உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கமலுக்கெல்லாம் பதில் சொல்லணுமா?

கமலுக்கெல்லாம் பதில் சொல்லணுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில், மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:நகர்ப்புற நக்சலிஸம் பரவி வருகிறது. பயங்கரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தேச விரோத சக்தியை ஊக்குவிப்பது தான், பல அரசியல் தலைவர்களின் முதல் வேலையாக இருக்கிறது. மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என சொல்வதே தவறு; அது ஒன்றிய அரசு என்றால், மாநில அரசு என்ன பஞ்சாயத்து அரசா? வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள். எப்போதும் இல்லாத மொழிபெயர்ப்பை இப்போது ஏன் தருகிறீர்கள்?கமல்ஹாசனுக்கு எல்லாம் ஒரு கவர்னர் பதில் சொல்ல வேண்டுமா? எப்போதாவது, ஏதாவது ஒன்றை, அவர் ஒழுங்காக சொல்லி இருக்கிறாரா? 'திராவிட இயக்கத்தை ஒழிப்பது தான் என் வேலை' என, கட்சியை ஆரம்பித்தார். 'தி.மு.க.,வுடன் இருப்பது தான் தமிழகத்துக்கு நன்மை பயக்கும்' என, இப்போது கூறுகிறார். இவருக்கு எது நன்மை பயக்கிறதோ, அது தமிழகத்தின் நன்மை என நினைப்பவரை பற்றி என்ன சொல்வது? பேசும்போது, நிதானத்தை அவர் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Rajendra kumar
ஜூன் 07, 2025 20:30

கமல் திமுகவின் அடிமை. திரையில் கமலின் திறமை சூப்பர். அரசியலில் குப்பை.


வல்லவன்
ஜூன் 02, 2025 18:52

கவர்னராக பதில் சொல்ல மாட்டேன் பிரதமராகிதான் பதில் சொல்வேன்


முருகன்
ஜூன் 02, 2025 16:18

கமலை எதிர்த்து தேர்தலில் நின்றால் உங்கள் நிலை உங்களுக்கு புரியும்


vivek
ஜூன் 02, 2025 20:02

அறிவாளி முருகனுக்கு ஒரு சத்துணவு பொங்கல் பார்சல்


Oviya Vijay
ஜூன் 02, 2025 15:08

கமலை விட நீங்கள் ஒன்றும் உயர்ந்தவரோ இல்லை சாதித்தவரோ அல்ல. அவருக்கென்று மானசீக ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் உலகெங்கிலும் உண்டு. உங்களுக்கு அப்படி இல்லை. சங்கி கூட்டத்தை தவிர வேறொன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக உங்களுக்குக் கிடையாது. மக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப் படாத பின்வாசல் வழியாக மட்டுமே பதவிகளைப் பெற முடிகிற உங்களைப் போன்ற தமிழக பாஜக நிர்வாகிகள் அவரை விமர்சிப்பதற்குத் தகுதியே கிடையாது... நினைவில் கொள்வீர்...


சந்திரன்
ஜூன் 02, 2025 17:47

காமாலைஹாசன் என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவனோ. நல்லவன் ஆதரவு தரமாட்டான்


vivek
ஜூன் 02, 2025 18:16

உளறுவதற்கென்ற வருகிறான் இந்த இருநூறு ரூபாய் கொத்தடிமை ஓவியரு.....


N Sasikumar Yadhav
ஜூன் 02, 2025 18:35

உங்களால் பின்வாசலால்கூட பதவி வாங்க முடியாது கடைசிவரை திராவிடமாடலுக்கு போஸ்டர்தான் ஒட்டனும் நீங்க


Manoharan Kasirajan
ஜூன் 04, 2025 14:17

க மலகாசன் எந்த வழியாக வந்தவர்?


Arya Prasad
ஜூன் 02, 2025 14:40

பேருராட்சி அரசு என்று கூறலாம் மற்றும் தி முக தனியாக நின்று ஆட்சி அமைக்குமா


சுந்தரேஷ்
ஜூன் 02, 2025 13:25

கெவுனர் பதவில யார் வேணும்னாலும் இருக்கலாம்.


RAAJ68
ஜூன் 02, 2025 10:36

NO COMMENTS IS ALSO A COMMENT.


RAAJ68
ஜூன் 02, 2025 10:35

பதில் சொல்ல வேண்டுமா என்று கேட்பதே பதில் சொல்லுவது போல் உள்ளது இந்தக் கேள்வியை தவிர்த்து இருக்கலாமே. பதில் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றால் அவரைப் பற்றி தேசிய இருக்கக் கூடாது இல்லையா.


ManiK
ஜூன் 02, 2025 10:00

தமிழக திமுக அரசை CPR செய்து தான் உயிர்ப்பிக்க வேண்டும். சிபி ராதாகிருஷ்ண் மிக நாகரீகமாக பதில் கூறியுள்ளார். ரோசம் உள்ளவர்களுக்கு புரியும்.


venugopal s
ஜூன் 02, 2025 09:47

அதேபோல் தான் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத அண்ணாமலைக்கு எல்லாம் தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டுமா என்று கேட்கிறோம்!


vijai hindu
ஜூன் 02, 2025 10:08

ips anamalai தமிழக முதல்வரை கேள்வி கேட்பதற்கு தகுதி எல்லாம் வேண்டாம்


ஆரூர் ரங்
ஜூன் 02, 2025 10:41

மன்மோகன் எந்தத் தேர்தலிலும் ஜெயிக்கல. ஆனா பிரதமாராக.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை