உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்தார்: தவெக - எம்எல்ஏ மீது பகீர்

ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்தார்: தவெக - எம்எல்ஏ மீது பகீர்

- நமது நிருபர் குழு -'சேலம் மேற்கு தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ., ஓட்டுக்கு, 2,000 ரூபாய் கொடுத்தார்' என, ஓமலுார் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்ற வேட்பாளர் அதியமான் பேசிய வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலுார் தொகுதி, த.வெ.க., வேட்பாளர் அதியமான், 97,707 ஓட்டுகள் பெற்ற நிலையில், 14,539 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் மணியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, ஓமலுாரில் நடந்த த.வெ.க., ஆலோசனை கூட்டத்தில், அதியமான், தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசினார். அதை, அக்கட்சியினரே வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பரப்பினர். வீடியோவில், 'என் தோல்விக்கு முக்கிய காரணம், சேலம் மேற்கு தொகுதி தான். அங்கு போட்டியிட்ட நம் கட்சி வேட்பாளர், 100 சதவீதம் அனைத்து இடங்களிலும் ஓட்டுக்கு, 2,000 ரூபாய் கொடுத்தார். இதனால் கடைசி இரு நாட்களில் என் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. நான் மக்களை சந்தித்து நல்ல விஷயங்கள், திட்டங்களை கொண்டு சேர்த்தேன். 'பக்கத்து தொகுதியில் பணம் கொடுத்ததால், என் உழைப்பு அனைத்தும், கடைசி இரு நாட்களில் வீணாகிப்போனது. இதனால் குறைந்தபட்சம், 5,000 முதல், 6,000 ஓட்டுகள் வரை கிடைக்காமல் போயிருக்கலாம்' என, பேசினார். 'ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உடைத்துள்ளோம்' என, திருச்சியில் முதல்வர் விஜய் பேசிய நிலையில், சேலம் மேற்கு தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ.,வான லட்சுமணன் மீது, சக கட்சி வேட்பாளர் கூறிய பகிரங்க குற்றச்சாட்டு, அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பெயரை சொல்லி, கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக, ஒரு ஆடியோ நேற்று முன்தினம் பரவியது. அதுவும், அவர்கள் கட்சியினரே வெளியிட்டுள்ளனர். 'ரீல்ஸ்' வெளியிட்டு ஆட்சியை பிடித்தோம் என கூறும் த.வெ.க.,வினர், அதே பாணியில் உட்கட்சி பிரச்னைகளையும், 'ரீல்ஸ்' மோகத்தில் பரப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sanjit
ஜூன் 05, 2026 21:03

நம்புர மாதிரி சொல்லுங்கட. டி v k la பாதி பேர் பணவசதி இல்லாதவர்கள்


சிவகுமார்
ஜூன் 05, 2026 17:42

விளங்கிரும்


V.Mohan
ஜூன் 05, 2026 15:46

அய்யா வாங்க அதியமான் அவர்களே. நீங்க வெற்றி பெற்றிருந்தால், இந்த பகீர் புகாரே வந்திருக்காது?. சேலம் மேற்கு தொகுதி தவெக வேட்பாளர் திடீர் வேட்பாளர். இந்த தொகுதியில் அதிமுக அல்லது திமுக இரண்டும் தான் மாறி, மாறி ஜெயித்துள்ளனர் இவ்வளவு காலம். யவெகவுக்கு புதிய இந்த வேட்பாளர், ஒரு முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர். மறைந்த திரு வீரபாண்டி ஆறுமுகம் அவர்களது வலது, இடது கரமாக செயல்பட்டு சேலம் பள்ளப்பட்டி புது பஸ்ஸ்டாண்ட் போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்தவர். மிக அதிகமாக மக்களால் விரும்பப்படாதவராக இருந்தவர். சிறப்பான அடைமொழி ..... .கொண்ட .....போலீஸ் ஆக தவெக வேட்பாளர்களின் தகுதிகள் பற்றி தகவல்கள் வெளி வர ஆரம்பித்துள்ளன. நல்லது


Giri Sukumar
ஜூன் 05, 2026 14:37

Only mr annamalai. Can save tamilnadu


Ramaswamy Jayaraman
ஜூன் 05, 2026 14:13

உங்கள் கட்சிக்காரரே வோட்டுக்கு பணம் கொடுத்ததாக சொல்கிறாரே, யார் மீது நடவடிக்கை எடுக்க போகிறார், தலைவர் விஜெய்


Tamilan
ஜூன் 05, 2026 10:15

நடிகர்களை நடிப்பில் படத்தில் வரும் விஞ்சான மேஜிக்குகளை நம்பி மாநிலத்தையே பறிகொடுத்துவிட்டார்கள் தமிழர்கள். இனி தமிழ் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது


VENKATASUBRAMANIAN
ஜூன் 05, 2026 08:11

எல்லாம் நாடகம். தவெகவும பணம் கொடுத்துள்ளது. லாட்டரி குடும்ப தயவு உள்ளதே. ஊடகங்களில் சும்மா காசு கொடுக்கவில்லை என்று பொய் பேசுகிறார்கள்.


Nesan
ஜூன் 05, 2026 07:58

சின்ன பய புள்ளைக அப்படிதான் இருப்பாங்க ஆனா கொலைகார பயககலா இன்னும் ஆகவில்லை. பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 05, 2026 14:26

இளமையெல்லாம் வெறும் கனவு மயம்... இதில் மறைந்தது சிலகாலம்... தெளிவும் அறியாது... முடிவும் தெரியாது... மயங்குது எதிர்காலம்”...ன்னு எழுதி வைத்த கவிப்பேரரசு கண்ணதாசன் வரிகளைப் போல சின்னபுள்ளைங்க..ன்னு தப்பா எடை போட்டுடாதீங்க...? இந்த சின்னபுள்ளைங்க... அறிவாளிகள் கூட்டத்தில் சிக்கினால், அறிவாளி ஆவான்...


கனோஜ் ஆங்ரே
ஜூன் 05, 2026 19:17

அதே சின்னபுள்ளைங்க திருடன் கூட்டத்தில் சிக்கினால் திருடனாவான்... கொள்ளைக்கார கூட்டத்தில் சேர்ந்தால் கொள்ளைக்காரன் ஆவான்... ஊழல்வாதி கூட்டத்தில் சிக்கினால் ஊழல்வாதி ஆவான்... அதுமட்டுமல்லாமல்... அறிவற்ற கேணயன் கூட்டத்தில் சிக்கினால் அறிவற்றவனாவா...


ram
ஜூன் 05, 2026 07:55

Thuiya SAKTHI


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை