வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐடியா குடுத்துட்டீங்களே ..... உடனே இணையதளம் அமைக்க டெண்டர் விட்டுவிடுவார்கள் ... பாருங்க ...
சென்னை: காகிதமில்லா சேவைக்கு, பல்வேறு துறைகளும் மாறி வரும் நிலையில், இணையதளமே இல்லாமல் பொதுப்பணி துறை இயங்கி வருகிறது.பொதுப்பணித் துறை வாயிலாக வருவாய், வேளாண்மை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மக்கள் நல்வாழ்வு, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு கட்டடம் கட்டப்படுகிறது. தலைமை செயலகம், அரசு மருத்துவமனைகள், அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் போன்றவையும் பராமரிக்கப்படுகின்றன. பொதுப்பணித்துறை துவங்கப்பட்டு, 154 ஆண்டுகளாகிறது. பதிவேற்றம்
இந்த துறையில் இருந்து, நெடுஞ்சாலை, நீர் வளம் உள்ளிட்ட பல துறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அப்படி பிரிக்கப்பட்ட துறைகளுக்கு, முறையாக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. அவற்றின் துறையின் செயல்பாடுகள் குறித்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள், பணியாளர் தேர்வு உள்ளிட்ட விபரங்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இணைய தளம் வாயிலாக பல்வேறு சேவைகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.ஆனால், பொதுப்பணித் துறைக்கு இதுவரை இணையதள வசதி இல்லை. இதற்கான பணி, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகிறது. இன்னும் இணையதளம் பயன்பாட்டிற்கு வரவில்லை. முன்னர், பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்களுக்கும், உதவி பொறியாளர்களுக்கும் ஒரே சங்கம் இயங்கி வந்தது. நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன், பொதுப்பணித் துறைக்கு தனி சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கத்திற்கு ஒரு மாதத்தில் தனி இணையதளம் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டு உள்ளது.இருந்தும், பொதுப்பணித் துறைக்கு இணையதளம் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், இன்னும் இணையதள வசதி வரவில்லை. வளர்கின்றன
வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, தமிழக குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல துறைகள், இப்போது சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகின்றன. நவீன வளர்ச்சிக்கு ஏற்ப துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. தமிழக அரசு காகிதமில்லா செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பாரம்பரியமிக்க பொதுப்பணித் துறை இன்னும் பழைய நிலையிலேயே உள்ளது.
ஐடியா குடுத்துட்டீங்களே ..... உடனே இணையதளம் அமைக்க டெண்டர் விட்டுவிடுவார்கள் ... பாருங்க ...