உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்குதான்: அன்புமணி

 வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்குதான்: அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மாம்பழம் சின்னமும், 'பி' படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரமும் எனக்குதான் உள்ளது. அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார். பா.ம.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னையை அடுத்த அக்கரையில் நடந்தது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 17ல் நடக்கவுள்ள சிறை நிரப்பும் போராட்டம், சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அன்புமணி பேசியதாவது: வாழ்க்கை முழுதும் பா.ம.க.,வுக்கும், ராமதாசுக்கும் உண்மையாகத்தான் உழைத்தேன். இனிமேலும் அப்படித்தான் உழைப்பேன். இப்போது ஒரு மோசமான சூழல் உருவாகி விட்டது. அந்த சூழ்நிலையில் தான் மக்களை சந்திக்க நடைபயணத்தை துவங்கினேன். இந்த பயணத்தில், பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ராமதாசுடன் இருக்கும் தி.மு.க., கைக்கூலிகள் தங்களின் சுயநலத்திற்காக, அவரது பெயரை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். பா.ம.க., தலைவராக என்னை அங்கீகரித்து, மாம்பழம் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது; அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது. கட்சி வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும், 'ஏ, பி' படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்குத் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். *** புல் அவுட்: பா.ம.க., - மா.செ.,க்கள் அமைச்சர்களாவர் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில், பா.ம.க.,வினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும், அதில் விடுபட்டவர்களை சேர்க்க வேண்டும். இன்னும் 108 நாட்களில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மா.செ.,க்கள் கூட்டத்துக்கு வந்திருப்போரில் சிலர், அடுத்த சில மாதங்களில் எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக மாற இருக்கின்றனர். தேர்தல் நேரத்தில் பா.ம.க.,வினரான நாம், கோட்டை விட்டு விடுகிறோம்; அதை தொடரக்கூடாது. பா.ம.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, வீடு வீடாகச் சென்று விளக்க வேண்டும். பா.ம.க., சார்பில், 200 இளம் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

vaiko
நவ 14, 2025 02:00

ஆனால் ஐயா ராமதாஸ் சொன்னால் வன்னிய இன மக்கள் மாம்பழத்தை தூக்கி குப்பையில் எரிந்து விடுவார்கள். அதை எடுத்து சௌமியாதான் சாப்பிட வேண்டும்


Easwar Kamal
நவ 13, 2025 19:14

கட்சியை கையக படுதிக்கோ. உன் அப்பன் பாட்டுக்கு dmk கிட்டயே போய் சரணடைய போறாரு. dmk இந்த தேர்தலில் ஒளிச்சு கட்ட வேண்டிய கட்சி. அதுக்கு உன் அப்பன் மீண்டும் puththuyir கொடுத்துற போறாரு. பார்த்து மவனே ஜாக்கிரதை


Baskaran
நவ 13, 2025 16:16

பா.ம.க. அன்பு மணிக்கே சொந்தம் ராமதாஸ் அவர்கள் வயதான காலத்தில் ஓய்வெடுப்பதே சிறந்தது


அரவழகன்
நவ 13, 2025 10:16

உங்க அக்கப்போர் எப்போ தான் முடியும்....பா.ம.க.என்று தான் ஜெயிக்கும்


Ajrjunan
நவ 13, 2025 09:27

அன்புமணி பி ஜெ பின் அடிமை. ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய தெரியாது. இந்த தேர்தலுடன் இரண்டு மாங்காய்க்களுக்கும் வன்னிய மக்கள் ஊறுகாய் போடவேண்டும்.


duruvasar
நவ 13, 2025 09:37

ராமதாஸ் திமுகவின் அடிமை. ஊறுகாய் போடுவதில் கருணாநிதியின் மகன் கைதேர்ந்தவர் . கவலையை விடுங்கள்.


Appan
நவ 13, 2025 05:25

இப்படி அப்பன் மகன் சண்டை போடுவது சொத்தை காப்பாற்ற. பாவம் வன்னியர்கள் .இவர்களை மறந்து குடுமி சண்டை போடுகிறார்கள். பணம் பாதாளம் வரை செல்லும்.


சமீபத்திய செய்தி