உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதம் மாற வலியுறுத்தி பேசுவதா? தி.க., நிர்வாகி மீது போலீசில் புகார்

மதம் மாற வலியுறுத்தி பேசுவதா? தி.க., நிர்வாகி மீது போலீசில் புகார்

தஞ்சாவூர்,: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பழைய மீன் மார்க்கெட் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, குடந்தை கத்தோலிக்க துறவியர் பேரவை சார்பில், சத்தீஸ்கர் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கும்பகோணம் மாநகர தி.க., செயலர் ரமேஷ் பேசுகையில், “ஹிந்து மதத்தில் பல்வேறு ஜாதி பிரிவுகள் உள்ளன. இதனால், மதத்துக்குள்ளேயே ஏற்ற தாழ்வுகள் உள்ளன. அப்படி இருப்பதைக் காட்டிலும், மதம் மாறி ஒரு கிறிஸ்துவனாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருக்கலாம். ''பச்சையாக சொல்லப் போனால், ஹிந்து மதத்தில் வேசி மகனாக இருப்பதை விட, சுயமரியாதை உள்ள மனிதனாக, வேறு மதத்தில் இருக்கலாம்,” என பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து, ஹிந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் குருமூர்த்தி தலைமையில், ஹிந்து அமைப்பினர், கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, தஞ்சாவூர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று காலை சென்று புகார் மனு அளித்தனர். இதுகுறித்து, குருமூர்த்தி கூறுகையில், “ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் இழிவுபடுத்துவது மட்டுமின்றி, கட்டாய மதமாற்றத்தை துாண்டும் வகையிலும், சமூக மோதல்களை உருவாக்கும் வகையிலும் பேசிய ரமேஷை கைது செய்ய வேண்டும். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

surya krishna
ஆக 06, 2025 21:44

வெள்ளைக்காரன் கால் வருணிகள் அப்படித்தான் இருப்பார்கள்


theruvasagan
ஆக 06, 2025 17:05

அப்ப இவன் எதுக்கு இந்து பெயரை வைத்துக்கொண்டு மத்தவங்களை மதம் மாறச் சொல்லுகிறான். அங்கெல்லாம் ஜாதி இல்லை என்றால் எதற்கு ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி வழிபாட்டு கூடங்கள். ஒரு பிரிவு இன்னொரு பிரிவு தொழும் இடத்தில் நுழையவே முடியாதாமே. ஒரே மதம் ஒரே தேவன் என்றால் எதற்கு வேறு வேறு பெயரில் பிரிவுகள். கமிஷன் வாங்கிக் கொண்டு மற்றவர்களை மதமாற்றம் செய்பவன் ஏஜன்டே தவிர உண்மையான மனிதன் கிடையாது.


chinnamanibalan
ஆக 06, 2025 13:25

ஓரிறை கொள்கை உடையோர், பல பிரிவுகளாக பிரிந்து, அடிதடியில் இறங்குவதை உலகெங்கும் காண முடிகிறது. இதில் ஓராயிரம் தெய்வ வழிபாட்டு முறைகள் உள்ள இந்து மதத்தில், ஓராயிரம் பிரிவுகள் உள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்து மதத்தில், மதம் என்ற பெயரில் அடிமைத்தனம் இல்லை. மேலும் இந்து மதத்தில் மத சுதந்திரம் உள்ளது போல் வேறு எந்த மதத்திலும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இங்குள்ள சிலருக்கு இது புரியாமல் போனதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.


Haja Kuthubdeen
ஆக 06, 2025 12:07

இவனுங்க பாட்டுக்கும் ஹிந்து மதத்தை எதிர்க்கிறோம்னு குண்டக்க மன்டக்கனு மேடையில் ஏதாவது பேசிட்டு போயிடுவானுவ.ஏச்சு பேச்சுக்களை முஸ்லிம்கள் வாங்கனும்.நாங்கபாட்டுக்கு கம்முனு கிடக்கோம்.


Kulandai kannan
ஆக 06, 2025 09:48

இவர்கள் போட்டி போட்டு மதம் மாற்றிய ஆப்பிரிக்காவில் உள்நாட்டு போர், பசி, பட்டினி, கொள்ளைநோய், பயங்கரவாதம் தலை விரித்தாடுகின்றன.


Valagam Raghunathan
ஆக 06, 2025 06:38

உங்களுக்கு கடவுள் இல்லையா, அல்லது ஹிந்து கடவுள் மட்டுமே இல்லையா? ஏன்டா, எல்லா மதத்திலும் கடவுள் உண்டு. கிறித்தவ, முஸ்லிம் கடவுளை வணங்க சொல்கிறாய்? உன் சொரியன், அ சோறு வழி அதுதான்


Padmasridharan
ஆக 06, 2025 06:30

எத்தனை பேர் முழுமனதாக கிறிஸ்துவத்துக்கு மாறி இருக்கிறார்கள் சாமி. ஞாயிறு, பாடும் இசைக்கருவியின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டும், இந்த மதத்தில் இருந்தால் கல்வி , வேலை சலுகைகள் கிடைக்குமென்றும் மாறி இருப்பவர்கள் நிறைய பேர். இது அவரவர்களுக்கே தெரியும். அங்கும் வெவ்வேறு கிளைகள் உள்ளன. தாய் மேரியை, பிள்ளை ஏசுவை பிரித்து வைத்து வணங்குபவர்கள். இருவரும் ஒரு குடும்பத்து நபர்கள் இல்லையோ. இஸ்லாமை வழிபடும் ஆணாதிக்க தேசத்தில் பணம் தருகிறேன் மாறிவிடு என்று சொள்னவர்களுமுண்டு, .


D Natarajan
ஆக 06, 2025 06:14

கிருத்துவத்தில், இஸ்லாமில் பிரிவுகளே இல்லையா . இவனை கைது செய்ய வாய்ப்பில்லை . இந்த அரசு இவனுக்கு விருது கொடுத்து கவுரவிக்கும்


A viswanathan
ஆக 06, 2025 05:12

அப்போ இவன் அவர் மகனா.