உட்பட எந்த கட்சியுடனும், கூட்டணி சேரக்கூடாது. இதுவே, எங்கள் விருப்பம்' என, தி.மு.க., தரப்பில் இருந்து, விஜய்க்கு சொல்லப்பட்டிருக்கும் தகவலையும் பா.ஜ., தரப்பு அறிந்து கொண்டு விட்டது. இவ்விபரங்களை பழனிசாமியிடம் தெரிவிப்பதோடு, 'விஜயை கூட்டணிக்கு அழைப்பதை விட்டுவிட்டு, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து, தேர்தலை சந்திக்கலாம்' என, அவரைக் கேட்டுக்கொள்ள பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ramesh Sargam
ஜூலை 23, 2025 21:56

திமுகவின் B டீம் விஜய். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.


S Srinivasan
ஜூலை 23, 2025 20:24

This is absolutely right... vijay is like kamalahassan, they are now telling on the promise of kuran and splitting muslim vote, vijay cannot spend this much money from his own coffers it is highly confidential money support given by DMK only cream of people in dmk knows this... அரசியல் இதெல்லாம் விளையாட்டு விஜய் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்


Oviya Vijay
ஜூலை 23, 2025 20:08

பாஜகவ நட்டாத்துல விட்டுட்டு அதிமுக போயிருவாங்களோ அப்படிங்கிற பயம் சங்கிகளுக்கு வந்திருச்சு ... அதனால தான் இந்த மாதிரி ஏ டீம் பீ டீம் அப்டின்னு எல்லாம் இப்போ ஏ பீ சீ டி படிச்சுக்கிட்டு இருக்காய்ங்க...


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 23, 2025 21:11

ஹா ஹா ஹா.. ரெம்ப சரி..


சங்கி
ஜூலை 23, 2025 22:00

பேருலயே தெரியுது நீ யாருன்னு.


ஆரூர் ரங்
ஜூலை 23, 2025 19:46

கொள்கைகளைப் பார்த்தால் திமுகவுக்கும் தவெக வுக்கும் சிறிதளவு கூட வித்தியாசமில்லை. அப்புறம் என்ன கூந்தலுக்கு தனிக்கட்சி?. ஊரை ஏமாற்றும் வேலை.


M Ramachandran
ஜூலை 23, 2025 18:41

தேர் கருதைய்ய அந்த முன்பேயே எழிதியிருந்தேன். கட்சியை ஆரபிச்ச உடனேயே அது தா ஜோஆஷா கூறி விட்டாரெ. கொலைக்கையாவது உலக்கையாவது. தீ யா முக்க கொள்கைய்ய அச்சு பிரிதியை தான் அஜெண்டா வாக ஊர் வள்ளியய் ஒழிப்பது தான் வருமான வரி துறையை யேமாற்றியது சொகுசு கார் இறக்குமதியில். இல்லாத இந்துத்துவா கொள்ளகையை எதிர்ப்பது கிறிஸ்டியானிடியை வளர்ப்பது அப்படியென சிறுபாண்மையிய என்று கூறி தேர்தல்முடிந்ததும் லாலி பாப் கொடுப்பது, யேமந்த சோணாகிரியன்கங்கள் ஜால்றா தட்டும் விசிலடிச்சான் குஞ்சுகள் தலையில் மிளகாய் அரைத்து திரிசாவை அண்ணியாக்குவது. அப்புறம் தைய்ய கலக்கத்துடன் ஐக்கியமாகி விடுதல்.


பாரத புதல்வன்
ஜூலை 23, 2025 18:38

விசிலடிச்சான் குஞ்சுகளை நம்பி வீர வசனம் பேசும் சோசப்பு தேர்தலுக்கு அப்புறம் வெளி நாட்டில் சூட்டிங், பொறுத்திருந்து பாருங்கள் மக்களே.... தேர்தலில் மக்களின் தீர்ப்புகள் சினிமா வசனம் போன்றது அல்ல... நிஜத்தில் தீவிரமான தாக்கத்தினை மக்கள் கூத்தாடிக்கும், குடியல் மாடலுக்கும் வழங்குவார்கள்.


V RAMASWAMY
ஜூலை 23, 2025 18:07

If EPS announces that he is agreeing for an alliance Government, many parties would join NDA-AIADMK alliance and they will win for sure.


Kadaparai Mani
ஜூலை 23, 2025 17:17

விஜய் அதிமுகவிற்கு நண்மை செய்ய போகிறார் .விஜய் தனியாக நின்றால் அவர் பிரிக்க போவது திமுக ஓட்டைதான் .இப்போது எடப்படியாருக்கு வரும் கூட்டத்தை பார்த்தால் திமுக எதிர்க்கட்சியாக கூட வராது .


Barakat Ali
ஜூலை 23, 2025 16:58

[தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள விஜய், தன்னை முதல்வர் வேட்பாளராக கருதுகிறார்.] விஜய்யின் உயரம் விஜய்க்கு நல்லாவே தெரியுமுங்கோ ........


Barakat Ali
ஜூலை 23, 2025 16:56

நாம் தமிழரை விட்டுட்டீங்களே ..... இதைத்தானே நாங்க காலங்காலமா சொல்லிக்கிட்டே இருக்கோம் .......


முக்கிய வீடியோ