உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மோடியுடன் துரை சந்திப்பு அணி மாறுகிறதா ம.தி.மு.க.,?

மோடியுடன் துரை சந்திப்பு அணி மாறுகிறதா ம.தி.மு.க.,?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லியில் பிரதமர் மோடியை, தி.மு.க., கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான ம.தி.மு.க.,வின் முதன்மைச் செயலரும், எம்.பி.,யுமான துரை வைகோ சந்தித்துப் பேசினார். பார்லிமென்ட்டில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில், இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது, ரஷ்யாவின் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட, நுாற்றுக்கணக்கான இந்தியர்களை, பத்திரமாக மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வர வலியுறுத்தி, 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, 68 எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை, பிரதமரிடம் துரை அளித்தார். தமிழகத்தில், 'தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறி, தே.ஜ., கூட்டணியில் ம.தி.மு.க., இணையக்கூடும்' என்று பரவும் செய்தியை, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ, மறுத்துள்ள நிலையில், துரை வைகோ, பிரதமர் மோடியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சாதாரணமாக, யாருக்கும் பிரதமரின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காது என்ற சூழலில், துரை வைகோவுக்கு, கேட்டதும் நேரம் ஒதுக்கப்பட்டு, சந்திப்பும் நடத்தப்பட்டுள்ளது, மீண்டும் ம.தி.மு.க., நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதாரணமாக, யாருக்கும் பிரதமரின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காது என்ற சூழலில், துரை வைகோவுக்கு, கேட்டதும் நேரம் ஒதுக்கப்பட்டு, சந்திப்பும் நடத்தப்பட்டுள்ளது, மீண்டும் ம.தி.மு.க., நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. -நமது டில்லி நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

முருகன்
ஆக 05, 2025 20:57

அடுத்த கட்சி கூட்டணியில் கலகம் ஏற்படுத்த யாராவது வந்தால் உடனடியாக பார்க்க முடியும்


Manickam Kumar
ஆக 05, 2025 20:46

பத்து ஓட்டாவது வரட்டும்


Manickam Kumar
ஆக 05, 2025 20:45

இருந்து தொலையட்டும் விடுங்க அண்ணா.


பாரத புதல்வன்
ஆக 05, 2025 16:54

இவனை சேர்ப்பது... கொள்ளிகட்டையில் தலையை சொரிவதற்கு சமம்..... வேண்டாம்னு சொல்லுங்க மோடி அய்யா....


Sridhar
ஆக 05, 2025 14:58

இவனை போன்றவர்களை சேர்த்துக்கொள்வதை போன்ற கேவலம் வேறு எதுவும் இருக்கமுடியாது.


vee srikanth
ஆக 08, 2025 10:17

இவருக்கு எல்லாம் மோடி appointment கொடுக்கிறாரா ??


T MANICKAM
ஆக 05, 2025 12:14

ஆம் இவர்களின் கட்சி மக்களிடம் எமோஷனலாக பேசி அவர்களை தீக்குளிக்க வைத்து இவர்கள் அரண்மனை கட்டுவார்கள் . நமக்கு துக்கடா வேண்டியதில்லை. கள்ளத்தோணி கட்சி .


Muralidharan S
ஆக 05, 2025 10:22

தேசவிரோதிகளின், திராவிஷன்களின் கூட்டணியை நாடுவது பாஜகவிற்கு மற்றும் நாட்டுக்கு நல்லது அல்ல.... திமுகாவில் இருந்து பிறந்து வந்த அத்தனை கட்சிகளுமே தீய மற்றும் நாட்டின் அழிவு சக்திகள்.. காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டை ஊழல் சகதியில் ஊறவைத்த கட்சிகள்.


ராஜ்
ஆக 05, 2025 10:09

கிட்டவே சேர்க்காதீங்க


Haja Kuthubdeen
ஆக 05, 2025 10:01

எக்ஸ்ட்ரா லக்கேஜ் தேவையா....


Kulandai kannan
ஆக 05, 2025 08:52

வேண்டவே வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை