உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக ஊழல் குறித்த அமலாக்கத்துறை அறிக்கை லீக்; அதிகாரிகளுக்கு அமித் ஷா கேள்வி

தமிழக ஊழல் குறித்த அமலாக்கத்துறை அறிக்கை லீக்; அதிகாரிகளுக்கு அமித் ஷா கேள்வி

தி .மு.க.,வுக்கு இப்போது நேரம் சரியில்லை போலிருக்கிறது. ஒரு பக்கம் கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை; இன்னொரு பக்கம், 'தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், பணியிடங்கள் நிரப்பும் விஷயத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது' என, அமைச்சர் நேருவுக்கு எதிராக அறிக்கை அளித்துள்ளது, அமலாக்கத் துறை.இந்த விஷயம், முதலில் ஒரு ஆங்கில நாளிதழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 'அமலாக்கத் துறை அறிக்கை எப்படி, 'லீக்' ஆனது?' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளை கேட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=grk8ap4m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமலாக்கத் துறையினரோ, 'நாங்கள் வெளியிடவில்லை' என சொல்லியுள்ளனர். 'அமலாக்கத் துறை, தமிழக டி.ஜி.பி.,க்கு அனுப்பிய இந்த ரிப்போர்ட்டை, தமிழக போலீசார் சிலர் லீக் செய்துள்ளனர்' என, அமித் ஷாவிடம் சொல்லப்பட்டதாம்.'தமிழக போலீசில், சில அதிகாரிகள் தி.மு.க.,விற்கு எதிராக உள்ளனர். தி.மு.க., சொல்லும் வேலைகளை, சட்டத்திற்கு எதிராக இருந்தாலும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், சில சீனியர் அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான், நேருவிற்கு எதிரான அமலாக்கத் துறை அறிக்கையை, லீக் செய்துள்ளார்' என்கின்றனர், டில்லி அதிகாரிகள். எது எப்படியோ... தி.மு.க.,விற்கு இனி பிரச்னை தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சிட்டுக்குருவி
நவ 02, 2025 23:34

ஊழல்களையும் லஞ்சத்தையும் மத்திய குற்றமாகவும் ,எந்த தடையும் இல்லாமல் மாநில காவல்துறைக்கு அப்பாற்பட்டு விசாரிக்கும் சட்டநடைமுறையை மாற்றி அமைத்தால் நாட்டில் லஞ்சமும் ஊழலும் குறையும் . இப்போது இருக்கும் சட்டநடைமுறையில் மாநில காவல்துறைக்கு அனுப்பினால் காவல்துறை ஊழல்புரிந்தகவர்க்கு முன்கூட்டியே தகவல் அளித்து தடையங்களை அழிக்க முற்படலாம் .அதுக்கூட லீக் ஆனதற்கு காரணாமாக இருக்கலாம் .


சிட்டுக்குருவி
நவ 02, 2025 21:31

ஊழல்களை விசாரிப்பதில் ரகசியம் ஏன் வேண்டிக்கிடக்கு .எந்த ஒரு ஊழலாக இருந்தாலும் வழக்கு விசாரணையின்போதே மக்களுக்கு தெரியவேண்டும் .ஊழல்களால் பாதிக்கப்படுவது மக்களேதான் .மக்களின் பாதிக்கும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளவழிவகைசெய்யவேண்டும் .இதில் யாரையும் குறை சொல்லக்கூடாது .


Venugopal S
நவ 02, 2025 15:19

அமலாக்கத்துறை அறிக்கையை வெளியிட்டது நிச்சயமாக மத்திய பாஜக அரசு தான் என்பதில் சந்தேகமில்லை.பாஜகவினர் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதில் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே!


Raja
நவ 02, 2025 14:55

அது எப்படி திமுக மட்டும் தான் எல்லா கட்சியும் டார்கெட் செய்யுது ஏன் ? அதிமுக 10 வருஷ ஆட்சியில் என்ன ஊழலே பண்ணலையா ? பாஜக கூட்டணியில் வந்துவிட்டால் அவர்கள் எல்லாரும் என்ன புனிதர்கள் ஆகி விட்டார்களா ?


krishna
நவ 02, 2025 15:45

OK DRAVIDA MODEL MUTTU RAJU 200 ROOVAA COOLIE SANCTION.


