உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: அனுமதி அளித்தது உயர்நீதிமன்றம்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: அனுமதி அளித்தது உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தவும் அறுபடை வீடு மாதிரி வடிவங்கள் அமைக்கவும் அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனு: ஹிந்துக்களிடம் பக்தியை அதிகரிக்கும் நோக்கில் மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் ஜூன் 22 ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள் (மினியேச்சர்கள்) மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட உள்ளன. அவற்றின் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்து பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iy7i3io6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி வடிவங்களை அமைக்க அனுமதிக்க போலீஸ் கமிஷனர், அண்ணாநகர் போலீசாருக்கு மனு அனுப்பினோம். அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனுமதி மறுத்தார். அதை ரத்து செய்ய வேண்டும். அறுபடை வீடுகளின் மாதிரி வடிவங்களை அமைக்க, பூஜைகள் நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஜூன் 10ல் நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: போலீஸ் தரப்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு மனுதாரர் தரப்பில் விளக்கமளிக்க வேண்டும். மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு மீது ஜூன் 12 க்குள் போலீசார் முடிவெடுக்க வேண்டும். விசாரணை ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார். நீதிபதி பி.புகழேந்தி நேற்று விசாரித்தார்.அறுபடை வீடு மாதிரி வடிவங்கள் அமைக்க அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அரசு தரப்பு: ஜூன் 22 பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிக்குள் மாநாடு நடத்தி முடிக்க வேண்டும். முருகன் மாநாடு பற்றி மட்டுமே பேச வேண்டும். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் கந்துாரி கொடுப்பது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அது பற்றி பேசக்கூடாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த அனுமதியளித்து அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.மனுதாரர் தரப்பு;மாநாட்டு அனுமதிக்கு போலீசார் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். 'மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அந்தந்த டி.எஸ்.பி.,அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி அட்டை (பாஸ்) பெற வேண்டும். டூவீலர்களில் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடு தற்காலிக மாதிரி வடிவங்கள் நிறுவ கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை, மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும். 'ட்ரோன்' பறக்க அனுமதியில்லை' என்ற நிபந்தனைகள் ஏற்புடையதல்ல. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:மாநாட்டில் பங்கேற்க வாகன அனுமதி கோரிய 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும். நிராகரித்தால் அதற்குரிய காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும். அறுபடை வீடு தற்காலிக மாதிரி வடிவங்கள் அமைக்க நில உரிமையாளரின் அனுமதி பெறப்பட்டுள்ளது. அருகில் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளதாகக்கூறி போலீஸ் தரப்பில் நிராகரித்தது ஏற்புடையதல்ல. இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாநாட்டு வளாகத்தில் 2 'ட்ரோன்'கள் பறக்க அனுமதிக்க வேண்டும். மாநாடு நடைபெறும் மைதானத்தில் ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடு நடந்துள்ளது. மாநாட்டின்போது ஒலி மாசு ஏற்படாமல் இருப்பதை மனுதாரர் தரப்பு உறுதி செய்ய வேண்டும். வாகன ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை. அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் இடம்பெறக்கூடாது. மதம் சம்பந்தப்பட்ட கருத்துக்களை மட்டுமே பேச வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Mahendran Puru
ஜூன் 14, 2025 21:33

தமிழகத்தில் ராமர் விலை போக மாட்டார் என்று முருகனை வைத்து அரசியல் செய்யத் துணிந்துள்ளது சங்கிக் கட்சி. நீதி மன்றத்திற்கு இது தெரியவில்லையா


venugopal s
ஜூன் 14, 2025 21:22

தமிழக காவல்துறை அந்த முருகக்கடவுளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்!


சதீஷ் குமார்
ஜூன் 14, 2025 19:51

மதுரையில் அனுமதி மறுத்தது அரசு. இன்று திருச்சியின் மையப்பகுதியில் மாலை நேரத்தில் பேரணிக்கு அனுமதி அளித்து சுமார் 3மணி நேரமாக டிராபிக்கில் பொதுமக்கள் படும் துயரத்திற்கு அளவில்லை. என்ன விதிமுறைகளோ? தெரியவில்லை.


Amruta Putran
ஜூன் 14, 2025 19:42

We Tamils have right to conduct Muruga Devotees conference, we strongly condemn Dravidia government


Sivakumar
ஜூன் 14, 2025 17:24

Why permission from the Court required to conduct a Hindu religious gathering? Was it sanctioned when the TN did similar one in the past? Why is it required now? For what gatherings Court permission required? Is there a guidelines/ Law / Constitutional order for this? Looks Strange!!


எஸ் எஸ்
ஜூன் 14, 2025 15:15

இந்து மதத்தை இழிவு படித்தும் கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தி விட்டு பின் தன் மத பண்டிகை மற்றும் மாநாடு களுக்கு அவர்களிடம் கெஞ்சும் வினோத பிறவிகள் தமிழர்கள்


sankaranarayanan
ஜூன் 14, 2025 12:40

இந்துக்கள் நிறைந்த இந்தியாவில் ஒரு பகுதியில் முருகனுக்கு ஒரு மாநாடு பக்தி மாநாடு நடத்த இவ்வளவு கஷ்டமா இவ்வளவு எதிர்ப்பா இவர்கள் இந்தியாவில் பிறக்கவும் வளரவும் தகுதி அற்றவர்கள் இதே போன்று ஒரு முஸ்லீம் நாட்டிலே அல்லது கிருஸ்துவர்கள் நாட்டிலோ செய்ய தைரியம் யாருக்காவது இருக்கிறதா இந்து மதத்தில் மட்டுந்தான் சகிப்புத்தன்மை என்பது உண்டு நீ என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றால் கடைசியில் இது போன்று பேசுபவர்கள் அழிவைநாடித்தான் செல்ல வேண்டும் அவர்கள் தானாகவே அழிவார்கள்


ameen
ஜூன் 14, 2025 15:38

இது இந்துக்கள் நடத்தும் மானாடு இல்லை....இது இந்துத்துவாக்கள் நடத்தும் மாநாடு.... இந்துகள் நடத்துவது சாமிக்கு,இந்துவா நடத்துவது ஆசாமிகளுக்கு அரசியலுக்கு...


ஆரூர் ரங்
ஜூன் 14, 2025 11:15

ஆனா சனாதன ஒழிப்பு மாநாடு போட்டு ஹிந்து தர்ம நம்பிக்கைகளை இழிவாகப் பேசினால் நீதி நடவடிக்கை இல்லை. அந்த மாநாட்டுக்கு கட்டுப்பாடுகள், தடையில்லை?.


Oviya Vijay
ஜூன் 14, 2025 09:46

சங்கே முழங்கு என்பதைப் போல இது ஒரு சங்கிகள் முழங்கும் மாநாடு... எந்த மதத்தின் மாநாடும் அமைதியாக நடத்தினால் பரவாயில்லை. ஆனால் இந்த மாநாடு பிரச்சனை மற்றும் எதிர்காலத்தில் கலவரம் உருவாக்குவதற்கென்றே நடக்கும் மாநாடு என்பதால் தான் இங்கே அனுமதி வழங்க இவ்வளவு யோசனைகள். ஆனாலும் கோர்ட் குறிப்பிட்டவாறு நிபந்தனைகள் இந்த மாநாட்டில் கடைபிடிக்கவில்லையென்றால் பட்டக்ஸ்ஸில் பொளந்து கட்டுவார்கள் போலீஸார். சங்கிகள் கவனம் கொள்வீர்...


vivek
ஜூன் 14, 2025 12:03

பாவம் இந்த ஓவிய விஜய் நிலைமை....எவளோ அசிங்கப்பட்டாலும் வாங்கும் இருநூறு ரூபாய்க்கு வெட்கமில்லாமல் கருத்து போடுது......


guna
ஜூன் 14, 2025 12:04

ஓய் ஓவியா சரியான காமெடி பிசு நீ


vivek
ஜூன் 14, 2025 12:07

அசிங்கம் அசிங்கம். ஓவியா நீ அசிங்கம்


vivek
ஜூன் 14, 2025 12:09

ஓவிய ....உன். பேட்டாக்ஸ் கருகி போச்சா.....


எஸ் எஸ்
ஜூன் 14, 2025 12:33

இந்துக்கள் ஒன்றுபட்டால் ஏன் ஓவியாவுக்கு வாந்தி பேதி ஆகுது?


Guru
ஜூன் 14, 2025 09:25

இந்துக்கள் மாநாடு நடத்துவது முக்கியமில்லை. இந்த இந்து விரோத ஆட்சியை அகற்றுவதில் ஒற்றுமை காட்டுங்கள்.


முக்கிய வீடியோ