உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நல்லது செய்தால் மக்கள் நமக்கு ஓட்டளிப்பர்: பிரதமர் நரேந்திர மோடி

நல்லது செய்தால் மக்கள் நமக்கு ஓட்டளிப்பர்: பிரதமர் நரேந்திர மோடி

“மத்திய அரசு நல்ல திட்டங்களை நிறைவேற்றியதன் பிரதிபலிப்புகள், சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் தெரிகின்றன. மக்களுக்கு நல்லது செய்தால், அவர்கள் நமக்கு ஓட்டளிப்பர் என்பது உறுதியாக தெரிகிறது,” என, மத்திய அமைச்சர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.ஜம்மு - காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடினார்.

வரவேற்பு

இந்த கூட்டத்திற்கு பிரதமர் வந்தபோது, அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று ஹரியானா தேர்தல் வெற்றிக்காக கைகளை தட்டி, வாழ்த்து தெரிவித்து வரவேற்பு தந்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, 30 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மக்களுக்கு தேவையான நல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதில் அமைச்சர்கள் குறியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு திட்டமும் கடைசி மனிதனுக்கும் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.மக்களின் சக்திதான் மகத்தானது; அந்த சக்தியின் ஆதரவை பெற்றதால்தான், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்தை நம்மிடம் தர வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது.நாம் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருக்கிறோம் என்றால், அது மக்களுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள். மக்களுக்கு நல்லது செய்தால், நிச்சயம் நமக்கு ஓட்டளிப்பர்.மத்திய அரசு நல்ல திட்டங்களை நிறைவேற்றியதன் பிரதிபலிப்புகள், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளில் நன்றாகவே தெரிகின்றன. உங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள, 'ஆஸ்பிரேஷனல் டிஸ்ட்ரிக்ட்ஸ்' எனப்படும் 'வளர்ச்சி குறிக்கோள் எட்ட வேண்டிய மாவட்டங்களுக்கு' பயணம் செய்யுங்கள். அங்கு ஒவ்வொரு விஷயத்தையும் நேரடியாக பார்வையிடுங்கள்.

சரியான தகவல்கள்

குறைந்தது, 48 மணி நேரமாவது அங்கு தங்கி, கீழ்மட்ட அளவிலிருந்து சரியான தகவல்களை பெற வேண்டும். மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களுடன் உள்ள இணைஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அரவணைத்து ஒரு குழுவாக செயல்பட வேண்டும். எப்போதுமே தகவல்கள் வரும் வழிகளை அடைத்து விடாதீர்கள்; அவற்றை திறந்தே வைத்திருங்கள். அப்போதுதான் தகவல்கள் உங்களிடம் வந்து கொட்டும். இவ்வாறு அவர் பேசினார். - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nandakumar Naidu.
அக் 11, 2024 14:06

முஸ்லிம்களும், கிறித்தவர்களும் நீங்கள்(பிஜேபி) எவ்வளவு விழுந்து, விழுந்து நல்லது செய்தாலும் அவர்கள் ஒருபோதும் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கூடிய விரைவில் இந்தியாவை இந்துராஷ்டிரம் என்று சட்டம் இயற்றி அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள். இந்துக்களுக்கு இருப்பது இது ஒரே நாடு தான். இந்துக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு எவ்வளவு தான் உதவி செய்தாலும் அவர்கள் இந்துக்களுக்கு புதை குழி தோண்டிக்கொண்டிருக்கிரார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


gvr
அக் 12, 2024 10:25

you are absolutely correct


மோடி தாசன்
அக் 11, 2024 12:45

வாழ்க நீ எம்மான் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. இந்த நூற்றாண்டின் நிகரில்லா உலக தலைவர் மோடிஜி. இனி வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பேசப்படும் தலைவர் நம் மோடி ஜி. போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே, என்ற கீதாசரம் வழியில் நடந்து தன்னை தூற்றுபவர்களுக்கும் சேர்த்து உழைக்கும் தானை தலைவர் மோடிஜி.


ஆரூர் ரங்
அக் 11, 2024 10:36

மக்களுக்கு எது நல்லது எனக்கூட தெரியாமல் போதையில் இருப்பதற்குத்தான் டுமீல் அரசே சாராயக்கடை நடத்துவது. தொடர்ந்து ஏமாத்திகிட்டிருக்கும் கூட்டத்திற்கே மீ‌ண்டு‌ம் மீ‌ண்டு‌ம் ஓட்டு விழுது.


மாடல்
அக் 11, 2024 07:53

அதெல்லாம் சும்மா பிரதமர் அவர்களே. 200 ரூவா வரி கட்டுபவர்கள் பணத்தில் இலவசம், தெருவிற்கு தெரு மது விற்பனை...அதுவே போதும். நீங்கள் என்ன செய்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை