உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / த.வெ.க.,வுடன் திருமா கைகோர்த்தால் வி.சி.,யை உடைக்க தி.மு.க., திட்டம்?

த.வெ.க.,வுடன் திருமா கைகோர்த்தால் வி.சி.,யை உடைக்க தி.மு.க., திட்டம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர், டிச., 6ல் ஒன்றாக கைகோர்த்தால், தங்கள் கட்சி இரண்டாக உடைக்கப்படலாம் என்ற அச்சம் வி.சி., நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rlbyab80&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி., கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. திருமாவளவனின் 60வது பிறந்த நாள் கொடிக்கம்பம் அமைத்தல், மது ஒழிப்பு போராட்டம், ஆட்சியில் பங்கு கோஷம், துணை முதல்வர் பதவி என, தி.மு.க., கூட்டணிக்கு தொடர் நெருக்கடிகள் அளித்து வருகிறது.

போர்க்கொடி

'வி.சி., இல்லாமல் வட மாவட்டங்களில், தி.மு.க., வெல்ல முடியாது. கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவன், ஏன் துணை முதல்வராகக்கூடாது?' என, வி.சி., துணைப் பொதுச் செயலர்களான ஆதவ் அர்ஜுனா, வன்னியரசு ஆகியோர் கேள்வி எழுப்பினர். வி.சி., - எம்.பி., ரவிகுமார், எம்.எல்.ஏ.,க்கள் சிந்தனைசெல்வன், ஆளூர் ஷா நவாஸ் போன்றோர், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளதுடன், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.இதற்கிடையில் த.வெ.க., மாநாடு நடந்து முடிந்ததும், ஆதவ் அர்ஜுனா, 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு, ஆதரவான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க துவங்கி உள்ளன.'அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதை, தன் முதல் மாநாட்டில் பேசிய விஜய்க்கு வாழ்த்துகள்' என, பாராட்டு தெரிவித்தார். அதேநேரம், புதிதாக கட்சி துவங்கி இருக்கும் விஜயின் மாநாட்டு பேச்சுக்கு எதிராக, ரவிக்குமார், வன்னியரசு, ஆளூர் ஷா நவாஸ் போன்றோர் கொந்தளித்து பேசினர்.'தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு என வெளிப்படையாகக் கூறி, தி.மு.க., கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார்' என, திருமாவளவனும் விஜயை விமர்சித்தார். ஆனால், வி.சி., தொண்டர்கள், 'ஆதவ் அர்ஜுனா பேசியதில் என்ன தவறு இருக்கிறது. அவர் சரியாகத்தான் பேசியுள்ளார். நாம் கட்சி துவக்கியதே ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற எண்ணத்தோடுதான். அப்படியிருக்கும்போது அந்த கொள்கையை எதிர்த்து பேசினால், புதுமுகங்கள் எப்போது எம்.பி., - எம்.எல்.ஏ., பதவிகளை பெறுவது' என, திருமாவளவனிடம் கொந்தளித்துள்ளனர்.'சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது; தேர்தல் நெருக்கத்தில் அரசியல் களம் எப்படி பயணிக்கும் என இப்போதே சொல்ல முடியாது. எந்தக் கூட்டணியில் வி.சி.,க்கள் இருந்தாலும், ஆட்சியில் பங்கு கோஷம் முன் வைக்கப்படும்.

சம்மதம்

'பங்கு கொடுப்பதாக ஒப்புக்கொள்வோருடன் தான் கூட்டணி; அதில் மாறுபாடு எதுவும் இருக்காது' என்று சொல்லி, தொண்டர்களை சமாளித்தார் திருமாவளவன்.இந்நிலையில், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், டிச., 6ல், ஆதவ் அர்ஜுனா தொகுத்து தயாரித்திருக்கும் நுால் வெளியீட்டு விழாவில், விஜய் உடன் பங்கேற்க, திருமாவளவன் சம்மதித்துள்ளார்.இந்த தகவல், தி.மு.க., தரப்பை கலவரப்படுத்தி உள்ளது. வலுவாக இருக்கும் இண்டி கூட்டணியை திருமாவளவன் பலவீனப்படுத்துவதாக, திருமாவளவன் மீது தி.மு.க., தலைவர்களும், தொண்டர்களும் கடும் கோபத்தில் உள்ளனர்.கூடவே, எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட நாளில், நுால் வெளியீட்டு விழா நடந்துவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனர்.இதனால், நுால் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க, திருமாவளவனுக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இந்த நெருக்கடியை கடந்து, நுால் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயும், திருமாவளவனும் கலந்து கொண்டால், ஜனவரி மாதத்திற்குள் வி.சி., கட்சி உடைக்கப்படும் என தெரிகிறது.அதற்கான வேலைகள், மூத்த அமைச்சர்களுக்கும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலருக்கும் தரப்படலாம் என்றும் தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.இதுகுறித்து, வி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவர் வீட்டுக்கு, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து, வி.சி., முக்கிய தலைவரும், த.வெ.க., முக்கிய தலைவரும் சென்றுள்ளனர். அங்கு இருவரும் சந்தித்து, பல மணி நேரம், தமிழக மற்றும் தேசிய அரசியல் கள நிலவரங்கள் குறித்து விவாதித்துள்ளனர். அப்போது, எதிர்காலத்தில் இரு கட்சிகளும் சேர்ந்து செயல்படுவது குறித்தும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளனர்.

பச்சைக்கொடி

இத்தகவல் உளவுத்துறை வாயிலாக, தி.மு.க., மேலிடத்திற்கு தெரிய வந்ததும், ஜனவரிக்குள் வி.சி., கட்சியை உடைக்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது, வி.சி.,க்கு, இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தி.மு.க., ஆதரவாக உள்ள ஒரு எம்.பி.,யும், இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் வெளியே வந்தால், அவர்களின் பதவிகள் பறிபோக வாய்ப்பு இல்லை.அதனால், எம்.எல்.ஏ.,க்களையும், மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தி.மு.க.,வில் இணைக்க, பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.அப்படியொரு விஷயம் நடந்தால், அது வி.சி.,க்கள் கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் மேலும் பலம் சேர்ப்பதோடு, தேர்தல் களத்தில் தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்வதற்கான வலுவான பாயின்டாகவும் அது இருக்கும். அதனால், அப்படியொரு உடைப்பை, வி.சி.,க்கள் கட்சினர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

KR
நவ 05, 2024 21:41

Looks like then P Ranjith may take the place in TVK party or alliance.


Oviya Vijay
நவ 05, 2024 08:50

நடக்காத ஒன்று... வேண்டுமானால் கற்பனை செய்து இன்பம் அடைந்து கொள்ளலாம்.


முருகன்
நவ 05, 2024 07:34

உடைக்க கூடாது முற்றிலும் வேண்டும்


SUBBU,MADURAI
நவ 05, 2024 07:32

திருமாவளவன் திமுக என்ற புதைகுழியில் இருந்து தப்பிக்கணும்னா அதுக்கு ஒரே வழி திமுக கூட்டணியிலிருந்து திமிறி எழுந்து திரும்பிப் பாக்காம ஓடியார்றதுதான் இல்லாட்டி எழுச்சித் தமிழனோட கட்சியும் பானை உடையப் போவது நிச்சயம் அது மட்டுமில்லாம சைகோவின் பல்லில்லாத sorry ஆணியில்லாத சாட்டையற்ற சுற்றாத பம்பரம் போல திமுக என்கிற ராட்சத சுழலுக்குள் மாட்டிக்கிற வேண்டியது தான் வேறவழியில்ல அதனால திமுக கூட்டணியை விட்டு எவ்வளவு சீக்கிரம் திருமாவளவன் வெளியே வருகிறாரோ அது அவருக்கும் அவரது கட்சிக்கும் எதிர்காலத்தில் நன்மை பயக்கும்.


சமீபத்திய செய்தி