உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கிளி ஜோசியம் பார்த்தேன்; பா.ம.க.,வில் குழப்பம் தீரும்

கிளி ஜோசியம் பார்த்தேன்; பா.ம.க.,வில் குழப்பம் தீரும்

சேலம் : சேலத்தில், பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் அளித்த பேட்டி:பா.ம.க.,வில் நிலவும் தந்தை, மகன் பிரச்னை, எதிர்பாராத ஒன்று. இதே மாதிரியான பிரச்னைகள் தலையெடுப்பதும் பின் இருதரப்பும் சமாதானமாகி மறைவதும், எல்லா குடும்பங்களிலும் உள்ள பிரச்னைதான். ஒரு மாதத்தில் இந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு வரும் என நினைக்கிறேன். குடும்பத்தில் நிலவும் சிறு பிரச்னையை, ஊடகங்கள், மற்றவர்கள் பெரிதாக்கக்கூடாது. சாதாரணமான இந்த பிரச்னை தீர, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த குழப்பத்தை பயன்படுத்தி, சில எதிர்க்கட்சிகள் குளிர்காய பார்க்கின்றன. அது நிறைவேறாது. 2026ல், பா.ம.க.,வை தவிர்த்துவிட்டு, எந்த கூட்டணியும் வெற்றி பெறாது. கட்சியிலும் தந்தை, மகன் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து, கிளி ஜோசியம், ஜாதகம் பார்த்தேன். இன்னும் ஒரு மாதத்தில் குழப்பம் சரியாகிவிடும் எனக் கூறி உள்ளனர். தந்தையர் தினத்தில், அன்புமணி, அவரது தந்தையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதனால், பிரச்னை இனி இழுக்காது; விரைவில் தீர்வு ஏற்படும். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mahendran Puru
ஜூன் 24, 2025 09:58

வேதனை வேதனை, என்னே இந்த அப்பா மகன் கட்சிக்கு வந்த சோதனை. விஷயம் கிளி ஜோசியம் வரைக்கும் போய்விட்டதே


Bhaskaran
ஜூன் 20, 2025 10:58

பகுத்தறிவு


பிரேம்ஜி
ஜூன் 20, 2025 07:05

இனிமேல் தேர்தல்கள் தேவையில்லை. கிளி ஜோசியம் பார்த்து MLA, MP இவர்களைத் தேர்வு செய்தால் நேரம், செலவு, சிரமம் மிச்சமாகும். நல்ல பகுத்தறிவு கொழுந்துகள் நமது அரசியல் வாதிகள்!


சமீபத்திய செய்தி