Muralidharan S
நவ 02, 2025 14:30

மத்தியில் ஆட்சி மாறி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.. இதுவரை ஊழல்வாதிகள் ஊழல்கள் நிரூபிக்கப்பட்டு யாரும் இதுவரை தண்டனை பெறவில்லை.. தெருவோர பாம்பு கீறி சண்டை காண்பித்து பிழைக்கும் ஆள், கடைசி வரை ரெண்டையும் நிஜமாக சண்டை போட விடவே மாட்டான்.. பாம்போ கீறியோ ஏதோ ஒன்று சண்டையில் இறந்துவிட்டால் அதை வைத்து பிழைப்பு நடத்தும் அவன், அப்புறம் எதை வைத்து தொழில் நடத்துவது.. அது மாதிரிதான் இதுவும்... மக்களுக்கு அப்போஅப்போ ஏதாவது ஒன்றை விளையாட்டாக காண்பித்து, அவர்களுக்கு பொழுதுபோக்கு கொண்டேதான் இருக்கவேண்டுமே தவிர.. நிஜமாக பாம்பையோ கீரியையோ சண்டைபோட வைத்து அழித்துவிடக்கூடாது... மக்கள் கடமை இறுதியில் காசுபோட்டு விட்டு செல்வதுதான்.. அது மாதிரி மக்களின் கடமை ஒட்டு போட்டுக்கொண்டே இருப்பதுதான்.. ஒரு நல்லதும் மக்களுக்கு நடந்துவிடப்போவதில்லை.. வெறும் பொழுதுபோக்குத்தான்.. வாழ்க ஜனநாயகம் / பணநாயகம்..


SUBBU,MADURAI
நவ 02, 2025 13:23

பங்களிப்பு 99.99% சதவீதம்!


seshadri
நவ 02, 2025 11:38

இது எல்லாம் ஒன்றுமேயில்லை. எல்லோரும் கூட்டாளிகள்தான். அரசியல்வாதிகள் எல்லா அரசியல்வாதிகளும் பி ஜே பி சேர்த்துதான். அகில இந்தியாவிலும் யாராவது ஒரு ஊழல் அரசியல்வாதி சிறையில் இருக்கிறானா என்று சொல்லுங்கள் இல்லை. எல்லோருக்கும் பதவி வேண்டும் மத்தியில் மசோதாக்கள் நிறைவேற்ற ஆதரவு வேண்டும். போதா குறைக்கு உச்ச நீதி மன்றம் எல்லோருக்கும் பணம் உள்ளவர்களுக்கு என்ன வசதியும் செய்து கொடுக்கும். ஊழல் குற்றம் சுமத்த பட்ட அணைத்து அரசியல் வாதிகளும் பிணையில் வசதியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


SIVA
நவ 02, 2025 11:35

டிஜிபி விவகாரத்தில் சீனியர்களை பதவியில் அமர்த்தாமல் இவர்களுக்கு வேண்டிய நபரை டிஜிபி ஆக்கியதால் ஏற்கனவே பல அதிகாரிகள் கோபத்தில் உள்ளனர், அதனால் அதிருப்தியில் யாராவது செய்து இருக்கலாம், ஆனால் இவர்கள் நேர்மையாக இருந்து இந்த பதவிக்கு வரவில்லை அதனால் இவர்கள் கோபத்தில் அர்த்தம் இல்லை, இப்போது ஊழலால் இந்த அதிகாரிகள் நேரடியாக பாதிக்க படுகின்றனர் இதுவரை இவர்கள் செய்த ஊழல் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் அப்போது இவர்கள் அதை பற்றி ஏன் கவலைப்படவில்லை .....


N S
நவ 02, 2025 11:29

குள்ள நரிகளை கண்டு, விரைவில் களையெடுக்கப்படும்.


Barakat Ali
நவ 02, 2025 08:54

[எது எப்படியோ... தி.மு.க.,விற்கு இனி பிரச்னை தான்] .... சுமார் அறுபதாண்டுகளாக அடஜஸ்ட் செய்து கொண்டு தனக்கு டேமேஜ் இல்லாமல் பார்த்துக்கொண்ட கட்சி... அமலாக்கமெல்லாம் ஜுஜுபி ....


சமீபத்திய செய்தி