வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தமிழ்நாட்டில் விற்பனை ஆகும் அரிசியில் பாதி கர்நாடகாவில் இருந்து வருகிறது . இலவச மின்சாரத்தை ரத்து செய்துவிட்டால், மீதம் இருக்கும் விவசாய நிலத்தையும் வீட்டுமனை ஆக மாற்றி விற்றுவிட்டு, 100% அரிசி கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம்.
ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுகிட்டான் தாழ்ப்பாள் அப்படிங்கற மாதிரி இருக்கு செய்தி.
இலவச மின்சாரம்தானே அதனை பக்கத்து நிலத்துக்கு மணிக்கு இவ்வளவென்று விற்பனை செய்வது யாருக்குமே தெரியாதா?
இலவச மின் இணைப்பு இருந்தும் எத்தனை விவசாயிகள் இன்று வரை பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்? கடந்த ஐம்பது வருடங்களில் விவசாய குடும்பத்திலிருந்து விவசாயத்தை கைவிட்டு வேறு வேலைக்கு போன தலை முறை மிக அதிகம். இன்று விவசாயத்தில் இருப்பவர்கள் கூட பிழைப்பிற்கு வேறு வழி தெரியாததால் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் அவர்களின் அடுத்த தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புவதில்லை. ஏற்கனவே 100 நாள் வேலை என்று விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. 100 நாள் வேலையில் மக்கள் சொகுசாக ஃபோட்டோவிற்கு இருவேளை போஸ் கொடுத்து விட்டு உட்கார்ந்திருந்தது கூலி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விவசாய வேலைக்கு வர நூறு யோசனை செய்கிறார்கள். போதாக்குறைக்கு, கடின உடல் உழைப்பு தேவைப்படும் விவசாய வேலைக்கு இன்றைக்கு இருக்கும் பெரும்பகுதி மதுபிரியர்கள் ஆண்களால் வர முடியவில்லை. அவர்கள் உடல் அவர்கள் வசம் இல்லை. மத்திய மாநில அரசுகள் வருடத்திற்கு பலமுறை வாழ்க்கை செலவு குறியீடு cost of living index அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு அளிக்கிறது. அவர்களின் வருடாந்திர சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான சம்பள அதிகரிப்பு ஆகியவைகள் தனி. மனம் தொட்டு சொல்லுங்கள். விவசாய பொருட்களுக்கு அரசு தரும் விலை உயர்வு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு அளவுக்காவது வருமா? இருந்தும் ஒரு இந்திய குடிமகனாக, விவசாயியாக இலவச மின்சாரம் சேமிக்க வழியுண்டு என்று ஒப்புக் கொள்கிறேன். முப்பது நாற்பது வருடங்கள் முன்பு வரை விவசாய பாசன பெரிய மற்றும் சிறு வாய்க்கால்களை அந்த அந்த கிராமத்தினரே வருடம் தவறாது வெட்டி சுத்தம் செய்து கொள்வார்கள். அதற்கான பண தேவையை வாத்து மேய்ப்பதற்கும் மற்றும் வரப்புகளில் பில் அறுப்பதற்கும் ஏல குத்தகை விட்டு அந்த பணத்திலும், விவசாயிகளிடம் ஏக்கருக்கு இவ்வளவு என்று வசூல் செய்து அந்த பணத்திலும் வெட்டி சுத்தம் செய்து கொள்வார்கள். என்று அரசு நாங்கள் வாய்க்கால்களை தூர் வருகிறோம் என்று உள்ளே வந்ததோ அன்று பிடித்தது சாபம். இதில் இரண்டு கழகங்களும் விதி விலக்கில்லை. இன்று பெரு வாரியான வாய்க்கால்கள் தூர்ந்து போய் கிடக்கின்றன. நதியில் தொடர்ந்து மணல் அள்ளியதின் பலன் நதியின் தரை வாய்க்கால் மதகுக்கு கீழே போய் விட்டது. நதியில் கரை புரண்டு தண்ணீர் ஓடினாலும் தண்ணீர் வயலுக்கு பாயாத நிலைமைதான். கிராமங்களில் வசிக்கும் மனசாட்சி எவரும் இந்த உண்மையை ஒப்புக் கொள்வார்கள். நதி நீர் வாய்க்கால்கள் வழியாக வயலுக்கு கிடைத்தால் மின் தேவை குறையும். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது. அதே போல குறுவை சாகுபடி என்பது வைகாசி பிறந்து, மே பதினைந்து தேதிக்கு மேல் விதையிட்டு காவிரி நதியில் நீர் வரும்போது நடவு செய்வார்கள். அறுவடை செப்டம்பர் மாதம் வரும். அறுவடையின் போது வரும் மழைக்கு பயந்து இன்று சித்திரை கார் என்று பங்குனியில் மார்ச் மாதமே விதையிட்டு ஜூலை ஆகஸ்டில் அறுவடை செய்கிறார்கள். பலன் மண்டையை பிளக்கும் கோடையில் இரண்டு மூன்று மாதங்கள் நிலத்தடி நீர்தான் பாய்ச்சப்படுகிறது. அரசு மழையினால் நெல் நனைந்தாலும் உடனே வாங்க உறுதி கொடுத்தால், மீண்டும் குறுவை சாகுபடி கொண்டு வரமுடியும். இதன் மூலம் கோடையில் குறைந்த நீர் செலவில் உளுந்து, பயிறு, எள் போன்ற பயிர்களும் முன்பு போல மீண்டும் கோடை சாகுபடி செய்ய முடியும். விவசாயிகளுக்கும் கூடுதலாக ஒரு சாகுபடி கிடைக்கும். பருப்பு எண்ணை வித்துக்களின் விலையேற்றம் தடுக்கப்படும். மீண்டும் கூறுகிறேன். அரசும் விவசாயிகளும் திறந்த மனதோடு இணைந்தால் அரசுக்கும் செலவு குறையும். விவசாயமும் செழிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நிலத்தடி நீர் குறையாமல் காப்பாற்றப்படும்.
