உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பஸ் பயணிகளின் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்! குறைகிறது மகளிர் இலவச பஸ்கள்

பஸ் பயணிகளின் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்! குறைகிறது மகளிர் இலவச பஸ்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: சரவணம்பட்டியையும் துடியலுாரையும் இணைக்கும் வழித்தடத்தில் எட்டு தாழ்தள சொகுசு பஸ்கள் இயக்கப்படுவதால் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்ட மூன்று சாதாரண பஸ்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கோவை நகரில், 602 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதில்,180 சிகப்பு நிற பஸ்கள் உள்ளன. மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில், 422 பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக்கழக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.இவற்றோடு சமீபத்தில், 24 அதிநவீன தாழ்தள சொகுசு பஸ்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதனால் கோவையில் இயங்கும் டவுன் பஸ்களின் தற்போதைய எண்ணிக்கை, 626 ஆக உயர்ந்துள்ளது.ஆனாலும் எளிதான போக்குவரத்தும் பயணிகளின் எதிர்பார்ப்பும் இனியும் நிறைவேறவில்லை. அதனால் ஒட்டுமொத்த டவுன் பஸ்களின் இயக்கத்தை செம்மைப்படுத்தி எளிமைப்படுத்த வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.கொரோனா காலகட்டத்தின் போது இயக்கப்படாமல் ரத்து செய்யப்பட்ட டவுன்பஸ் வழித்தட பட்டியலின் அடிப்படையிலேயே தற்போதும் கோவை நகரில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.டவுன்பஸ்கள் இயக்கம் தொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளை சந்தித்து பேசினால், இங்க பாருங்க கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை பற்றி பேசாதீங்க, அது நிறுத்துனது நிறுத்துனது தாங்க. இப்ப என்னவோ அதைப்பற்றி மட்டும் பேசுங்க என்கின்றனர்.அந்த பட்டியலுக்கு மாற்றாக கோவை நகரிலுள்ள ஒவ்வொரு டவுன்பஸ் வழித்தடத்தையும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கள ஆய்வு செய்ய வேண்டும்.அதன்பின்பு எந்தெந்த வழித்தடங்களில் பயணிகள் பயணிக்க வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். சில வழித்தடங்களில் பெண் பயணிகள் இலவசமாக பயணிக்கும் டவுன்பஸ்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு அவ்வழித்தடத்தில் ஐந்து அல்லது ஆறு எண்ணிக்கையில் தாழ்தள சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை இரண்டு நடைகள் மட்டுமே சில வழித்தங்களில் டவுன்பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற நடைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த பலனுமில்லை.சரவணம்பட்டியையும் துடியலுாரையும் இணைக்கும் வழித்தடத்தில் எட்டு தாழ்தள சொகுசு பஸ்கள் தற்போது இயக்கப்படுகின்றன. அதே வழித்தடத்தில் இயங்கி வந்த மகளிர் இலவசமாக பயணிக்கும் மூன்று சாதாரண டவுன் பஸ்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது இயக்கப்படும் தாழ்தள சொகுசு பஸ்களும் சரியான நேரங்களில் இயக்கப்படாததால் கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களும் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களும் விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.மக்கள் சேவையை மனதிற்கொண்டு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முறையான வழித்தட ஆய்வை அவசியம் மேற்கொண்டு பயணிகளின் தேவைக்கு ஏற்றாற் போல் பஸ்களை இயக்க வேண்டும்.

ஆலோசனை அவசியம்

பயணிகளின் தேவையை புரிந்து கொள்ளாமல், ஒரே வழித்தடத்தில் எட்டு தாழ்தள சொகுசு பஸ்களை இயக்கும் போது அவ்வழித்தடத்தில் பயணிக்கும் மகளிர் எப்படி இலவசமாக பயணிக்க முடியும்.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பஸ் இயக்குவது குறித்து முடிவு மேற்கொள்ளும் போது தன்னிச்சையாக எடுக்காமல் கலெக்டர் தலைமையில் நடைபெறும் சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.கலெக்டருக்கு கூடுதல் பஸ்களை இயக்குவது குறித்து வந்த மனுக்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து கள ஆய்வு மேற்கொண்ட பின்பே பஸ்களை இயக்குவது குறித்தும் ரத்து செய்வது குறித்தும் முடிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
நவ 15, 2024 21:36

அடுத்த தேர்தலுக்கு முன்பு மீண்டும் விடுவார்கள்.


Ethiraj
நவ 15, 2024 07:00

To operate bus govt require Bus, Diesel,staff salary and perks, maintenance, repairs. They require money. Middle class and rich ladies must volunter to pay for travel. Just to grab power parties promise free but nothing comes free. It is our money tax payers money.


Gajageswari
நவ 15, 2024 05:41

40கிலோ மீட்டர் வரை பெர்மிட் இல்லாமல் பொது வாகனம் இயக்கலாம் என்று சட்டம் திருத்தப்பட வேண்டும்


sundaran manogaran
நவ 14, 2024 12:06

மோசடி செய்வதில் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் கைதேர்ந்தது.... அமைச்சரின் ஆசியுடன் தான் எல்லாம் நடக்கிறது.... எனவே ஓட்டுப் போட நாங்க தயார்...


பெரிய ராசு
நவ 14, 2024 10:51

பல வழித்தடங்களில் பெண் பயணிகள் இலவசமாக பயணிக்கும் டவுன்பஸ்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சரிதான் எல்லா இலவசதயும் ஒழியுங்க


Smba
நவ 14, 2024 07:14

இலவச பஸ் ரத்து ஏற்றுகொள்ள க்கூடியதே மற்ற வழி தடத்திலும் ரத்து செய்யனும். 5 ரூபாய் கு கருவேபில வாங்க உக்கடம் வந்துட்டு போரா ளுக


nv
நவ 14, 2024 06:17

திருட்டு திராவிட மாடலின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று.. இலவசம் என்று சொல்லிவிட்டு பின்னால் மெதுவாக அதை குறைப்பது!! வெறும் பிச்சை காசு கொடுத்து வாக்குகளை பெற்று பின்னர் குடும்ப கொள்ளை அடிப்பது- இதுதானே திருட்டு திராவிட மாடல்!!


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 12:57

நீங்க எல்லாரும் திமுக அரசின் இலவசங்களுக்கு எதிரானவர்கள் தானே? அப்போ இதைப் பாராட்டுங்க.


புதிய வீடியோ