உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ராமசாமி: சீமான்

தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ராமசாமி: சீமான்

சென்னை: ''தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ராமசாமி; இனிமையான மொழி என்றார் பாரதி,'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். ஆர்.எஸ்.எஸ்.,சின் 'விஜில்' அமைப்பு சார்பில், பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா, நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பாரதி கண்ட வந்தே மாதரம்' எனும் தலைப்பில் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: நான் பாரதியின் கொள்கை வாரிசு. பாரதியை நிராகரிக்கும் இடத்தில், என் தமிழ் நிராகரிக்கப்படுகிறது. பாரதியின் புகழைப் பாட, பாகிஸ்தானுக்கு வேண்டுமானாலும் செல்வேன். தமிழை, 'காட்டுமிராண்டி மொழி' என ஈ.வெ.ரா., சொன்னார். பாரதியோ, 'இனிமையான மொழி' என்றார். நான், 'பாட்டன் பாரதி' என சுவரொட்டி ஒட்டியபோது, அனைவரும் கேலி செய்தனர். தமிழை சனியன் என சொன்னவர் தந்தையாக இருக்கும்போது, தமிழை இனிமை என சொன்ன பாரதி பாட்டனாக இருக்கக் கூடாதா? ஈ.வெ.ரா., வந்த பின் தான், பெண்ணியம் போற்றப்பட்டது; பகுத்தறிவு புகுத்தப்பட்டது என்கின்றனர். அவருக்கு முன்பே, பெண் விடுதலை குறித்து பாரதி பேசி உள்ளார். பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு கிடையாது; கேள்வி எழுப்புவது. கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி அழைத்து சென்றவர், முத்துராமலிங்க தேவர். கோவில் நுழைவு போராட்டத்தை முன்னெடுத்தவர் வைத்தியநாத அய்யர். அதேபோல், ஈ.வெ.ரா., செய்ததாக ஒரு செய்தியும் கிடையாது. எந்த பிராமண எதிர்ப்பை கூறி, திராவிட இருப்பை காண்பித்தனரோ, அதே பிராமண கடப்பாரையை கொண்டு, பாழடைந்த திராவிட கட்டடத்தை இடிப்பேன். முதன்முதலில் தன் பாடல் வழியாக, 'தமிழ்நாடு' என முழங்கியவர் பாரதி. அதனால், தமிழ்நாடு என பெயர் சூட்டியது, அண்ணாதுரை அல்ல; பாரதி தான். ஹிந்தி ஒழிக என்பது எங்கள் கோட்பாடு அல்ல; தமிழ் வாழ்க என்பதே கோட்பாடு. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பாரதி
டிச 13, 2025 14:34

தமிழ்நாடு கல்வித்துறை ஈவெரா பற்றி ஏகப்பட்ட puளுகு மூட்டைகளை பள்ளிக்கூங்களில் சொல்லித் தருகின்றன சீமான் அவர்கள் தான் ஈவெரா பற்றிய உண்மைகளை மேலும் மேலும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் நன்றிகள்


பாலாஜி
டிச 13, 2025 13:23

ஈ.வெ.ராமசாமி மேடைகளில் தமிழ் மொழியில் மட்டும் பேசினார்.


ram
டிச 13, 2025 11:27

உண்மைதான் சொல்லியிருக்கிறார், திராவிடம் பொய்களை மக்கள் மனதில் வேண்டுமென்றே திணித்து, நல்ல மனிதர்களை இகழ்ந்து, மனித குலத்திற்கு தீங்கான நபர்களை மக்கள் வரி பணத்தில் மூலைக்கு மூலை சிலை வைத்து, மக்களிடம் இதுபோல ஆட்கள் புனிதமானவர்கள் என்று மக்கள் மனதில் விதைத்து உள்ளான்கள். தமிழ் அண்ட் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களை தந்தை என்று சொல்ல வைத்தான்களே அங்கு திருட்டு திராவிடம் நிற்கிறது. தந்தை என்று சொல்லிக்கொள்ளும் அந்த நபரின் எழுத்து பேச்சுகளை கேட்டால் சாக்கடை நாத்தத்தை விட அசிங்கமாக இருக்கும். இவ்வளுவு பேசும் திருட்டு திராவிட ஆட்கள் அந்த குறிப்பிட்ட தந்தையின் எழுத்துக்களை அரசுடை ஆக்காமல் இருக்காங்களே இதிலிருந்து தெரியும் அந்த ஆளின் தராதரம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
டிச 13, 2025 10:55

இவர்கள் எல்லோரும் தமிழ் உயர்ந்த மொழி கல் தோன்றி முன் தோன்றா காலத்தே மூத்த மொழி தமிழ் இனிமையான மொழி இப்படி எல்லாம் இங்கே தமிழ் நாட்டிற்கு உள்ளேயே பேசிக் கொண்டு உள்ளார்கள். தமிழகத்தை தாண்டி தமிழை வெளியே கொண்டு செல்லும் முயற்சியில் ஒருவரும் இல்லை. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் தமிழக ஆன்மீக அன்பர்கள் பலரும் சத்தமில்லாமல் தமிழை வெளிநாடுகளில் கொண்டு சேர்த்தது கொண்டு உள்ளார்கள்.


mohana sundaram
டிச 13, 2025 10:25

அண்ணன் நல்லவனும் அல்ல கெட்டவனும் அல்ல பணத்திற்காக கூஜா தூக்கும் கோமாளி.


பேசும் தமிழன்
டிச 13, 2025 10:02

சீமான் அவர்களும் உண்மையை பேச ஆரம்பித்து விட்டார்.... தமிழ் நாட்டில் இனி தமிழ் மட்டுமெ வாழும்.... திராவிடம் வீழும்.


naranam
டிச 13, 2025 09:50

மிக அருமை! நன்றி சீமான் அவர்களே!


சுலைமான்
டிச 13, 2025 09:04

இப்பதான் நீங்க உருப்படியா பேசிருக்கீங்க....


Sun
டிச 13, 2025 08:02

அண்ணே நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா? தெரியலியேப்பா எனக்கே தெரியலியே!


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை