உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசு மீதான கோபத்தை பாடல்களாக தெறிக்க விடும் அரசு ஊழியர்கள்

அரசு மீதான கோபத்தை பாடல்களாக தெறிக்க விடும் அரசு ஊழியர்கள்

சென்னை : தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாததால், அரசின் மீது கடும் கோபத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் கோபத்தை பாடல்களாக, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்புக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.அதை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். தி.மு.க., ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளாகியும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அரசு மீதான தங்கள் கோபத்தை, பாடல்கள் வழியே வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் அதிகம் பகிரும் பாடல்கள்:

இன்னைக்கு சொல்வாங்க, நாளைக்கு சொல்வாங்க, ஏக்கத்தோடு காத்திருக்கிறோம் வருடக் கணக்கில... பென்ஷன் திட்டம் எப்போ வரும் தமிழகத்தில... வாழ்க்கையின் ஆணிவேரை அசைத்து பிடுங்கி விட்டு, சொன்ன சொல்லை மறந்து விட்டு, நிதிச்சுமை காட்டுறீங்க... புதிதாய் ஒன்றும் கேட்கவில்லை; இருந்ததைத்தான் கேட்கிறோம். மரியாதை குறையாமலே மானத்தோடு வாழ்ந்து விட்டோம்... ரிட்டையர்டு ஆன பின்னே மற்றவர்கள் தயவினிலே... தன்மானம் காத்துக்கொள்ள சன்மானம் எதுவுமின்றி, தள்ளாடி தடுமாறி தவித்து நிற்போம் தனிமையிலே...எம்.எல்.ஏ., - எம்.பி., என்று எல்லாருக்கும் பென்ஷன் உண்டு. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., எல்லாருக்கும் பென்ஷன் உண்டு. அரசாங்க வேலை என்றால், அனைவரும் சமம் தானே. வித்தியாசம் காட்டுறீங்க... வேதனையை மூட்டுறீங்க...இதுபோல, பல பாடல்களை ஒலிக்க விட்டுஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Subburamu Krishnasamy
பிப் 21, 2025 18:57

Government servants are fully responsible for total failure of Government machinery. They are the active members in many political parties. Activity involving in election by supporting corrupt political netas and their parties, not neutral peoples Most of the government officers are corrupt, inefficient and lacks knowledge in their fields


Karthik
பிப் 21, 2025 18:07

முன் யோசனையின்றி ஓட்டுப் போட்டவர்கள்.. பின் பாட்டுப் போடுகிற அவல நிலை - இந்த ஆசிரியர்கள் சங்கத்திற்கும் . பாடம் எடுக்கும் வாத்தியார்களுக்கு நிச்சயம் இது ஒரு பாடமாக இருக்கும். அடுத்த முறையும் ஓட்டு போடுங்கள்.. அனைவரும் ஆடி பாடி வீடியோ வெளியிட்டு யூடியூப் ல் வருமானம் ஈட்டலாம்.


PARTHASARATHI J S
பிப் 21, 2025 15:22

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்த முடியாது. ஒவ்வொரு மாதமும் கடன் வட்டி பளு ஏறுது. கஜானா காலியாக எந்த கட்சியும் வாக்குறுதி தராது. உச்சநீதி மன்றம் நீட் தேர்வை ஒரு மாநிலத்துக்காக விலக்காது. அதிலும் திமூக வெற்றி பெறாது. புதிய கல்வி கொள்கை பற்றி அண்ணாமலை மிகமிக ஆழமாக விளக்கி விட்டார். திமுகவின் கனவு நிறைவேறாது. பாஜக அரசு திராவிட மாடல் கொள்கைகள் சுயநலம், தம்பட்டம், கட்டபஞ்சாயத்து ஆகியவைகள், தேசவிரோத ஓட்டு வங்கி அரசியல் ஆகியவற்றிற்கே உதவுகிறது என தினமலர் கட்டுரை புட்டு புட்டு வைக்கிறது. மக்களே ! திமுக கூட்டணிக்கு ஒட்டு போட்டால் தமிழகம் பெருத்த வீழ்ச்சி ஆகும். சும்மா மத்திய அரசை திட்டிக்கொண்டே இருப்பதற்கு அந்த கூட்டணிக்கா உங்களது ஒட்டு ? சிந்திப்பீர்.


A Viswanathan
பிப் 21, 2025 13:08

எம்எல்ஏ,எம் பி பென்ஷன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை .மக்களின் வரி பணத்தை அவர்களுக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை