உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குன்றத்திற்கு கூட்டமாக வரும் வி.ஐ.பி.,க்களை அனுமதிக்காதீங்க! அரசுக்கு உளவுத்துறை அறிவுறுத்தல்

குன்றத்திற்கு கூட்டமாக வரும் வி.ஐ.பி.,க்களை அனுமதிக்காதீங்க! அரசுக்கு உளவுத்துறை அறிவுறுத்தல்

மதுரை: 'மதுரை திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வதாக கூறி, ஆதரவாளர்களுடன் வரும் வி.ஐ.பி.,க்களை அனுமதிக்கக்கூடாது. தனியாக வந்தால் அனுமதிக்கலாம்' என தமிழக அரசுக்கு, உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்கும் வகையில், அங்குள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடக்கூடாது என ஹிந்துக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, மணப்பாறை தி.மு.க., - எம்.எல்.ஏ., அப்துல்சமது ஆகியோர் திருப்பரங்குன்றத்திற்கு வந்தனர். இதில் நவாஸ்கனியுடன் வந்தவர்கள், மலை படிக்கட்டில் பிரியாணி சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9mbr2qde&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வந்தனர். ஆதரவாளர்களுடன் வி.ஐ.பி.,க்கள் வந்ததால் பதட்டமான சூழல் நிலவியது.இது தொடர்ந்தால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் அபாயம் இருக்கும் எனக்கருதி, வி.ஐ.பி.,க்கள் வர தடைவிதிக்கப்பட்டது. இதை மீறி புறப்பட்ட பா.ஜ., சிறுபான்மையின பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றத்திற்கு செல்வதாக அறிவித்த மதுரை ஆதீனம், மடத்திலேயே போலீஸ் உத்தரவால் தங்க வைக்கப்பட்டார்.இச்சூழலில் மலை மீதுள்ள கோவில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை என்பதால், இங்கு வழிபடும் நோக்கில் வரும் வி.ஐ.பி.,க்களை தாராளமாக அனுமதிக்கலாம். கூட்டமாக வந்தால் அனுமதிக்க வேண்டாம் என தமிழக அரசுக்குஉளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

S. Neelakanta Pillai
பிப் 02, 2025 20:12

இதை சொல்வதற்கு உளவுத்துறை தேவையில்லை.


A. Shanmugam
ஜன 30, 2025 00:03

Allal pattu attratha kanner andre Dravidhathai ozhikkum padai


Smbs
ஜன 29, 2025 14:22

புளிய ஊத்து


Barakat Ali
ஜன 29, 2025 13:13

கும்பலாக அங்கே போயி அசைவ பிரியாணி சாப்பிட்டவர்கள் மட்டும் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்?? ஹிந்துக்கள் முன்பு போல் இல்லை .... விழிப்படைந்து வருகிறார்கள் .... அரசின் இச்செயலை இஸ்லாமியர்கள் கண்டிக்கவேண்டும் ... நவாஸ் கனியின் அருவருப்பான செயலையும் இஸ்லாமியர்கள் கண்டிக்க வேண்டும் ....


veera
ஜன 29, 2025 13:51

barakat ali..உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறோம்


ramukkhosa
ஜன 29, 2025 17:08

உங்களைப் போன்ற நடுநிலையாளர்களால் தான் இன்னும் எந்த விதமான தவறான செயல்களும் நடக்காமல் தடுக்கப்படுகிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 29, 2025 20:44

தாராளமா அவரை வணங்குங்க ...... தலைவணங்குங்க ....... அவங்க சிறுபான்மையா இருக்குறவரைக்கும் சகோ .... சகோ ன்னு எழுதுவாங்க .... ஆனா ஆபத்தான உள்நோக்கம் இருக்கும் ...... பெரும்பான்மையா ஆனபிறகு நீங்களும் நானும் அல்லது நமது வாரிசுகள் பிழைத்திருக்க முடியாது .....


Ramesh Sargam
ஜன 29, 2025 13:03

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்றுதான் இதுநாள் வரையில் பாடிக்கொண்டிருந்தோம். திமுக ஆட்சி அமைந்த பிறகு, குன்றத்தில் உள்ள குமரனுக்கும், அவனை தரிசிக்க வரும் பொதுமக்களுக்கும் பெரும் திண்டாட்டம் ஆகிவிட்டது.


Ramesh Sargam
ஜன 29, 2025 13:01

அரசியல் வேடதாரி பக்தர்களை ஹிந்து கோவில்கள் எங்கும் அனுமதிக்கவே கூடாது. அது சேகர் பாபுவே ஆனாலும்.


பேசும் தமிழன்
ஜன 29, 2025 07:24

விடியாத ஆட்சியில் சாமி தரிசனம் செய்ய கூட தடை போல் தெரிகிறது.. இந்த கேடுகெட்ட ஆட்சி எப்போது போகும் எ‌ன்று ம‌க்க‌ள் அனைவரு‌ம் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.


V RAMASWAMY
ஜன 29, 2025 08:47

யானைகளின் சக்தி போன்றது வாக்காளர்களின் வாக்களிக்கும் சக்தி, இதனை துஷ்ப்ரயோகம் செய்ததால் வந்த வினை தான் தற்பொழுது நடக்கிறது, இது யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயல் போன்றது. புரிந்தும் புரிந்துகொள்ளாதது போல் வாய்க்கரிசி போடுவது போல் 5000 10000க்காக ஏமாந்து ஐந்து ஆண்டுகள் அல்லல் படுவதைத் தவிர்த்து புத்திசாலியாக தமிழர்கள் வரும் தேர்தலில் வாக்களித்தால் தான் முன்னேறலாம்.


vijai
ஜன 29, 2025 10:14

one year more


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை