உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால்... வங்கதேசம் நரி தந்திரம்

இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால்... வங்கதேசம் நரி தந்திரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடந்த 1971ல் வங்கதேசம் உருவாக காரணமாக இருந்ததே இந்தியா தான். ஆனால், இன்று வங்கதேசம், பாகிஸ்தானின் ஊதுகுழலாக மாறிவிட்டது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததற்கு, பாக்., ராணுவ தளபதி அசிப் முனீர் தான் காரணம். தற்போது, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வந்தால், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் சீனா உதவியுடன் தாக்குதல் நடத்த வங்கதேசம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் பாகிஸ்தானின் மாஸ்டர் பிளான் தான்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yn77w3jw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வங்கதேசத்தில், ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின், தலைமை ஆலோசகர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அவர், 'எடுப்பார் கைப்பிள்ளை' போல் செயல்படுகிறார். பெயருக்கு தான் தலைமை ஆலோசகர். ஆனால், அவருக்கு தான் ஆலோசனை தேவைப்படுகிறது. இவரது நெருங்கிய, 'நட்பு வட்டமான' ஓய்வுபெற்ற வங்கதேச ராணுவ அதிகாரி பஸ்லுார் ரஹ்மான் என்பவர் புது குண்டை துாக்கி போட்டுள்ளார். 'பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் பட்சத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க வேண்டும். வங்கதேசம், பாகிஸ்தான் இணைந்த ஒரு ராணுவ கூட்டணிக்காக சீனாவுடன் பேச்சு நடத்த வேண்டும்' என, சர்ச்சைக் கருத்துக்களை அள்ளி வீசியுள்ளார்.பாகிஸ்தானுடன் சேர்ந்து வங்கதேசம் அடிவாங்குமா என்பது, போகப்போக தான் தெரியும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Sathiesh
மே 04, 2025 23:33

எதுக்கு குண்டெல்லாம் போடனும். இந்தியாவிலுள்ள பங்களாதேஷ் நாட்டவர்களை திருப்பி அனுப்பினாலே போதுமே. அது தன்னாலே பிச்சைக்கார நாடாகிவிடும்.


Tetra
மே 04, 2025 11:22

சும்மா பேத்தாதீர்கள். வெறும் வாய்ச் சவடால்தான். அர்னாப் கோஸ்வாமி போல. பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர நடவடிக்கை ஒன்றுமில்லை. 22ம் தேதியோ மறு நாளோ புகுந்து அடித்திருக்கவேண்டாமா?


Ramesh Sargam
மே 03, 2025 20:52

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஜாக்பாட் .. பாகிஸ்தானை அழிக்க நினைத்தார்கள். இப்பொழுது வங்கதேசத்தையும் அழிக்கவேண்டிய சூழல். ஒன்று அழிந்தால், இன்னொன்று அழியும்.


Ramesh Sargam
மே 03, 2025 20:49

பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டும் அழியவேண்டும்.


M Ramachandran
மே 03, 2025 19:32

சத்தம் போடாமல் வங்க தேசத்திய கபாலிக்கரம் செய்து அந்த யூனுஸு பயலை மேடம் ஷேக் ஹசீனா காலடியில் கிடத்த வேண்டும்.


naranam
மே 03, 2025 16:44

முதலில் பங்களாதேஷ் மீது கடும் தாக்குதலை நடத்தினால் போதும்.. பாகிஸ்தான் பயந்து விடும்...


தமிழ்வேள்
மே 03, 2025 13:26

அந்த கும்பல் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த சூழலில் இருந்தாலும்,,உதவி செய்ய தேவை இல்லை.... விஷப்பாம்புக்கு பால் வார்ப்பதும், அவர்களுக்கு உதவி செய்வதும் ஒன்றுதான்....


A.Kennedy
மே 03, 2025 11:01

ஏண்டா, ஒரு குண்டு போதும் என்று நாங்கள் இருக்கிறோம், இன்னொன்னு போட்டு உங்களையும் காலி பண்ண சொல்லுறீங்க, உங்களை சின்னா பின்னமாக ஆக்குவதற்கு குண்டு வேண்டாம், நாடு துப்பாக்கியே போதும்.


KRISHNAN R
மே 03, 2025 10:57

கேவல பிறவிகள்


Anand
மே 03, 2025 10:35

எனக்கு என்னமோ இந்தியா தற்சமயம் பாகிஸ்தானை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மட்டுமே செய்யும் காரணம் பாகிஸ்தானை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம், ஆனால் உடனடி தேவை பங்களாதேஷை துவம்சம் செய்வது அது தான் நடக்கும் என தோன்றுகிறது....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை