உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உலகம் சுற்றும் வாய்ப்பு; உற்சாகத்துடன் கிளம்பிய எம்.பி.,க்கள்!

உலகம் சுற்றும் வாய்ப்பு; உற்சாகத்துடன் கிளம்பிய எம்.பி.,க்கள்!

'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை குறித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் எடுத்துச் சொல்ல, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் 75 பேர், பல நாடுகளுக்கு சென்று வந்ததனர். 'எங்களுக்கு இப்படி உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லையே...' என, பல எம்.பி.,க்கள் வருத்தப்பட்டனர். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் சில எம்.பி.,க்கள் பேசினராம். இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தாராம் பிரதமர் மோடி. 'இந்த மாதம் மற்றும் அடுத்த மாத துவக்கத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஐ.நா., பொதுசபைக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு எம்.பி.,க்களை அனுப்பலாம்' என முடிவெடுத்தாராம் பிரதமர். இதன்படி, 30 எம்.பி.,க்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. முதல் குழு நியூயார்க் சென்று திரும்பிவிட்டது; இரண்டாவது குழு இப்போது நியூயார்க் சென்றுள்ளது. முதல் குழுவில் தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன், இரண்டாவது குழுவில் தி.மு.க.,வின் வில்சன், த.மா.கா.,வின் வாசன் உள்ளிட்ட எம்.பி.,க்கள் உள்ளனர்.ஒரு வாரம் இலவச பயணம்; உடன் ஒருவரை அழைத்துச் செல்லலாம். முதல் வகுப்பு விமான பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல் என, ஏகப்பட்ட வசதிகள் இருக்கும்.இப்படி அனைத்து கட்சி எம்.பி.,க்கள் ஜாலியாக அமெரிக்கா சென்று வந்தால், அடுத்த மாத இறுதியில் நடக்க இருக்கும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் சபை அமைதியாக நடக்குமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 27, 2025 23:49

நான் உலகம் சுற்றிவிட்டேன். நீங்களும் சாப்பிடுங்க. மேநே காலியா, அபி ஆப் காயியே.


ராஜா
அக் 26, 2025 14:37

பிரதமரும் அவரது பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே மாதிரி தான். உறுப்பினர்கள் சபையில் எந்தவொரு கேள்வி கேட்க கூடாது என்பதை உறுதி செய்து கொள்கிறார் போல


எஸ் எஸ்
அக் 26, 2025 10:40

திமுக எம்பி வில்சன் பிஜேபியை கடுமையாக எதிர்ப்பவர். அவருக்கு இந்த வாய்ப்பு அவசியமா? இல்லை ஒருவேளை திமுக வின் பிஜேபி எதிர்ப்பு சிறுபான்மையினரை ஏமாற்றும் நாடகமா?


Sun
அக் 26, 2025 09:35

தமிழகத்தில் பா.ஜ.க வை சேர்ந்த கட்சிக்காக மிகவும் துடிப்பாக வேலை செய்த சிறுபான்மையின தலைவர் ஒருவரின் படிக்கும் மகன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். அவரின் எதிர் காலமே கேள்விக் குறியாகிறது. ஆனால் அங்கே டெல்லியில் தனது அரசியல் எதிரியான தி.மு.க. எம்.பி.க்களை அமெரிக்காவுக்கு உல்லாசப் பயணம் அனுப்பி வைக்கிறார். இப்படி இருந்தால் தமிழகத்தில் எப்படி தாமரை மலரும்?


திருட்டு அயோக்கிய திராவிடன்
அக் 26, 2025 06:36

இந்த அயோக்கியர்கள் ஜாலியாக சுற்றுவதற்கு மக்களின் வரிப்பணமா?தலைவா! இதை பற்றி யோசியுங்கள். நீங்கள் என்னதான் நல்லது செய்தாலும் அந்த அயோக்கியர்கள் சபையை நன்றாக நடத்த விட மாட்டார்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 26, 2025 01:52

பாவம் செத்தவங்களை சாக்கா வெச்சி இவனுங்க உலகம் சுத்தி வந்து ஜாலியா கொண்டாடுறானுங்க. ம்ம்ம்.. உள்ளதை சொன்னா தேசத்துரோகின்னு கதறல் வேற


A viswanathan
அக் 26, 2025 07:19

நாம் கொடுக்கும் வரி பணத்தில் இவர்கள் ஊர்சுற்றுவதற்கு அரசம் உடந்தை.யார் ஆண்டாலும் இதே நிலைதான்.மக்கள் ஏமாளிகள்


திகழ் ஓவியன், Ajax Ontario
அக் 26, 2025 11:18

அரசியல் தான் உங்க மாடல்