உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மீனவர்கள் ஓட்டுகளுக்கு வலை வீசும் சீமான்; நடுக்கடலுக்கு சென்று மீனவர்கள் மாநாடு

மீனவர்கள் ஓட்டுகளுக்கு வலை வீசும் சீமான்; நடுக்கடலுக்கு சென்று மீனவர்கள் மாநாடு

சட்டசபை தேர்தலில், மீனவர்களின் ஓட்டுகளை வளைக்க, நடுக்கடலில் மீனவர்களுடன், ஒரு வாரம் பயணித்து, மீன் பிடித்து, அவர்களின் ஓட்டுகளுக்கு வலை வீசும் வகையில், 'மீனவர்கள் மாநாடு' நடத்த, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n76ihsc0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரும் 2026 சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி, தனித்து போட்டியிட்டு, 25 தொகுதிகளை கைப்பற்றி, கூட்டணி ஆட்சி அமைக்க, சீமான் தேர்தல் வியூகம் அமைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இயற்கை வளம், மண், கடல் வளம் சார்ந்த வாழ்வியல் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள, மக்களின் ஓட்டுகளை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

25 சதவீத ஓட்டு

முதல் கட்டமாக, துாத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில் பனை மரம் ஏறி கள் இறக்கி, தென்னை, பனை சார்ந்த விவசாயிகளின் ஓட்டுகளை மையப்படுத்தி போராட்டம் நடத்தினார். இரண்டம் கட்டமாக, மண், பால் வளம் சார்ந்த தொழில் புரியும் மக்களின் ஓட்டுகளை வளைக்க, மதுரையில் கால்நடைகள் மாநாடு நடத்தினார்.ஆக., 17ம் தேதி 10,000 மரங்களுடன் மாநாடு நடத்தி, மரங்களுடன் சீமான் பேச உள்ளார். மரங்கள் வாழ்ந்தால் தான், நாட்டில் மழை பெய்யும்; விவசாயம் செழிக்கும். சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும் என்பதால், மரங்களுக்கான மாநாட்டை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக, வரும் செப்டம்பரில் மீனவர்களின் நலனுக்காகவும், அவர்களின் ஓட்டுகளை பெறவும், நடுக்கடலில் மீனவர்களுடன் ஒரு வாரம் பயணித்து, மீன் பிடித்து, மீனவர்கள் மாநாடு நடத்த, சீமான் திட்டமிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

எம்.ஜி.ஆர்., காலத்திற்கு பின், அ.தி.மு.க., ஓட்டு கள் ஜெயலலிதாவுக்கு கிடைத்தன. அவரது மறைவுக்கு பின், தி.மு.க.,வுக்கும், சீமான் கட்சிக்கும், மீனவர்களின் ஓட்டுகள் கிடைத்து வருகின்றன. கடந்த லோக்சபா தேர்தலில், மீனவ சமுதாயத்தினர் அடர்த்தியாக வசிக்கும் தொகுதிகளில், தி.மு.க.,வினருக்கு 55, நாம் தமிழர் கட்சிக்கு, 25 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், மீனவர் சமுதாயத்தை சேர்ந்த மரிய ஜெனிபர், நா.த.க., சார்பில் போட்டியிட்டு, மூன்றாம் இடம் பிடித்தார். கடலோர மாவட்டங்களான, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, துாத்துக்குடி உட்பட13 மாவட்டங்களில், 23 சட்டசபை தொகுதிகளில், மீனவர்களின் ஓட்டுகள் 1 சதவீதம் உள்ளது.

புது கோஷம்

த.வெ.க., தலைவர் விஜய், மீனவர்களின் நலனுக்காக, சுறா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதால், அவரது கட்சிக்கு, மீனவர் சமுதாய ஓட்டுகள் மடை மாற்றமாகி விடக் கூடாது என்பதற்காகவும், தன் கட்சிக்கு ஏற்கனவே கிடைத்த ஓட்டுகளை தக்க வைக்கவும், மீனவர்கள் மாநாட்டை சீமான் நடத்த உள்ளார். செப்., மாதம் துாத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடலிலிருந்து, ராமேஸ்வரம் வரை, ஒரு வாரம் நடுக்கடலில் மீன் பிடிக்கிறார். கரையில் இறங்கிய பின், மீனவ கிராமங்களில், அவர்களின் வீடுகளில் தங்கி, சாப்பிடுகிறார். பின் ராமேஸ்வரத்தில், 'மீனவர் பாதுகாப்பே மானத்தமிழர் பாதுகாப்பு' என்ற கோஷத்துடன் மாநாடு நடத்த உள்ளார். மாநாட்டில், படகோட்டி படத்தில் மீனவராக வரும் எம்.ஜி.ஆர்., அணிந்த, மீனவர்களின் பாரம்பரிய உடையை, சீமான் அணிந்து, தோளில் வலையுடன் நின்று பேச திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

T. Sivaraj
ஜூலை 19, 2025 19:24

Ask Seeman to Go to Srilanka to Tamil Desiyam there. Since Mr.Prabakaran left, Seeman is the right person to get Tamil Desiyam in Sri Lanka. Along with him, we can also send his followers also.


பிரேம்ஜி
ஜூலை 19, 2025 18:19

இவர் பேச்சை மீன்கள் கூட கேட்காது! தம்பிகள் மட்டுமே கேட்டு வாழ்க்கையில் வீணாகிப் போவார்கள்!


NACHI
ஜூலை 19, 2025 13:09

நேரம் சரியில்லை போல


பாரத புதல்வன்
ஜூலை 19, 2025 12:12

மாடுகளுடன் பேசி கூட்டம் நடந்து முடிந்து விட்டது.... அடுத்து மீன்களுடன் கடலில்.... அய்யா சைமன் இப்போ தெருவில் தெரு நாய் தொல்லை அதிகம், நடமாட முடியல... கொஞ்சம் தெரு நாய்களுக்கு மத்தியில் கூட்டம்நடத்தி கோரிக்கையை கேட்டறிந்து, தீர்வு கண்டால் அதுவும் உங்களின் முப்பாட்டன் திறமைக்கு சான்று.....


theruvasagan
ஜூலை 19, 2025 12:12

என்னாது. நடுக்கடல்ல படகோட்டி எம்ஜியார் கெட் அப்ல வந்து பேசுவாரா. இவர் வாயத் தொறந்தா கண்டதையும் பேசிகிட்டே இருப்பாரே. அப்புறமா சுத்தி நிக்கறவங்க வெறுத்துப்போய் இப்படித்தான் பாடுவாங்க. கடல்மேல் மிதக்க விட்டான். எங்களை கண்ணீரில் தவிக்க விட்டான் என்று.


அரவழகன்
ஜூலை 19, 2025 07:19

அண்ணன் ஜெயிப்பது தோற்பது வேறு விஷயம் ஆனால் புதிது புதிதாக கூட்டம் சேர்ப்பது தமிழக அரசியல் கட்சிகளுக்கு பெரிய தொல்லையாகி வருகிறது


SUBBU,MADURAI
ஜூலை 19, 2025 05:41

நான் இப்போது சொல்லப் போகும் ரகசியத்தை கேட்டு என் அறிவார்ந்த மீனவ தம்பிகள் மிரண்டு போய் பயப்படாமல் இருக்க வேண்டும். இவ்வளவு நாட்களாக என் மனதுக்குள்ளே மறைத்து வைத்திருந்த உண்மையை வெளிக் கொணரும் நேரம் வந்து விட்டது! இத்தனை நாட்களாக சீமான் என்ற பெயரில் மாறு வேடத்தில் இருந்த நான்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை