வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இதெல்லாம் ஒரு செய்தியா
பாதிப்பு இல்லாமல் வாழக்கூடியது .
தமிழக ரயில்களில் வியாபாரம் செய்பவர்கள் ஹிந்தி மட்டும் தெரிய வேண்டும்
சுத்தம் இல்லாத எல்லா இடத்திலும் கரப்பான் பூச்சி உற்பத்தியாகும் நட்சத்திரமாவது ஒன்றாவது
பெங்களூரில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் நடத்தும் சித்தார்த் தைலானி, தன் காரில் மோதிய, பைக் வாலிபர் மீது போலீசில் புகார் அளித்தார். கூகுள் ஏ.ஐ.,யின் சாட்பாட் 'ஜெமினி'யின் உதவியை பயன்படுத்தி, தயார் செய்த மூன்று பக்க புகார் மனு, கார் டேஷ்போர்டு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் அளித்திருந்தார்.
மும்பை ஜே.டபிள்யூ., மரியட் ஐந்து நட்சத்திர ஹோட்டலில், வெளிநாட்டு நண்பர்களுடன் சாப்பிடச் சென்றார், பிரபல இதய சிகிச்சை நிபுணர் அசோக் சேத். சாப்பிட தயாரானபோது, உணவு தட்டுகளுக்கு இடையே கரப்பான் பூச்சியை கண்டதும், அவருக்கு கடும் அதிர்ச்சி. 'டின்னருக்கு யார் வந்திருக்கிறார் பாருங்கள். குட்டி கரப்பான் பூச்சி, எங்கள் மேஜையில் உணவை பகிர்ந்து கொள்ள விரும்பியது. நாங்கள் வற்புறுத்தியும் அங்கிருந்து செல்ல மறுத்து விட்டது. ஒரு வேளை அதற்கு பாஸ்தாவை விட பீட்சா தான் தேவைப்பட்டிருக்கலாம்' என்று வலைதளத்தில் பதிவிட்டார் அசோக் சேத். 'கரப்பானை கண்டதும், பசியே எடுக்கவில்லை, டின்னரை முடிக்காமலேயே புறப்பட்டு விட்டேன்' என, கூறியுள்ள சேத், 'நல்லவேளையாக நாம் துக்காராம் முண்டேவின் பகுதியில் இருக்கிறோம். அவர் இதை நிச்சயம் கவனிப்பார்' என்று உணவு மற்றும் மருந்து நிர்வாக கமிஷனரான அவரை 'டேக்' செய்துள்ளார். கண்ணீரை துடைப்பவர் கடவுள்
கோரக்பூர் - பாட்னா ரயில் பயணத்தின்போது, பெண் பயணி வைத்திருந்த குழந்தை அழத் தொடங்கியது. தாய்க்கு டீ கொடுக்க வந்த விற்பனையாளர், குழந்தையை சமாதானப்படுத்த முயற்சித்தார். விளையாட்டான சைகைகளை செய்தும், சிறிது நேரம் நடனம் ஆடியும் குழந்தையை மகிழ்வித்து அழுகையை நிறுத்தினார்.
ஜப்பானில் வசிக்கும் இந்திய பெண் பிரகதி, தன் ஐபோனை தொலைத்து விட்டார். பல மணி நேரம் ஆன பிறகே, போன் தன்னிடம் இல்லாததை உணர்ந்த அவர், ஆப்பிளின் Find My App உதவியுடன் தேடினார். போன் இருக்குமிடம் தெரிந்தது. நள்ளிரவு என்ற போதும் தேடிச்சென்றார். அவர் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாரோ, அதே இடத்தில் போன் இருந்தது. இப்படி அவர், போனை தொலைத்து மீட்பது இது ஐந்தாம் முறை. 'உண்மையை சொல்லப் போனால், இது போன்ற விஷயங்கள் ஜப்பானில் மட்டுமே சாத்தியம் என்று எனக்குத் தோன்றுகிறது' என்கிறார், பிரகதி.
வட கிழக்கு மாநிலமான நாகாலாந்து அமைச்சர் தெம்ஜென் இம்மா அலோங், வலைதளத்தில் வெளியிட்ட குரங்கு மசாஜ் வீடியோ வைரல் ஆகியுள்ளது. திறந்திருந்த சலுான் கடைக்குள் வருகிறது அந்த குரங்கு. முடி வெட்டுவதற்கான நாற்காலியில் ஏறி படுத்துக் கொள்கிறது. சவரத் தொழிலாளி, குரங்கின் உடல், கால்களை நன்றாக மசாஜ் செய்து விடுகிறார். கண்களை மூடி 'மசாஜ்' செய்வதை அனுபவிக்கிறது குரங்கு.
இதெல்லாம் ஒரு செய்தியா
பாதிப்பு இல்லாமல் வாழக்கூடியது .
தமிழக ரயில்களில் வியாபாரம் செய்பவர்கள் ஹிந்தி மட்டும் தெரிய வேண்டும்
சுத்தம் இல்லாத எல்லா இடத்திலும் கரப்பான் பூச்சி உற்பத்தியாகும் நட்சத்திரமாவது ஒன்றாவது