உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்., - த.வெ.க., - வி.சி., கூட்டணி எம்.எல்.ஏ.,க்களிடம் கிரிஷ் சோடங்கர் பேச்சு

காங்., - த.வெ.க., - வி.சி., கூட்டணி எம்.எல்.ஏ.,க்களிடம் கிரிஷ் சோடங்கர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''சட்டசபை தேர்தலில், த.வெ.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் இணைந்து, காங்கிரஸ் ஏன் தனி அணி அமைக்கக்கூடாது' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கேள்வி எழுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், கிராம கமிட்டி பொறுப்பாளர்கள், துணை அமைப்பு நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நேற்று, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n1x5mb01&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பேசியுள்ளதாவது:காங்கிரஸ் வென்ற தொகுதிகள் மீது, அமைச்சர்கள் கண் வைக்கின்றனர். அந்த தொகுதிகளை ஒதுக்குவதில், தி.மு.க., நெருக்கடி தந்தால், மாற்று அணி உருவாக்க வேண்டும். விஜய் கட்சிக்கு இளைஞர்களிடமும், பெண்களிடமும் வரவேற்பு அதிகமாக உள்ளது. மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., மீது அதிருப்தி அலை வீசுகிறது. வட மாவட்டங்களில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தோர் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே, தென் மாவட்டங்களில் உள்ள காங்கிரசார், பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் பேசியதாக தெரிகிறது.அதற்கு பதிலளித்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளதாவது: எம்.எல்.ஏ.,க்கள் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு போராட வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் மீது நம்பிக்கை ஏற்படும். அரசு தவறுகளை துணிச்சலாக சுட்டிக்காட்ட வேண்டும். தி.மு.க., தரப்பில் நெருக்கடி தரும்பட்சத்தில், காங்கிரஸ், த.வெ.க., - வி.சி., கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். கட்சியின் முன்னணி அமைப்புகளின் செயல்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளன. கட்சியில் இணையும் இளைஞர்கள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. வரும் 3 மாதங்களுக்குள் துணை அமைப்புகளில், காலியாக உள்ள அனைத்து கமிட்டிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளதாக தெரிகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நிக்கோல்தாம்சன்
மே 16, 2025 20:58

சசிகாந்த் செந்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகும்போது இது நடக்கும் என்றே தோன்றுகிறது


chanakyan
மே 16, 2025 16:51

அப்படியே கோபால், கம்மிகளையும் சேத்துக்கோங்க. மக்கள் நல கூட்டணி மறுபடி வந்த மாதிரியும் இருக்கும், லயோலா ஜோஜஃப்க்கு ஏத்த பில்டப்பு கிடைக்கும்.


kamal 00
மே 16, 2025 09:31

சீக்கிரம் செஞ்சு மண்டைய போடுங்கடா


Haja Kuthubdeen
மே 16, 2025 09:04

விஜய் கட்சி திமுக அல்லக்கை கட்சிகளுக்கு ஒரு அருமையான துருப்பு சீட்டாகத்தான் பார்க்கனும்.இதை மனதில் வைத்துதான் விஜய் பிஜெபியை விட்டு தூரமா இருப்பதே...பிஜெபியுடன் உறவு இல்லை என்பதால் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் திருமா போன்றோர் விஜயுடன் கை கோர்க்க எந்த தடையுமே இல்லை...நிச்சயம் இந்த கட்சிகள் சீட் பேர விசயத்தில் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும்.


TMM
மே 16, 2025 05:57

மிகவும் அறும்மையான திட்டம்.இது நிறைவேரினால்,காங்கிரஸ் என்ற சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் கடைசீ ஆணி.கூடவே திமுக க்கும்


சந்திரசேகரன்,துறையூர்
மே 16, 2025 16:23

அப்படீன்னா 200 சீட் ஜெயிப்பது உறுதி என்று திடமாக சொன்ன எங்கள் முதல்வர் அப்பாவின் ஆசை நிறைவேற வாய்ப்பு இல்லையா?


A Viswanathan
மே 16, 2025 17:04

Anyhow remove present Government from the power


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை