'டாலர் சிட்டி' என்று புகழப்படும் திருப்பூர், வந்தாரை வாழ வைக்கும் நகரம். தமிழகத்தின், அனைத்து மாவட்ட மக்களும், 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளரும், இத்தொழிலால் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.கடந்தாண்டு புள்ளி விவரப்படி, 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியும், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உள்நாட்டு வர்த்தகமும் நடந்துள்ளது. ஏற்றுமதி வர்த்தகம், 1990 முதல், படிப்படியாக வளர்ந்து, இன்று ஆல விருட்ஷமாக உயர்ந்து நிற்கிறது.கடந்த, 2011ம் ஆண்டு வரை, பின்னலாடை ஏற்றுமதியில் நல்ல வளர்ச்சி இருந்தது. அதன்பின், இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, நுால் விலை உயர்வு, பஞ்சு விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என, அடுத்தடுத்த சோதனையால், தொழிலில் சுணக்கம் ஏற்பட்டது.கடந்த, 2010-11ம் ஆண்டில், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தை, 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு பிரச்னை புயல்போல் சுழற்றி அடித்தது. அதன்பின், உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்ததால், சர்வதேச சந்தையில் போட்டித்திறனை தக்கவைக்க போராட வேண்டியதாகி விட்டது.சீனா, வங்கதேசம், வியட்நாம், கம்போடியாவுக்கு அடுத்தபடியாக, ஆயத்த ஆடை ஏற்றுமதியில், நாம் நான்காவது இடத்தில் இருக்கிறோம். சில நாட்டு வர்த்தகத்தில், 3வது இடத்தில் இருக்கிறோம்.திருப்பூரின் மொத்த உற்பத்தியில், 60 சதவீதம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. அடுத்த இடத்தில் ஐரோப்பிய நாடுகள் உள்ளன. தற்போது, அந்நாடுகளில், ஆயத்த ஆடை இறக்குமதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோட்பாடு அமலாகியுள்ளது. வரும், 2030 முதல், பசுமை சார் உற்பத்தி, மறுசுழற்சி ஆடை இறக்குமதி என்பது, சட்டமாகவும் மாறியுள்ளது.பசுமை சார் உற்பத்தி கேந்திரம் என்ற தகுதியை, திருப்பூர் பெற்றிருக்கிறது. இதனால், இனிவரும் நாட்களில், ஏற்றுமதி வர்த்தகம் புதிய வளர்ச்சியை எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளதாக, திருப்பூர் தொழில்துறையினர் நம்புகின்றனர்.இதுகுறித்து, ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளாக, ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய வளர்ச்சி இல்லை. கொரோனா தொற்று துவங்கிய காலத்தில் இருந்து பாதிப்பு அதிகமாகிவிட்டது. வழக்கமான ஆர்டர்களை தக்கவைக்கவே போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், புதிய வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், 2010-11ல், 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற இலக்கை முன்வைத்தனர். இன்று வரை எட்ட முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, இந்தாண்டு, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற நிலையை, திருப்பூர் அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பு, மரபுசாரா எரிசக்தி, மறுசுழற்சி, மரம் வளர்ப்பு என, இயற்கை சார் உற்பத்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டோம். இதனை ஆவணப்பூர்வமாக நிரூபணம் செய்யும்போது, புதிய ஆர்டர்கள் திருப்பூரை நோக்கி வரும். அதன்பின், ஏற்றுமதியில் ஏற்றம் தான். அதற்காக, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிப்பது, புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் என்பது போன்ற, பல நிலைகளிலும் முழு அளவில் தயாராக வேண்டும்.திருப்பூரை பொறுத்தவரை, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்பது நடப்பாண்டில் நிச்சயம்; லட்சம் கோடி ஏற்றுமதியே எங்களின் லட்சியம்.பசுமை சார் உற்பத்தி கேந்திரம் என்ற தகுதியை, திருப்பூர் பெற்றிருக்கிறது. இதனால், ஏற்றுமதி வர்த்தகம் புதிய வளர்ச்சியை எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளதாக, தொழில்துறையினர் திடமாக நம்புகின்றனர்இதுகுறித்து, ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளாக, ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய வளர்ச்சி இல்லை. கொரோனா தொற்று துவங்கிய காலத்தில் இருந்து பாதிப்பு அதிகமாகிவிட்டது. வழக்கமான ஆர்டர்களை தக்கவைக்கவே போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், புதிய வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், 2010-11ல், 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற இலக்கை முன்வைத்தனர். இன்று வரை எட்ட முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, இந்தாண்டு, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற நிலையை, திருப்பூர் அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பு, மரபுசாரா எரிசக்தி, மறுசுழற்சி, மரம் வளர்ப்பு என, இயற்கை சார் உற்பத்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டோம். இதனை ஆவணப்பூர்வமாக நிரூபணம் செய்யும்போது, புதிய ஆர்டர்கள் திருப்பூரை நோக்கி வரும். அதன்பின், ஏற்றுமதியில் ஏற்றம் தான். அதற்காக, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிப்பது, புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் என்பது போன்ற, பல நிலைகளிலும் முழு அளவில் தயாராக வேண்டும்.திருப்பூரை பொறுத்தவரை, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்பது நடப்பாண்டில் நிச்சயம்; லட்சம் கோடி ஏற்றுமதியே எங்களின் லட்சியம். இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் _