உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கவர்னர் ஒரு இடம்; முதல்வர் ஒரு இடம்:காந்தி நினைவு நாளில் தான் இப்படி!

கவர்னர் ஒரு இடம்; முதல்வர் ஒரு இடம்:காந்தி நினைவு நாளில் தான் இப்படி!

சென்னை: தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையில், மோதல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று காந்தி நினைவு தினத்தில், இருவரும் தனித்தனியே நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே, கொள்கை ரீதியாக மோதல் ஏற்பட்டுள்ளது. அரசின் செயல்பாடுகளை, கவர்னர் அவ்வப்போது விமர்சித்து வருகிறார். அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். ஆளும் கட்சியான தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியும், கவர்னரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் காந்தி நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நடக்கும் நிகழ்வில், கவர்னரும், முதல்வரும் பங்கேற்பர். கடந்த ஆண்டு அப்பகுதியில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், சென்னை அருங்காட்சியகத்தில், காந்தி சிலை அருகே, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கவர்னரும், முதல்வரும் பங்கேற்றனர்.தற்போது இருவருக்கும் இடையே, கருத்து மோதல் அதிகரித்துள்ள நிலையில், நேற்று அருங்காட்சியகத்தில், காந்தி சிலை அருகே, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது உருவ படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.அங்கு வராத கவர்னர் ரவி, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்கு சென்றார். அங்கு காந்தி சிலைக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவன் மாணவர்கள், பாரதம் குறித்த தேசபக்தி பாடல்கள், காந்தி பஜனைப் பாடல்களை பாடினர். சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை கவுரவிக்கும் வகையில், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை, கவர்னர் ரவியின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.சென்னை, ஜன. ௩௧-

கவர்னர் ரவி குற்றச்சாட்டு

கவர்னர் ரவி வெளியிட்ட அறிக்கை:காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள, ஒரு பரந்த நிலத்தில், 1956ம் ஆண்டு காமராஜரால் கட்டப் பட்ட, பிரமாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை, அவரது பிறந்த நாள் மற்றும் உயிர்த் தியாக தினத்தை, நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா?தேசப் பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை, காந்தி மண்டபத்தில், தகுந்த முறையில் நடத்தவும், முதல்வரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள், பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. காந்தி தன்னுடைய வாழ்நாளில், திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால், கடுமையாக எதிர்க்கப்பட்டு, கேலி செய்யப்பட்டார். ஆனால், இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜன 31, 2025 12:28

இப்படியாவது ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு பங்கேற்கவேண்டுமா..?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜன 31, 2025 12:28

ஆனால் காந்தி மட்டும் எப்பொழுதும் சந்தோஷமாக தன் பொக்கை வாய் தெரிய சிரித்துக்கொண்டே உள்ளார் இவர்கள் இருவருக்கும் மற்ற அனைவரின் கைகளிலும் மணி பர்சுகளிலும் தான் காந்தி சிரிக்கிறார். தமிழக மக்கள் மனங்களில் இந்த சந்தோஷ் சிரிப்பு எப்போது வரும். 2026 வந்தால் ஆவது பரவாயில்லை. அப்பொழுதும் ஒரு கூட்டம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளி நடப்பு போராட்டம் என்று நடத்தி அவ்வப்போது வரும் மனதின் குரல் ஆன சந்தோஷத்தை அழிக்க பார்க்கும். ஆக தமிழக மக்களுக்கு சந்தோஷம் நிம்மதி என்பது இனி கனவாகவே போய் விடும்.


அப்பாவி
ஜன 31, 2025 08:40

நேத்திக்கி உற்சாகமாக டீ பார்ட்டி. இன்னிக்கி அஞ்சலி, அதிலும் அரசியல் பேச்சு. நல்லாவா இருக்கு?


veera
ஜன 31, 2025 08:27

வழக்கமாக கருத்து போட்டவுடன் தான் 200 ரூவா குடுப்பாங்க.... ஆன இன்னைக்கு காலைல காசு போட்டுட்டாங்க....அதுதான் இந்த காலை கொத்தடிமை கதறல்..


Oviya Vijay
ஜன 31, 2025 06:25

நான் பலமுறை தொடர்ந்து கூறி வருவதைப் போல் இவர் ஒன்றும் APJ அப்துல் கலாம் ஐயா அல்ல தமிழக மக்கள் இவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட... இவர் ஒரு தேவையற்ற இடைஞ்சல் என்றே தமிழக மக்கள் நினைக்கின்றனர். ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பது போல எங்கிருந்தோ வந்தவர் அவ்வளவு தான். கவர்னர் என்னும் அலங்கார பொம்மைப் பதவியில் அமர்ந்து கொண்டு மத்திய சங்கி அரசு என்ன சொல்லிக் கொடுக்கிறதோ அவ்வாறே மாநில அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பவர். இவர் தமிழக மக்களை தன் பேச்சால் செயலால் ஈர்த்து விடலாம் என எண்ணினால் அது தோல்வியில் தான் முடியும்.


vivek
ஜன 31, 2025 08:32

புருடா, கலாம் என்றால் கழகம் என்று சொன்னது உன் கொத்தடிமை கும்பல்...அவர் பேரை சொல்ல உனக்கு அருகதை இல்லை...


Dharmavaan
ஜன 31, 2025 19:11

தமிழ் மக்களுக்கு நீதான் ஹோல் சேல் ஏஜெண்டா


சமீபத்திய செய்தி