உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கலெக்டருக்கு தவறான குறுஞ்செய்தி: மறுக்கும் எம்.எல்.ஏ.; குவியும் கண்டனம்

கலெக்டருக்கு தவறான குறுஞ்செய்தி: மறுக்கும் எம்.எல்.ஏ.; குவியும் கண்டனம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவிற்கு, கள்ளக்குறிச்சி த.வெ.க., - எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ், வாட்ஸாப் மூலமாக தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. எம்.எல்.ஏ., மறுத்தாலும், அவருக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிகின்றன.இப்பிரச்னை குறித்து அருள்விக்னேஷ் கூறியதாவது: நான் எந்த குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. இதுபற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. மாவட்டத்தில் த.வெ.க., சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ., நான் தான். இதனால், என் மீது வன்மம் அதிகமாக உள்ளது. தவறு செய்திருந்தால் என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்ள தயார். 'இக்னோர் த நெகட்டிவிட்டி' என்ற முதல்வரின் பாலிசியை கடைப்பிடித்து வருகிறேன்.இது போன்ற கேவலமான விஷயத்தை கையில் எடுத்து என் பெயரையும், கட்சி பெயரையும் களங்கப்படுத்தும் வகையில் தி.மு.க.,வினர் உள்ளிட்ட பலர் செயல்பட்டு வருகின்றனர். கீழ்த்தரமான வேலையை செய்கின்றனர். தமிழகத்தில் முன்னர் தி.மு.க., - அ.தி.மு.க., என, இரண்டு கட்சி தான் என்று கூறினர். த.வெ.க.,வந்ததற்கு பிறகு எல்லா கட்சியும் எங்களுக்கு எதிர்க்கட்சி தான். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிந்து சி.பி.சி.ஐ.டி., அல்லது சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, தி.மு.க., சார்பில், எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.

தலைவர்கள் கண்டனம்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'உள்ளாடையுடன் நிற்க வைப்பேன்' என, மிரட்டும் அமைச்சர்; மனு கொடுக்க வந்தவரை தாக்கி, ஆபாச அர்ச்சனை செய்து, அதை மறைக்க முயலும் துணை சபாநாயகர்; எல்லாவற்றுக்கும் மேலாக, கலெக்டருக்கே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., என, த.வெ.க.,வை சேர்ந்தோர், சட்டம் - ஒழுங்கை காக்கும் லட்சணம், பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. நுாலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும், தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் பயப்படுகிறாரா.காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி: தமிழகத்தில் உள்ள கலெக்டர்களில், 50 சதவீதம் பேர் பெண்கள். இதுபோன்ற மோசமான செயல்கள், ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை. இதை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: மேடைக்கு மேடை பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் இல்லை என, வெட்கமில்லாமல் பேசுவதற்கு முன்பாக, தங்கள் கட்சியில் இருப்பவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களை கண்மூடி வேடிக்கை பார்க்காமல், எம்.எல்.ஏ., மீது எழுந்திருக்கும் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி அவருக்கு முதல்வர் விஜய் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.தே.மு.தி.க., தலைவர் பிரேமலதா: பெண்களைப் பாதுகாக்கும் அரசு என்று பெருமை பேசும் முதல்வர் ஆட்சியில், கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது, தமிழக அரசின் நிர்வாக அவலத்தையே வெளிப்படுத்துகிறது.ஏ.பி.வி.பி., அமைப்பின் மத்திய செயலாக்க குழு உறுப்பினர் வேதாஞ்சலி: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வரும் செய்திகள், அதிர்ச்சி தருகின்றன. தமிழகத்தில் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கே, பாதுகாப்பற்ற சூழல் ஏற் பட்டுள்ளதையே, இச்சம்பவம் காட்டுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Ganesun Iyer
நவ 11, 2026 21:04

கள்ளக்குறிச்சி கலெக்டர்: திருமதி பத்மஜா - கருத்து எதுவும் கூறவில்லை.. கணவர்: விழுப்புரம் கலெக்டர் - ஷேக் அப்துல்லா ரஹ்மான்- புகார் கடிதம் குடுத்துள்ளார். எம்.எல்.ஏ: அருள் விக்னேஷ் தவெக- மறுத்துள்ளார்.


தமிழ் வாழ்க. தமிழ்நாடு
நவ 11, 2026 18:41

எப்போதும் போல நசுக்குறாங்க பிதுக்குறாங்க அப்படினு காரணம் சொல்லுங்க.. எல்லோரும் பயந்து அமைதியாகி விடுவார்கள்.


krishna
நவ 11, 2026 17:39

SUPER KOOTHADI REELS AATCHI. PORA POKKA PAARTHA IVARGAL MEENDUM DRAVIDA MODEL THIRUTTU THIYAMUKKAVAI JAIKKA VAIKKAMAL OOYA MAATARGAL ENA NINAIKKA THONDRUGIRADHU


சூர்யா
நவ 11, 2026 17:32

மாவட்ட ஆட்சியருக்கே தவறான மெசேஜ் அனுப்பக் கூடிய தைரியம் அதுவும் ஆளும் கட்சி எம்.எல்.ஏவுக்கு? இதுவல்லவோ தூய சக்தி? இதுவல்லவோ தமிழக மக்கள் எதிர்பார்த்த மாற்றம்?


Suppan
நவ 11, 2026 16:33

மாவட்ட ஆட்சியர் இதை சரி என்றால் இந்த அங்கத்தினர் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு சரியான இடம் திருட்டு திமுக தான் .


அருண் பிரகாஷ் மதுரை
நவ 11, 2026 15:59

விஜய் அவர்களின் ஆட்சியில் ஒரு தவறான நடைமுறை பின்பற்றப்படுகிறது.கட்சிக்காரர்கள் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் என்ற காரணத்தாலோ என்னவோ யார் மீதும் இம்மியளவும் நடவடிக்கை எடுப்பதில்லை.


Barakat Ali
நவ 11, 2026 14:57

[நான் எந்த குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. இதுபற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை] கலெக்டரம்மா ஒருவேளை புகார் கொடுத்தா இந்த வாயை மூடலாம் .....


ponssasi
நவ 11, 2026 14:32

மாவட்ட ஆட்சி தலைவரின் மவுனம் இதற்க்கு இன்னும் வலு சேர்க்கிறது, yes or NO


சத்திய சோதனை
நவ 11, 2026 14:10

ஒரு வாரத்துக்கு முன்பு இந்த எழவெடுத்த கேடுகெட்ட ஈன எச்சக்கல பண்ணாட பொம்பள பெறுக்கி நாயி குடித்துவிட்டு இதே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரகளையில் ஈடுபட்டான் இந்த ஈன நாயோட உதவியாளர்கள் இந்த ஈன பிறப்பை அள்ளிக் கொண்டு சென்றனர் தக்காளி வெங்காயம் கழகத்தில் ஈன பொறுக்கி எச்சக்கல பண்ணாட பொம்பள பெறுக்கி நாயிக கூட்டம்தான் அதிகமா இருக்கு இந்த தற்குறி நாய்களோட ஆட்சி விரைவில் இவனுகனாலேயே தானாகவே கவிழும் கண்டிப்பாக கவிழும் டு சீ தெட் டு ஹேப்பன் "ஐ எம் வெயிட்டிங்"


Barakat Ali
நவ 11, 2026 15:00

2021-26 எப்படி ??


SUBRAMANIAN P
நவ 11, 2026 14:01

தினமலரை அதிகம் வசிப்பவர்கள் அதிமுக, பாஜக காரர்களே என்பதை கமெண்டுகளுக்கு கிடைத்திருக்கும் ஸ்டார் மூலம் அறிந்துகொள்ளலாம். உடனே நான் 200 உபி, தற்குறி அப்படின்னு ரிப்ளை போடணும் சரியா.. ம்ம் ஸ்டார்ட்..


Ganesun Iyer
நவ 11, 2026 21:09

தவறு, வயித்தெரிச்சல வார்த்தையா வாமிட் பன்றதுகள் குடும்ப கொத்தடிமைகள் தான் அதிகம்..