உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்யும் இளம் வயதினர் அதிகரிப்பு

போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்யும் இளம் வயதினர் அதிகரிப்பு

சென்னை; 'தமிழகத்தில் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது,'' என, தமிழக மன நல மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் கூறினார்.

அவர் அளித்த பிரத்யேக பேட்டி:

உலகில், 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அவர்களில், 18 வயதுக்கும் கீழானவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் என உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.இந்தியாவில் ஒரு நாளைக்கு, 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல, தற்கொலை பட்டியலில், இந்தியாவில் உள்ள மஹாராஷ்டிர மாநிலம் மும்பை, கர்நாடக மாநிலம் பெங்களூரு, தமிழகத்தின், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளன.கொரோனா பரவலுக்கு முன், இந்தியாவில் ஒரு லட்சம் பேரில், தற்கொலை செய்து கொள்வோர் 9.8 சதவீதமாக இருந்தனர். அது, தற்போது 12.4 சதவீதமாக உயர்ந்துள்ளது; இது பெரும் ஆபத்தானது. மனித வாழ்வு குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் என்பதையும் நினைவுப்படுத்துகிறது. இதற்கு முன், 20 வயதுக்கும் குறைவான இளம் வயதினர் சாலை விபத்துகளில் பலியாவது அதிகரித்து வந்தது. தற்போது, இளம் வயதினர் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வோர் அதிகரித்து வருகின்றனர். நுாறில், 10 பேராவது, போதை வஸ்துகளால் தற்கொலை செய்து கொள்வதும் தெரிய வந்துள்ளது.அதேபோல, குடும்ப சூழல் காரணமாக, 47 சதவீதம் பேர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. நீண்ட நாள் நோய் தாக்கம் காரணமாக, 17 சதவீதம் பேர், கணவன், மனைவி தகராறு காரணமாக, 5.5 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.காதல் தோல்வியால், 20 - 25 வயதுடையோரில் 4 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொள்வதும் தெரிய வந்துள்ளது. ஆய்வுகள், ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதன் வாயிலாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்கொலைக்கு பல விதமான காரணங்கள் இருந்தாலும், எந்த பிரச்னைக்கும் உயிரை விடுவது தீர்வல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Vijay
மார் 30, 2025 00:17

திமுக உருட்டல்கள் ரவுடிகள் ராஜ்யம் + கனிமவள கொள்ளை = சிக்கந்தர் மலை பாலியல் பலாத்காரங்கள் + யார் அந்த சார் = நிதி தரவில்லை, மும்மொழி கொள்கை, ஹிந்தி திணிப்பு அரசு ஊழியர்கள் அதிருப்தி + கஞ்சா புழக்கம் = தொகுதி மறுசீரமைப்பு டாஸ்மாக் ஊழல் = ரூ, மகளீர் உரிமை தொகை 2000/-. 100 நாள் வேலை திட்டம் ஊழல் = மத்திய அரசு தமிழர்களை வஞ்சிப்பதை நிறுத்த வேண்டும்.


அப்பாவி
மார் 29, 2025 18:33

புரச்சி தலவியின் கண்டு பிடிப்பு. டாஸ்மாக் நு சாராய யாவாரத்த அரசுடமையாக்கி ,லட்சோப லட்சம் பெண்களின் குடியைக் கெடுத்த...


m.arunachalam
மார் 29, 2025 18:07

வாழ்வதற்கான காரணங்கள் மிகவும் குறைவு . திணிக்கப்படும் எதிர்பார்ப்புகள் , ஆசைகளை அதிகரித்துகொண்டே போவது . பெரும்பாலான பெண்களின் தான் தோன்றி தனமான பழக்கம் வழக்கங்கள் . தெளிவில்லாத மற்றும் சிந்திக்க தெரியாத வாழ்க்கை முறை . பல விதமான வரி விதிப்புகள் . அதனால் தற்கொலை நல்ல தீர்வுதான் .


Siva Balan
மார் 29, 2025 15:38

திமுகவில் இருப்பவனும் திமுகவை ஆதரிப்பவனும் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்களே. சுருங்கச்சொன்னால் கூலிக்கு மாரடிப்பவர்கள். அவர்களிடமிருந்து நல்லதை எதிர் பார்க்க முடியாது.


Vijay
மார் 30, 2025 00:18

100 % உண்மை


சாலின்
மார் 29, 2025 14:45

அச்சச்சோ, சாராயக்கடை வருமானம் குறைஞ்சிடுமே....


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 29, 2025 13:04

கூலி வாங்கிக்கொண்டு கூத்து நடத்தும் கோவன் நந்தினி ஆகியோரை உடனடியாக கூப்பிடவும் . நாலு வருசத்துக்கு முந்தி யாரோ ஒரு அம்மணி இளம் விதவைகள் பத்தி ரொம்ம்ம்ம்ப கவலைப் பட்டாங்களே, அவங்க லீவுல போயிட்டாங்களா?


lana
மார் 29, 2025 11:00

நான் டாஸ்மாக் குறித்து 2 நாட்கள் க்கு முன் ஒரு comment அனுப்பினேன். தினமலர் வெளியிட வில்லை. மீண்டும் மீண்டும் ஒரே காரணம் தான். எவன் தாலி அறுத்து ஆலும் எனக்கு வருமானம் முக்கியம் என்று கேடு கெட்ட அரசும் ஊரில் எவன் செத்தாலும் கவலை இல்லை எனக்கு இலவசம் காசு என்று அலையும் மக்கள் இருக்கும் வரை இது மாறாது. ஒரு நாள் இங்கு உழைக்க இளைஞர் கள் திறனாளிகள் இன்றி தவிக்கும் போது நம்மை வேறு ஒருவன் அடிமையாக மாற்றும் போது அறிவு வரு‌ம்


ஆதிநாராயணன்
மார் 29, 2025 09:17

தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ள மாநிலம் என்று யாரோ ஒருவர் 2021 தேர்தலுக்கு முன்பு பேசியது ஞாபகம் வருகிறது


Vijay
மார் 29, 2025 08:29

கேட்டா குஜராத் மாநிலத்தை பார், உத்தரபிரதேச மாநிலத்தை பார் என்று ஒரு குரூப் முட்டு கொடுக்கும். நம்ம ஊருல என்ன நடக்குதுன்னு பாருங்கடா.


Padmasridharan
மார் 29, 2025 08:20

"எந்த பிரச்னைக்கும் உயிரை விடுவது தீர்வல்ல" அப்பொழுது, எந்தெந்த பிரச்சனைக்கு என்னென்ன மாதிரி தீர்வு காணவேண்டும் என்பதை விவரியுங்கள் மாணவர்களிடம். மது விக்கிற TASMAC ஐ மூடுவார்களா. பணத்துக்காகவும், காமத்துக்காகவும் அரசு அதிகாரிகள் அதிகார பிச்சை எடுப்பதை நிறுத்துவார்களா . திரைப்படத்தில் குடித்துவிட்டு பாடுவதையும், ஆடுவதையும் நிறுத்த சொல்லுங்கள். மக்கள் மத்தியில் சிகரட் பிடிப்பதற்கு ஃபைன் போடுங்கள். பள்ளிப் பருவத்தில் காதல் கூடாது என்பதை வலியுறுத்துங்கள். பிள்ளைகளுக்கு பிரச்சனை வந்தால் பெற்றோர்களை காது கொடுத்து கேட்கச்சொல்லுங்கள். ஆசிரியர்களை பாடத்துடன் வாழ்க்கையை கற்றுக்கொடுக்க சொல்லுங்கள். தேவையில்லாத educational courses மூடச்சொல்லுங்கள்.


புதிய வீடியோ