Normal everywhere in the country. Politicians pampering farmers for vote bank politicians wasting tax payers money. GIVE SUBSIDY TO THE RIGHT FARMERS NOT TO LANDLORDS WHO EARN MUCH MORE THAN ANY INDUSTRIALISTS.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகாரம் படைத்தவர்கள் ஒரு மின் இணைப்பில் 3 மோட்டார் பயன்படுத்தி வருகிறார்கள். இதே சாமானிய மக்கள் பயன்படுத்தினால் 1 லட்சம் 2 லட்சம் பையன் அடித்திருப்பார்கள்
மூன்று ஏக்கருக்கு குறைந்த நிலத்தில் லாபகரமாக நன்செய் விவசாயம் செய்யவே முடியாது. புன்செய் க்கு ஏழெட்டு ஏக்கராவது தேவைப்படும். நிபுணத்துவமும் ஆற்றலும் உள்ள முற்போக்கு விவசாயிகள் தங்கள் நிலத்தைத்தவிர வேறு நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றனர்.அவர்களைத் துன்புறுத்துவது நன்கு படிக்கும் மாணவர்களை ஃபெயிலாக்குவது போன்ற செயல். துண்டு நிலங்களில் பயிர் செய்பவர்களை கூட்டுப்பண்ணை விவசாயம் செய்ய கட்டாயப்படுத்தலாம். நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அவர்கள் கட்டாயம் பண்ணைக் குட்டைகளை அமைக்கவும் உத்தரவிடவேண்டும். மற்றபடி 250 அடி ஆழத்திற்கு மேல் ஆழ்குழாய் அமைப்பது எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட வேண்டும்.
250 அடிக்கு மேல் ஆளுக்கு குழாய் அமைப்பதை தடை செய்துவிட்டு அனைவரும் 100 நாள் கூலி வேலைக்கு போய் சோத்துக்கு வழி இல்லாமல் சாக வழி சொல்கிறீர்கள் வாய்க்கால் மற்றும் ஆற்றுப் படுகைகள் தவிர முக்கால்வாசி இடங்களில் ஆழம் சென்றால் மட்டுமே நீர் கிடைக்கின்றது நீர் மேலாண்மைகளில் அரசு சரியாகவும் முறையாகவும் அறிவியல் பூர்வ பூர்வமாகவும் செயல்பட்டு மக்களையும் விவசாயிகளையும் ஊக்கி வைக்க வேண்டுமே அன்றி அனைத்து பொறுப்புகளையும் விவசாயிகள் தரையில் சுமத்துவது போன்று உள்ளது தங்கள் பேச்சு
இலவச திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக இருப்பது மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் ஊழல் செய்வதற்கு தோதுவாக அமைகிறது.
தமிழக மின் வாரியத்தின் நஷ்ட்டத்திற்கு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் இலவச மின்சாரம்தான் ஒரே காரணம்போல் போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். மின்சாரவாரிய நஷ்ட்டத்தை ஈடுகட்ட பலமுறை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தியும் வாரியம் மென்மேலும் எப்படி நஷ்ட்டத்தை சந்திக்கின்றது? முதலில் வாரியத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து நிர்வாகத்தை மேம்படுத்துங்கள். மற்ற வணிக்கம்போல் விவசாயத்திற்கும் லாப கணக்குப்போட்டால் நாம் உண்ணும் உணவு 500 ரூபாய்வரை வரும்.
மிகச் சரியாக சொன்னீர்கள்
அரிசி கிலோ ஆயிரம் ரூபா விக்கும் பரவால்லயா தண்ணீர் வந்தா ஏன் மின் மோட்டார் தேவை படுது வாய் இருக்குனு பேசவேண்டாம்
மேலும் செய்திகள்
மின் இணைப்பில் முறைகேடு 5 இணைப்புகள் துண்டிப்பு
23-Dec-2024